search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள பஸ்"

    • பேருந்தில் இருந்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல போதிய நேரம் இல்லாததால் அப்பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
    • சிகிச்சையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    திருச்சூர் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும், சம்பவம் குறித்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருந்த போதிலும் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், பேருந்தில் இருந்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல போதிய நேரம் இல்லாததால் அப்பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் பேருந்துக்குள் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் பேருந்து நிற்கும் இடத்திற்கே கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சிகிச்சையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தையும், மருத்துவர்கள், செவிலியர்களின் பணியையும் பாராட்டி வருகின்றனர்.



    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • திற்பரப்பு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த காலம் தொட்டு திருவனந்தபுரத்தில் இருந்து குமரிமாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் திற்பரப்பு ஆகிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதமாக 2 கேரளா பஸ் இயக்கப்பட்டு வந்தன. இது தம்பானுரில் இருந்து நெய்யாற்றின்கரை, பாற சாலை, களியக்காவிளை, மார்த்தாண்டம், திருவட் டார், குலசேகரம், வழி யாக திற்பரப்பு மற்றும் பேச்சிப்பாறைக்கு இயக் கப்பட்டது கொரோனா கால கட்டத்தில் நிறுத்தப் பட்டன.

    அதன் பின்பு கேரளா பஸ்கள் திருவனந்த புரத்தில் இருந்து தமிழக எல்லையான குமரி மாவட்டம் மற்றும் நாகர்கோவிலுக்கும் படி படியாக இயங்கியது. ஆனால் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கேரளா பஸ் திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய இடங்களுக்கு இதுவரை இயக்கப்படவில்லை.

    மேலும் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான திற்பரப்பு பகுதிக்கு கேரளாவிலிருந்து தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக திற்பரப்பு செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பிறகு தினசரி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

    எனவே திருவனந்த புரத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த திற்பரப்பு, பேச்சிப் பாறை உள்ளிட்ட பகுதி களுக்கு கேரளா அரசு பஸ்சை அதே வழி தடத்தில் மீண்டும் திருவட்டார் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

    ×