என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு ஓட்டம்"
- கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- விழிப்புணர்வு ஓட்டமானது செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.
நாகர்கோவில் :
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி 1-1-2023-ந்தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இளம் வாக்காளர்களை அதிக அளவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான தேர்தல் விழிப்புணர்வு ஓட்டம் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அரவிந்த் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஓட்டமானது செட்டிக்குளம் வழியாக வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெற்றது. விழிப்புணர்வு ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜேஷ், தேர்தல் தாசில்தார் சுசீலா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் “ஒற்றுமை தினம்” கொண்டாடப்பட்டது.
- இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 பேர், 5 கி.மீ. கல்லூரி வளாகத்தை சுற்றி ஓடினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண். 209 சார்பில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி "ஒற்றுமை தினம்" கொண்டாடப்பட்டது.
முதல்வர் பாலமுருகன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், நாட்டு நலப்பணித்திட்டம் பற்றியும், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பற்றியும் எடுத்துக்கூறினார்.
அதன் பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒற்றுமை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் முதல்வர் கொடியசைத்து விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 பேர், 5 கி.மீ. கல்லூரி வளாகத்தை சுற்றி ஓடினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்