என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்குப் பதிவு"
- விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
- மனிதாபிமானமற்ற செயலாகும்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தன்று தனது நாயை ஸ்கூட்டரில் இரும்பு சங்கிலியால் கட்டி சாலை வழியாக ஷிர்வா என்ற பகுதிக்கு சுமார் 6 கி.மீ. தூரம் இழுத்துச் சென்றார்.
இதை அந்த வழியாக பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து மொபட்டில் நாயை கட்டி இழுத்து சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து போலீசார் வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதன் அடிப்படையில் நாயை மொபட்டில் கட்டி இழுத்துச் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் கொம்புகுடேவை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதுகுறித்து உடுப்பி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் அருண் கூறியதாவது:-
நாயை மொபட்டில் கட்டி இழுத்துச் சென்றது தொடர்பாக தீவிர விசாரணை செய்து சம்மந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்.
மேலும் சிலர் நாயை இழுத்துச் சென்றபோது இறந்துவிட்டதாகவும், சிலர் இறந்த பின்புதான் அந்த நாயை இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர். எனவே அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதுகுறித்து பிராணிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த மஞ்சுளா கரகேரா கூறும்போது, `இந்த சம்பவம் ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். நாயை இழுத்து சென்ற நபர் ஹெல்மெட் அணியாமல் மிகவும் தைரியமாக இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளார். அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- பட்டாசுகள் பறிமுதல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி அருகே மேட்டமலை வாடியூர் ரோட்டில் உள்ள பட்டாசு கடை ஒன்றின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அந்த பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி வி.கே.எஸ்.தெருவை சேர்ந்த விஜயன் (38), ஜெனார்தனன் (42) ஆகியோரை கைது செய்தனர். வெம்பக்கோட்டை பகுதியில் வங்கி அருகே தகர செட்டு ஒன்றில் 3 அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் வைத்திருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து பாண்டியராஜ் (33) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
- மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாமக்கல்:
காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆய்வு
காந்திஜெயந்தியை முன்னிட்டு இவ்விதிமுறைகள் முைறயாக பின்பற்றப்படுகிறதா? என்பது தொடர்பாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் திருநந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி ஓட்டல்கள், வாகன பழுது பார்க்கும் பட்டறைகள், கடைகள் உள்ளிட்ட மொத்தம் 82 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 நிறுவனத்தினர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- பயணிகளை ஏற்றிச் செல்வதில் தகராறு
- வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் காமரா ஜபுரம் மர்ச்சினிவிளை புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் சகாயஜோஸ் (வயது 24), மினி பஸ் கண்டக்டர்.
இவர் வடசேரி பஸ்நிலை யத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்த போது அங்கு வந்த மற்றொரு மினி பஸ்சின் கண்டக்டர் மற்றும் உரிமையாளர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதுபற்றி வடசேரி போலீசில் சகாய ஜோஸ் புகார் செய்தார். அதில் சம்பவத்தன்று தான் பணியில் இருந்து பயணிகளை ஏற்றிய போது, அங்கு மற்றொரு மினிபஸ்சின் உரிமையாளர் கோவிந்தன், கண்டக்டர் ஆஸ்வின் ஜெனிஸ் சாமுவேல் ஆகியோர் வந்தனர்.
அவர்கள் என்னிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆஸ்வின் ஜெனிஸ் சாமுவேல், கொலை மிரட்டலும் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகாலட்சுமி கணவருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தர்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் நகரில் கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம், வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் இருவர் தாலி செயினை பறித்து சென்றனர். கடலூர் மாவட்டம் கனகசபைநகர், தில்லை நடராஜர் சாலையைச் சேர்ந்த கணேஷ். இவரது மனைவி மகாலட்சுமி (50). இவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தர். மோட்டார் சைக்கிள் கனகசபைநகர் 4-வது குறுக்குத் தெருவில் சென்ற போது, இவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் மகாலட்சுமி அணிந்திருந்த சுமார் 10 பவுன் மதிப்புள்ள தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவக்குமார் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே துணிஞ்சி ரமேடு பெரியார்தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (50). இவர் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் இரும்பு மேஜையின் டிராவை உடைத்து உள்ளே இருந்த ரூ.37,490 ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவக்குமார் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த 10-ந்தேதி வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை
- வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் ஆதிதிராவி டர் காலனியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 43). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10-ந்தேதி வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது மனைவி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன நவநீத கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
- சேலத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.
- திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி, வேலு புதுத் தெரு 1- வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 19). மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளி. நேற்று வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்டதை அடுத்து அங்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் திருடிக் கொண்டு ஓட்டிச் சென்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகநாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் திருடன் , திருடன் என சத்தம் போட்டுக் கொண்டே அவரை துரத்திச் சென்றனர் . இருந்தாலும் அந்த நபர் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் மோட்டார் சைக்கிளை திருடியது மூணாங்கரடு செல்லக்குட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த சுண்ணாம்பு குணசேகரன் (25) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
திருப்பதி
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம்.
இந்த நிலையில் கடந்த வாரம் இளம் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்தார்.
இதனை அறிந்த வெங்கட்ராம் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி இளம் பெண்ணே பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.
இதற்கு மாற்றுத்திறனாளி பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை சரமாரியாக தாக்கி காலை உடைத்தார். மாற்றுத்திறனாளி பெண் வலியால் அலறி கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்தபோது வெங்கட்ராம் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்து படுகாயம் அடைந்த மகளை மீட்டு சர்வஜனா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் நந்தியாலா போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
- பொது மக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர்.
கோவை:
கோவை வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.
சம்பவத்தன்று இவர் வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் குளியல் அறையின் அருகில் இருந்து ஓடுவதை பார்த்தனர்.
உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை துரத்தி மடக்கி பிடித்தனர். அவர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து பேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் காளம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் (29) என்பதும், பிளம்பராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் ராஜேந்திரகுமார் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர். பொது மக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை சுண்டக்காமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கவுசல்யா தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
- கடந்த 20-ந் தேதி, வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
புதுச்சத்திரம் அருகே உள்ள தீர்த்தனகிரியை சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி விஜயா. இவர்களது மகள் கவுசல்யா, (வயது 24) இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவக்கும், கடந்த3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் திருப்பூரில் வேலை செய்து வருவதால், கவுசல்யா தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 20-ந் தேதி, வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜயாஅளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- உடல்நலக் குறைவுடன் வீட்டில் இருந்த சுலோசனா, நேற்று மாலை வீட்டில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளக்கை தட்டி விட்டுள்ளார்.
- திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி ;
திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி காலனி காட்டாத்துரை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மனைவி சுலோ சனா (வயது 65). உடல்நலக் குறைவுடன் வீட்டில் இருந்த சுலோசனா, நேற்று மாலை வீட்டில் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த விளக்கை தட்டி விட்டுள்ளார். அப்போது விளக்கு தீ, சுலோசனா உடையில் பிடித்தது. இதில் அவரும் தீயில் கருகினார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடல் கருகிய சுலோசனாவை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுலோசனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜு புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்