search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைர கம்மல்"

    • கிரீடம், வைர கம்மல் காணிக்கை.
    • வருகிற 6-ந்தேதி அணிவிக்கப்பட உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அன்னவரத்தில் பிரசித்தி பெற்ற சத்யதேவர், அனந்த லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு கச்சபுரத்தை சேர்ந்த சத்திய பிரசாத் அவரது மனைவி சூர்யா கலா ரூ.1½ கோடி மதிப்பில் தங்க கிரீடத்தில் 130 கேரட் வைரம் பதித்த கிரீடம், வைரக் கம்மல் காணிக்கையாக வழங்கினா்.

    இந்த வைர கிரீடம் சத்ய தேவர் பிறந்த நட்சத்திரமான மகர நட்சத்திரத்தில் வருகிற 6-ந் தேதி அனந்த லட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அணிவிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பூஜை அறையில் வைத்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தபோது வைரக் கம்மலை காணாமல் கல்பனா திடுக்கிட்டார்.
    • பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் போட்டது தெரியவந்தது.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலமநேர் ரோடு அம்பேத்கர் சிலை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கல்பனா. இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டில் நோன்பு இருந்து வழிபாடு நடத்தினார்.

    அப்போது பூஜையில் வீட்டில் உள்ள நகைகளை வைத்துள்ளார். இதில் ஒரு ஜோடி வைர கம்மலை வைத்து பூஜை செய்தார்.

    பூஜைக்கு பின் இன்று காலை பூஜை அறையை சுத்தம் செய்தபோது வாடி இருந்த பூக்கள் மற்றும் பூஜையிலிருந்த பொருட்களை சேகரித்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு காலையில் தனது வீட்டுக்கு அருகில் இருக்கிற குப்பை சேகரிக்கும் பகுதியில் போட்டுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து பூஜை அறையில் வைத்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தபோது வைரக் கம்மலை காணாமல் திடுக்கிட்டார்.

    அப்போது பூஜை அறையை சுத்தம் செய்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை சேகரிக்கும் இடத்தில் போட்டது தெரியவந்தது.

    உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனால் பதறி அடித்துக் கொண்டு கல்பனா உடனடியாக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் உடனடியாக அப்பகுதி தூய்மை பணியாளர்களை தொடர்புகொண்டு குப்பைகளை சேகரித்த வாகனம் எங்கே இருக்கிறது என கேட்டுள்ளார். குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    உடனடியாக அந்த குப்பை வண்டியை குப்பைகள் சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு வருமாறு தெரிவித்தார்.

    இதனையடுத்து அங்கு சம்பவ இடத்திற்கு நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்றனர்.

    அந்த குப்பை வண்டி உடனடியாக அங்கு கொண்டுவரப்பட்டது. அங்கு இருந்த குப்பைகளை கீழே கொட்டி ஒவ்வொரு பிளாஸ்டிக் பைகளாக பார்த்தனர்.

    அப்போது கல்பனா தன்னுடைய வீட்டிலிருந்து கொட்டிய பிளாஸ்டிக் பைகளை அடையாளம் காட்டினார். அதனை எடுத்து கீழே கொட்டி பார்த்தபோது வைரக்கம்மல்கள் இரண்டும் அதிலிருந்தது. அதனை நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் கல்பனாவிடம் வழங்கினார்.

    சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக குப்பைகளை கிளறி அதிலிருந்து வைரக்கம்மல்களை பெற்றுத் தந்த நகர மன்ற தலைவருக்கு கல்பனா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    ×