என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீபாவளி சீட்டு"
- அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
- தீபாவளி சீட்டு நடத்தி மோசடி
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் காஞ்சிபுரம் சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் கிளைகள் ஆரணி மற்றும் வந்தவாசியில் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர்.
இதில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள தருவதாக கூறி இருந்தனர். இதனால் வந்தவாசி, ஆரணி, செய்யாறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் சீட்டு கட்டினர். சீட்டு முடிந்ததால் பொருட்களை வாங்கு வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் நிதி நிறுவன உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டனர்.
இதற்கு உரிமையாளர் பொருட்களை தருவதாக கூறி பணம் கட்டியவர்களை அலைக்கழித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் செய்யாறில் உள்ள தலைமை நிதி நிறுவனத்திற்கு ஆரணி, வந்தவாசி, செய்யாறை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தனர். அப்போது அந்த நிதி நிறுவனம் பூட்ட பட்டு இருந்தது.
அள்ளி சென்றனர்
இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சிலர் பீரோ உள்ளிட்ட பொருட்களை பைக் மற்றும் வாகனங்களில் எடுத்து சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இவர்களுக்கு தீபாவளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர்.
- கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இ
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 51). இவரது மகன் அந்தோணி செல்வராஜ் (32). இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் இவர்களிடம் தீபாவளி சீட்டு கட்டினர். இவர்களுக்கு தீபா வளிக்கு தேவையான பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படுமென கூறியிருந்தனர். இதனை நம்பி அதே ஊரைச் சேர்ந்த பீட்டர் பவுல் (61), அவரது அண்ணன் ஆரோன் (65) ஆகியோர் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். இதற்கான பொருட்களையோ, பணத்தையோ மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் தரவில்லை.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பீட்டர் பவுல், ஆரோன் ஆகியோர் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, தீபாவளி சீட்டு பிடித்தவர்கள் ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்து 500 ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மரியதாஸ், அந்தோணி செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய எலவனா சூர்கோட்டை போலீ சாருக்கு பரிந்துரைக்கப் பட்டது. அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அந்தோணி செல்வராஜை கைது செய்தனர். தலை மறைவாக உள்ள மரிய தாசை போலீசார் தேடி வருகின்றனர்.
- சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என கூறியுள்ளார்.
- தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மாலா என்கிற பத்மினி (வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த அல்லி (வயது 35) என்ற பெண்ணிடம் தீபாவளி சீட்டு பிடித்து வருகின்றேன். என்னிடம் சீட்டு பணம் கட்டினால் நீங்கள் பணத்தை சேர்த்து வீடு வாங்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அல்லி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பத்மினி என்கிற மாலாவிடம் கடந்த 2021 முதல் 2022 வரை தீபாவளி சீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி வந்தனர்.
இந்த நிலையில் பணம் கட்டிய பெண்கள் தங்கள் பணத்தை மாலா என்கிற பத்மினியிடம் கேட்டு வந்தனர். இதற்கு பத்மினி சரியான முறையில் பதில் அளிக்காமல் பணம் தராமல் ஏமாற்றிக் வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏமாந்த பெண்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி மற்றும் போலீசார் புதுப்பாளையம் பகுதியில் இருந்த பத்மினி என்கிற மாலாவை அதிரடியாக கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நம்பிக்கையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டு சேர்ந்துள்ளனர்.
- கடந்த தீபாவளி பண்டிகைக்கு பணத்தை தருவதாக கூறிய குமார் திடீரென குடும்பத்தோடு தலைமறைவானார்.
திருப்பூர்:
திருப்பூர் செரங்காடு பகுதியில் கடந்த 15 வருடங்களாக தங்கி மளிகை கடை நடத்தி வந்தவர் குமார். இவர் அப்பகுதி பொதுமக்களிடம் மாத மற்றும் வார தவணை அடிப்படையில் பலகார சீட்டு நடத்தி வந்தார்.
நம்பிக்கையின் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வார மற்றும் மாத தவணையில் பலகார சீட்டு சேர்ந்துள்ளனர் . வாரம் தோறும் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தவணைத் தொகை கட்டி வந்தனர். குமாரிடம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ரூ.2 கோடி வரை பணம் கட்டியுள்ளனர். இந்தநிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு பணத்தை தருவதாக கூறிய குமார் திடீரென குடும்பத்தோடு தலைமறைவானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் நல்லூர் போலீசார் தலைமறைவான குமாரை தேடிவந்தனர். அப்போது குமார் குடும்பத்துடன் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமார் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார்.
- தீபாவளிபண்டிகைக்கு முன்பு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம்,பாரதிநகர் பகுதியை 200-க்கும் மேற்பட்டவர்கள் புதூர் பிரிவில் மளிகைகடை வைத்து நடத்தி வந்த குமார் என்பவரிடம் பலகாரசீட்டுக்கு பணம் செலுத்தி வந்துள்ளனர். அவர் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்தார். இதனால் நம்பிக்கையின் அடிப்படையில் அவரிடம் பணம் செலுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது முதிர்வு தொகையை அவர் கொடுக்க வேண்டும். ஆனால் தீபாவளிபண்டிகைக்கு முன்பு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து தங்களிடம் மோசடி செய்து தலைமறைவான குமாரை கைது செய்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து நேற்று மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை குமாரின் வீட்டு முன்பு முற்றுகையிட்டனர். மேலும் தங்களது பணத்தை போலீசார் மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்