என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில்வே ஊழியர்கள்"
- வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
- பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
ரெயில்வேயில் பாயின்ட்மேன் பணி என்பது அதிகாரி தரத்திலான பணி இல்லை என்றாலும், அது ரெயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். தண்டவாளத்தின் பாயின்டுகளை சரிபார்த்து ரெயிலின் பாதுகாப்பை உறுதி செய்வது இவர்களின் பணி.
இப்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு தண்டவாள பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. மத்தியபிரதேசத்தின் ஸ்லீமனாபாத், துண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சில இடங்களில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு வெள்ளம் தேங்கிக் கிடக்கிறது. பயணிகளை ஏற்றி வந்த ரெயில், தண்டவாளம் தெரியாததால் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடத்தில் பாயின்ட்மேன்கள் 3 பேர், ரெயில் முன்பாக தண்ணீரில் தண்டவாளத்தில் நடந்து சென்றபடி ரெயிலை, தங்களை பின்தொடர்ந்து அழைத்து செல்கிறார்கள்.
பஸ், லாரி போன்ற வாகனங்களுக்கு பின்னோக்கி செல்லும்போது உதவியாளர்கள், பின்புற சூழலை சரிபார்த்து வரலாம் வா... வரலாம் வா என்று சொல்லி அழைப்பதுபோல, பாயின்ட்மேன்கள் ரெயிலை அழைத்துச் செல்லும் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
- மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
- இவர்கள் 67 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் தூர இருப்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
புதுடெல்லி:
இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது ரெயில்வே துறை.
இந்திய ரெயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல மட்டும் 13 ஆயிரத்து 169 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதுபோல சரக்குகளை கையாள 8 ஆயிரத்து 479 சரக்கு ரெயில்கள் உள்ளது.
இவற்றை நிர்வகிக்க ரெயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளன. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 67 ஆயிரத்து 956 கிலோ மீட்டர் தூர இருப்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து இருந்தனர். கொரோனா பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் ஊழியர்களின் கோரிக்கை குறித்த முடிவுகள் தள்ளிபோனது.
தற்போது இக்கோரிக்கை குறித்து மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாக ரெயில்வே துறை மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரெயில்வே துறையின் ஊழியர்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு எடுத்துள்ளது. அதன்படி இத்துறையில் 7,8,9 ஆகிய நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்குரிய பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அவர்கள் குரூப் ஏ பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நடத்தப்படுவார்கள்.
மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நிதி அமைச்சகமும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
ரெயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்கப்படுவதன் மூலம் அவர்கள் பணி இன்னும் மேம்படும்.
உலகிலேயே சிறப்பாக செயல்படும் இந்திய ரெயில்வே துறை இதன்மூலம் இன்னும் மேம்படும். அவர்கள் தான் இத்துறையின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களின் சேவையை பெரிதும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு மூலம் ரெயில்வே ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்