என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "5 வயது சிறுவன்"
- விஜயநகர் காலனியில் வசித்து வருபவர் நவீன். பந்தல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது மகன் பிரகாஷ் கண்ணன் (வயது 5), குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான்.
- வேகமாக வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கத்தேரி பிரிவு சாலை அருகே உள்ள விஜயநகர் காலனியில் வசித்து வருபவர் நவீன். பந்தல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது மகன் பிரகாஷ் கண்ணன் (வயது 5), குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான்.
இந்த நிலையில், நேற்று மாலை சிறுவனின் தாத்தா கோவிந்தன், தாய் திவ்யா இருவரும் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது பிரகாஷ்கண்ணனை உட்கார வைத்துகொண்டு சேலம் - கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது.
இதனிடையே பலத்த காயமடைந்த 3 பேரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே மாணவன் பிரகாஷ் கண்ணன் உயிரிழந்தான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவிந்தன், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திவ்யா குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
- டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் உமா–மகேஷ்வரன். கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவரது மனைவி ஹேமா (22). இவர்களது மகன் தக்ஷன் (5). வீட்டிற்கு அருகில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான்.
தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவ த்தன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து தக்ஷனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்