என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குளவி கொட்டியது"
- குளவி கூட்டின் ஒரு பகுதி உடைந்து தஸ்வின் தலையில் விழுந்தது.
- கிருத்திகா, பழனிசாமி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர்:
வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம் கிராமம், முத்துமாரியம்மன் கோவில் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தொழிலாளி. இவரது மனைவி நித்யா. இவர்களது மகன் தஸ்வின்(8), மகள் கிருத்திகா (4). இவர்களில் தஸ்வின் கீரப்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் ஆனந்தனும், அவரது மனைவி நித்யாவும் வேலை சம்பந்தமாக வெளியில் சென்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த தஸ்வினும், அவரது தங்கை கிருத்திகாவும் வீட்டின் வெளியே விளையாடினர். அப்போது அங்கிருந்த பனைமரத்தில் குளவிகள் பெரிய கூடு கட்டி இருந்தது.
அந்த கூட்டின் மீது தஸ்வின் கல் வீசியதாக தெரிகிறது. மேலும் கம்பாலும் தட்டிவிட்டு விளையாடினர்.
இதில் குளவி கூட்டின் ஒரு பகுதி உடைந்து தஸ்வின் தலையில் விழுந்தது. அப்போது ஏராளமான விஷ குளவிகள் பறந்து வந்து தஸ்வின் மற்றும் அருகில் நின்று கொண்டு இருந்த கிருத்திகாவை தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் கொட்டின. இதில் அவர்கள் இருவரும் அலறி துடித்தனர்.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ஆனந்தனின் தந்தையான பழனிசாமியும் அங்கு வந்தார். அவரையும் குளவிகள் கொட்டின.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் குளவிகள் கொட்டியதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தஸ்வின், அவரது தங்கை கிருத்திகா, தாத்தா பழனிசாமி ஆகிய 3 பேரையும் மீட்டு ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தஸ்வின் பரிதாபமாக இறந்தான். கிருத்திகா, பழனிசாமி ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 நபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
- திடீரென்று குளவிகள் நடந்து சென்றவர்களை சரமாரியாக கடித்தது.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் சித்தரசூர் ரயில் நிலையம் அருகே அதே பகுதியை சேர்ந்த 5 நபர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குளவிகள் நடந்து சென்றவர்களை சரமாரியாக கடித்தது. இதில் ஐந்து நபர்கள் வலி தாங்காமல் கதறி துடித்தனர். இதனை தொடர்ந்து 5 பேரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்