என் மலர்
நீங்கள் தேடியது "இலவச திருமணம்"
- பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் சார்பில் ஏழை எளிய இந்து மக்களின் நலனுக்காக 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பவானி:
தமிழக முதல்- அமைச்சரின் வழிகாட்டு தலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் சார்பில் ஏழை எளிய இந்து மக்களின் நலனுக்காக வரும் டிசம்பர் மாதம் 4-ந் தேதி 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலகத்தை நேரில் அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் கோவிலின் பல்வேறு பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்து அறநிலைத்துறை சார்பில் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் நடத்தி வைக்கப்படும் 5 ஜோடிகளுக்கு திருமாங்கல்யம் 2 கிராம் தங்கம் ரூ.10.000, மணமகன் ஆடை ரூ.1000, மணமகள் ஆடை ரூ. 2000, மணமகன் மற்றும் மணமகள் உடன் 20 நபர்களுக்கு விருந்து ரூ.2000, பூ மாலை ரூ.1000, பாத்திரங்கள் ரூ.3000, இதர செலவு ரூ. 1000 என ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் ஒவ்வொரு ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் அதிக கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
- குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசு, மாநில அரசு எவ்வளவோ செலவு செய்து நிதியை ஒதுக்கி பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 217 ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடந்தது.
சென்னையில் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் 47 கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டுத் தந்திருக்கிறோம். மேலும் பல கோவில்களிலும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம். பெண் ஒருவரை நியமித்திருக்கிறோம். கோயில் பொது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய வரலாறு.
எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கக்கூடிய வகையிலே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனங்களைச் செய்து முடித்திருக்கிறோம். சமத்துவத்தை விரும்பாத சில சக்திகளின் மூலமாக, எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தையும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இத்தனையும், இதற்கு மேலாக இன்னும் பல இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த ஒரு துறையில் மட்டும் செய்யப்பட்டிருக்கக்கூடிய சாதனைகள். அதனால்தான் இன்றைக்கு அந்தத் துறையினுடைய அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபுவை இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, எல்லா நிகழ்ச்சிகளிலும், செயல்பாபு, செயல்பாபு என்று நாம் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை அவர்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதத்தை வைத்து நம் மீது இன்றைக்கு பல பழிகளை, குற்றங்களை, குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், எந்த ஆதாரமும் கிடையாது. நம்மை பொறுத்தவரைக்கும் நாம் அண்ணா வழியில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணக்கூடியவர்கள் நாம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அந்த நிலையில் நாம் நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
அதனுடைய அடையாளம்தான் இன்று ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 31 இணையர்களுக்கு, மணவிழா நிகழ்ச்சியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். அறநிலையத்துறையின் சார்பில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்போடு, கட்டுப்பாட்டோடு, எழுச்சியோடு இங்கே நடந்திருக்கிறது. இந்த 31 பேர் மட்டுமல்ல, இன்றைக்கு 217 இணையர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் சார்பில் மணவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் மறந்துவிடக்கூடாது மன்னராட்சிக் காலமாக இருந்தாலும் சரி, மக்களாட்சிக் காலமாக இருந்தாலும் சரி, அது கோவில்கள் என்பது மக்களுக்காகத்தான். அது எந்த ஆட்சியாக இருந்தாலும் கோயில்கள் என்பது மக்களுக்காககத்தான். கோவில்கள் ஒரு சிலருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நிலையை மாற்றத்தான் நீதிக்கட்சிக் காலத்தில் இந்தத் துறை உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிக கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அந்த குட முழுக்கு யாருடைய ஆட்சி காலத்தில் அதிகமாக செய்யப்பட்டது என்றால் தலைவர் கலைஞருடைய ஆட்சி காலத்தில்தான் அதிகம் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.
ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை நம்முடைய முதல்வராக இருந்த கலைஞருக்குத்தான் உண்டு.
பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது கழக ஆட்சி காலத்தில்தான். அந்த வழியில்தான் இப்போது நம்முடைய அரசு சேகர்பாபு பொறுப்பேற்றிருக்கக்கூடிய இந்த துறையின் சார்பில் நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு தன்னுடைய சாதனையை செய்து கொண்டிருக்கிறது.
கோவில் சீரமைப்புப் பணிகளை இதுவரை இல்லாத அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அமைச்சர் ஒவ்வொரு கோயிலுக்கும் நேரடியாக போய்க்கொண்டிருக்கிறார். எப்படி போகிறார்? விமானத்தில் போனால்கூட இவ்வளவு வேகமாக போக முடியாது. அவர் இதற்காக ஸ்பெஷலாக விமானம் வைத்திருக்கிறாரா? என்று சந்தேகபடக்கூடிய அளவிற்கு, ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு, அதிசயப்படக்கூடிய அளவிற்கு மூன்று மணிக்கு விடியற்காலையில் எங்கேயாவது இருக்கிறார். இங்கே ஆறு மணிக்கு சென்னையில் வந்திருக்கிறார். ஆக அலுப்பில்லாமல், சலிப்பில்லாமல், அவர் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய பொறுப்பை நம்முடைய அரசுக்கு பெருமை தேடித் தரக்கூடிய வகையில் அவர் ஆற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக நான் அரசின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வாழ்த்தை, பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே, இது ஏதோ எங்களுக்கு புதுசல்ல, இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள். இன்றைக்கு ஆட்சி என்கின்ற அந்த அதிகாரம், மக்கள் நம்மிடத்தில் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, மக்களுடைய எதிர்பார்ப்பை ஏற்ற வகையில், அனைவருக்கு மான அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் தமிழ்நாட்டு மக்கள் ஐந்து முறை கலைஞர் கையில் ஆட்சியை ஒப்படைத்தார்கள். இந்த ஆட்சியை, 6-வது முறையாக அவருடைய மகன் இந்த ஸ்டாலின் இடத்தில், யாரிடத்தில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அவருடைய நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற வகையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.
நாம் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், வெற்றி என்ற அந்த செய்தி வந்தவுடனே, நாம் ஆட்சியில் அமரப் போவதற்கு முன்னாலேயே, தேர்தல் செய்திகள், வெற்றி நிலவரங்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தபோது நான் தலைவருடைய நினைவிடத்திற்கு சென்றிருந்த நேரத்தில் பத்திரிகை நிருபர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, என்னிடத்தில் கேள்வி கேட்ட நேரத்தில், ஒரே வரியில் சொன்னேன். இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்து, வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும், வாக்களிக்காதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு வாக்களிக்க தவறிவிட்டோம் என்ற வருத்தப்படக்கூடிய அளவிற்கு நம்முடைய ஆட்சி செயல்படும் என்று நான் அப்போதே நம்பிக்கையை தெரிவித்தேன். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றக்கூடிய வகையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.
இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் எல்லாம் நலமும் வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும், மண மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உங்கள் குழந்தைகள் ஒன்றோ, இரண்டோ நிறுத்தி கொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசு, மாநில அரசு எவ்வளவோ செலவு செய்து நிதியை ஒதுக்கி பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம். அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரச்சாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையை கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும், ஆக, சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்கின்ற இந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு, பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய், வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க, விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் சேகர்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் சந்திரமோகன், குமரகுருபரன், கண்ணன், அறங்காலர் குழுத்தலைவர் கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மணமகன்கள் மணமகள்களின் கால்களில் மெட்டி அணிவித்தனர்.
- அனைவருக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேஸ்திரி, வடை வழங்கப்பட்டது.
கோவை
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 217 ஏழை ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடைபெற்றது.
சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விழாவுக்கு தலைைம தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக கோவையிலும் திருமணம் நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 17 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமை தாங்கினார்.
திருமணவிழாவில் மணமக்கள் 17 ஜோடிகளும் மாநகராட்சி கலையரங்க மேடையில் மாலை அணிவித்து அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து அய்யர்கள் வேதமந்திரங்கள் ஒதி மணமகன்களிடம் தாலியை எடுத்து கொடுக்க, மணமகன்கள், மணமகள்களின் கழுத்தில் தாலியை கட்டினர்.
அப்போது விழாவில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட அனைவரும் அட்சதை தூவி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், மணமகன்கள் மணமகள்களின் கால்களில் மெட்டி அணிவித்தனர்.
திருமண விழாவில் பங்கேற்ற 17 திருமண ஜோடிகளுக்கும் தாய் வீட்டு சீதனமாக பீரோ, கட்டில், தலையணை, மெத்தை, வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது.
இதில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேஸ்திரி, வடை வழங்கப்பட்டது.
- திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் இன்று காலை 5 ஏழை திருமண ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோயில் உற்சவர் மண்டபத்தில் நடைபெற்றது.
- மணமக்களின் சார்பில் உறவினர்கள், திருப்போரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்போரூர்:
தமிழக அரசு உத்தரவின்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் இலவச திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் இன்று காலை 5 ஏழை திருமண ஜோடிகளுக்கு இலவச திருமணம் கோயில் உற்சவர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி, காஞ்சிபுரம் உதவி ஆணையர் பாரதிராஜா, கோயில் ஆய்வாளர்கள் மற்றும் கோயில் செயல் அலுவலர்கள், மணமக்களின் சார்பில் உறவினர்கள், திருப்போரூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருமண ஜோடிகளுக்கு கோயில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
- வேதமந்திரம் முழங்க, மங்கள இசையுடன் 8 திருமண ஜோடிகளும் மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
- எட்டு திருமண ஜோடிகளுக்கும் தலா 2 கிராம் மாங்கல்யம், மெட்டி, புத்தாடை, மணமாலை ஆகியன இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினர்.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தலங்களில் முதன்மையானதாகும். இக்கோவிலில் சுபமுகூர்த்த தினங்களில் 100 முதல் 300 வரையிலான திருமண விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கடலூர், விழுப்புரம், புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக திருவந்திபுரம் கோவிலில் திருமணம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று திருவந்திபுரம் தேவநாத சுவாமி தேவஸ்தானத்தில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்யப்பட்டது. கோவில் எதிரில் உள்ள மலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள்ளான முகூர்த்த நேரத்தில் திருமண விழா சிறப்பாக நடந்தது.
திருமணத்தையொட்டி மண்டபத்தில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. எட்டு திருமண ஜோடிகளும் அலங்கரிக்கப்பட்டு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
திருமண விழா இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் (பொறுப்பு) ஜோதி தலைமையிலும், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர்கள் வெங்கடகிருஷ்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் எட்டு திருமண ஜோடிகளுக்கும் தலா 2 கிராம் மாங்கல்யம், மெட்டி, புத்தாடை, மணமாலை ஆகியன இந்து சமய அறநிலையத்துறையினர் வழங்கினர்.
இதையடுத்து வேதமந்திரம் முழங்க, மங்கள இசையுடன் 8 திருமண ஜோடிகளும் மணமகள் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை கட்டி திருமணம் செய்து கொண்டனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் திருமண ஜோடிகளின் உறவினர்கள் மணமகிழ்வுடன் அச்சதை தூவி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருமணம் முடிந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எட்டு திருமண ஜோடிகளுக்கும் காமாட்சி அம்மன் விளக்கு, பித்தளை தாம்புலத்தட்டு, 2 குத்துவிளக்கு, பஞ்சபாத்திரம், சில்வர் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தலையணை, பெட்ஷீட் ஆகியனவற்றை சீர்வரிசையாக வழங்கினர். இதனை மணமக்கள் மணமகிழ்வுடன் பெற்றுக் கொண்டனர்.
- திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- மணமக்களுக்கு கட்டில், மெத்தை, தலையணை, வெள்ளியில் மெட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும், ஒரு மாத மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர்:
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று இலவச திருமணம் நடைபெற்றது.
ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில், திருக்கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான செலவுகளையும் திருக்கோவில் நிர்வாகமே ஏற்கும் என்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார்.
அதன்படி, ஒரு இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மண்டலங்களில் 500 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, இன்று (4-ந்தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலும் திருமணங்கள் நடைபெற்றன. சென்னை இணைய ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்டோருக்கான திருமண விழா இன்று நடைபெற்றது.
அந்த வகையில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக திருமண ஜோடிகள் காலையிலேயே கோவில் மண்டபத்திற்கு வந்திருந்தனர். மணமகன் பட்டு வேட்டி, சட்டையிலும், மணமகள் பட்டுச்சேலையிலும் அமர வைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு தங்கம் பூட்டிய திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார். இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்களுக்கு கட்டில், மெத்தை, தலையணை, வெள்ளியில் மெட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும், ஒரு மாத மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டது. திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்கள் சுமார் 500 பேருக்கு நேற்று இரவு, இன்று காலை சிற்றுண்டியும், திருமணம் முடிந்ததும் பகல் உணவாக விருந்தும் வழங்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டத்தில் 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் பெரியகருப்பன் நடத்தி வைத்தார்.
- மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
சிவகங்கை
இந்து சமய அறநிலை யத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி மற்றும் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில், 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி பேசினார்.
ரூ.4.97 லட்சம் மதிப்பீட்டில் 13 ஜோடிகளுக்கு திரு மாங்கல்யம், மணமகள் மற்றும் மணமகன் ஆகியவர்களுக்கான ஆடைகள், மணமக்களுக்கு மாலை, புஷ்பம், பாத்தி ரங்கள், பித்தளை குத்து விளக்கு, பாய், தலையணை, கேஸ் அடுப்பு உள்ளிட்ட சீர்வரிசைகள் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் கோவில் உபயதாரர்களின் பங்களிப்புடன் வழங்கப்படது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர்கள் செல்வ ராஜ் (சிவகங்கை), ஞான சேகரன் (ராமநாதபுரம்) வில்வமூர்த்தி (மடப்புரம்), திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், கோவில் அறங்காவலர்கள் லெட்சுமணன், சபா அருணா சலம், சம்பத், ராஜா சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தருமபுரி மாவட்டத்தில் அருகில் உள்ள முக்கிய கோவில்களில், அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.
- இரு வீட்டினரின் பெற்றோர், மணமக்கள், அவசியம் வர வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 மணமக்களுக்கு வரும் 23.2.2023 அன்று இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அருகில் உள்ள முக்கிய கோவில்களில், அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அப்போது இரு வீட்டினரின் பெற்றோர், மணமக்கள், அவசியம் வர வேண்டும்.
விண்ணப்பத்தில் மணமகள், மணமகன் புகைப்படம், பிறந்த தேதி, வயது, தொழில், ஜாதி உள்ளிட்ட இருவர் பற்றிய முழு விபரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். இருவரும் இந்துவாக இருப்பதோடு, முதல் திருமணமாகவும் இருக்க வேண்டும். திருமணத்தின்போது அனைத்து ஆவண அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
மணமகள் அல்லது மணமகன் பெற்றோருடன் கூடிய புகைப்படம் திருமண படிவத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டும். திருமணத்துக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணம், எக்காரணம் கொண்டும் திருப்பி தர இயலாது.
அதேபோல் திருமணம் தொடர்பான விபரம், நகல்கள், மணமக்கள் தவிர வேறு யாருக்கும், தனிப்பட்ட முறையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், வேறு எந்த சட்டப்பிரிவின் மூலமும் வழங்கப்படாது என்பன உள்ளிட்ட 13 நிபந்தனைகளுடன் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்.
மேலும் மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 5 பவுன் தங்க நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.
- 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மா்க்கஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விழாவில் 37 இந்து ஜோடிகளுக்கு அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும், 3 கிறிஸ்தவ ஜோடிகளுக்கு தேவாலயத்திலும், 360 இஸ்லாமிய ஜோடிகளுக்கு அவா்களது முறைப்படியும் திருமணங்கள் நடைபெற்றன.திருமணத்துக்கு சீா்வரிசையாக ஜோடிகளுக்கு தலா 5 பவுன் தங்க நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவை பொன்மலை அப்துல் காதா் முஸ்லியாா் தொடங்கி வைத்தாா். சமஸ்தா தலைவா் சுலைமான் முஸ்லியாா், மா்க்கஸ் நிா்வாக அப்துல் சலாம் முஸ்லியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினா்.
- வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் நிதி மூலம் இலவச திருமணம் நடைபெற்றது.
- மணமக்களுக்கு கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலின் உபக்கோவில் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் நிதி மூலம் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்தீபன் ஆலோசனையின் பேரில், தூத்துக்குடி மண்டல இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் இலவச திருமணம் நடைபெற்றது. மேலும் மணமக்களுக்கு கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆழ்வார் திருநகரி நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், ஆழ்வை மத்திய ஒன்றிய மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், முன்னாள் நகர செயலாளர் முத்து ராமலிங்கம், கோவில் செயல் அலுவலர் அஜீத் மற்றும் கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
- திருமணத்திற்கு அரை பவுன் தங்க தாலியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேயர் சத்யா வழங்கினார்.
- கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ. 50,000- மதிப்புள்ள பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களையும் அவர் மணமக்களுக்கு வழங்கினார்.
ஓசூர்,
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகி யோரது உத்தரவிற்கிணங்க, ஓசூர் மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று இலவச திருமணம் நடத்தப்பட்டது.
ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டை சேர்ந்த ஹர்ஷிதா என்ற மணப்பெண்ணிற்கும், மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த விக்னேஷ் என்ற மணமகனுக்கும் கோவிலில் வைத்து மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணத்திற்கு அரை பவுன் தங்க தாலியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேயர் சத்யா வழங்கினார்.
மேலும் கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ. 50,000- மதிப்புள்ள பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களையும் அவர் மணமக்களுக்கு வழங்கினார்.
மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை மற்றும் பணியாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் ரவி, மாதேஸ்வரன், கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
- முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அரசு சார்பில் இலவசமாக திருமணம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இன்று தண்ட்லா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் மணப்பெண்களுக்கு மேக்கப் கிட் பரிசாக வழங்கப்பட்டது. அந்த மேக்கப் கிட்டில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்தன. இந்த சம்பவம் திருமண விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட மூத்த அதிகாரி ராவத் குற்றம்சாட்டினார். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை தந்திருக்கலாம் என்றும் கூறினார்.
'மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேக்கப் கிட் வழங்கப்படவில்லை. ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கிறோம். 6,000 ரூபாய் மதிப்புள்ள உணவு, தண்ணீர் மற்றும் ஒரு கூடாரத்தை வழங்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டுகளில் என்ன இருந்தது என எங்களுக்கு தெரியாது' என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.