என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 282138"
- 5 மணி அளவில் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார்.
- சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
திருச்செந்தூர்:
மத்திய இணை மந்திரி எல். முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நெல்லை வந்தார்.
இந்நிலையில் எல். முருகன் இன்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அதிகாலை 5 மணிக்கு அவர் கோவிலுக்கு சென்று சத்ரு சம்கார மூர்த்தி சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வெளிபிரகாரத்தில் ஆனந்த விலாசம் மண்டபத்தில் நடைபெற்ற சத்ரு சம்கார மூர்த்தி சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் மீண்டும் கோவிலுக்குள் சென்று சத்ரு சம்கார மூர்த்தி சாமி சன்னதியில் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் சுவாமி மூலவர், சண்முகரை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், சிறுபான்மை பிரிவு அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளர் வினோத், நகர செயலாளர் நவ மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பக்தர்களின் காணிக்கை, உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது.
- வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல் திருச்செந்தூர் கோவிலில் மாடுகளை காணவில்லை என அண்ணாமலை கூறி உள்ளார்
சென்னை:
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது. கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது. புராதன கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது. பூஜை புனஷ்காரங்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வருகைகள் தவிர்க்கப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் நமக்கு எல்லாம் தெரியும் எனது உறவினர்கள், உங்கள் உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் கடவுளுக்கு வேண்டிக்கொண்டு பசு மாட்டை கொடுப்போம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த தணிக்கை அறிக்கையில் ஒரு பத்தியை படித்து பார்த்தால் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை.
அதாவது பக்தர்கள் மாட்டை கொடுத்த பதிவுகள் உள்ளது. யார் ஏலம் விட்டது? மாடுகளை சைடில் திருடி உறவினர், திமுக கிளைச்செயலாளருக்கெல்லாம் கொடுத்து விற்றுவிட்டீர்களா? 5 ஆயிரத்து 309 மாடுகளை திருச்செந்தூர் கோவிலில் நடத்தப்பட்ட தணிக்கையில் காணவில்லை. 'வடிவேலு கிணற்றை காணோம் என்று சொன்னது போல்' திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாட்டை காணவில்லை. அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையை வைத்துக்கொண்டு வெள்ளை, காவி உடையுடன் அமைச்சர் காலை முதல் மாலை வரை சுற்றிக்கொண்டுள்ளார்?
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
- தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.
- திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
மதுரை:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அர்ச்சகரான சீதாராமன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட யூ-டியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரீகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றனர்.
பின்னர், திருச்செந்தூர் கோவிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து, மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கக்கூடாது.
கோவிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்த பின், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கோவிலின் உள்ளே செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.
இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்