search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோம்நாத்"

    • 100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன.
    • லேண்டர் "டீபூஸ்ட்" முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    பெங்களூரு:

    நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சந்திராயன்-3 விண்கலம் கடந்த 14-ந் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளை கடந்து சென்றுள்ள இந்த விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து வருகிற 23-ந் தேதி மாலை 5.47 மணி அளவில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 5-ந்தேதி மாலை 5 மணி அளவில் சந்திராயன்-3 விண்கலம் நிலவு பாதையில் இருந்து நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் லுனார் ஆர்பிட் இன்ஞக்சன் மூலம் நுழைந்தது.

    சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் அதிகபட்சமாக 18 ஆயிரம் கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இன்று முதல் நிலவின் சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணி தொடங்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    100 கிமீ தூரத்தை எட்டியபின், விண்கலத்தில் புரபல்சன் மற்றும் விக்ரம் என்ற லேண்டர் என 2 முக்கியப் பகுதிகள் உள்ளன. அந்த லேண்டரில்தான் ரோவர் கருவியும் அமைந்துள்ளது. தரையிறக்கத்தின் போது உந்துவிசை கருவியை யும், லேண்டரையும் தனியாக பிரிக்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்து, லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள். லேண்டரின் கீழே 4 குட்டி ராக்கெட்டுகள் உள்ளன. அந்த ராக்கெட்டுகளின் உதவியுடன், லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க வேண்டும். இது வெற்றிகரமாக நிகழ்ந்தால், சந்திராயன்-3 நிலவில் அதன் ஆராய்ச்சி தொடங்கியை தகவல்களை வழங்கும்.

    இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:-

    தற்போது விண்கலம் நிலவை நெருங்க 3 டி-ஆர்பிட்டிங் நிகழ்வுகள் உள்ளன. இன்றும், வருகிற 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அதன் சுற்றுப்பாதை சந்திரனில் இருந்து 100 கி.மீ. வரை குறைக்கப்படும். லேண்டர் ப்ரொபல்ஷன் மாட்யூல் பிரிப்புப் பயிற்சியானது, லேண்டர் "டீபூஸ்ட்" முடிந்தவுடன், பணியை எளிதாக்கும் ஒரு செயல்முறையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 23-ந் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும்.

    இந்த முறையும் விக்ரமில் உள்ள 2 என்ஜின்கள் வேலை செய்யவில்லை என்றாலும் அது இன்னும் தரையிறங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். எனவே இவை சரியாகச் செயல்படும் பட்சத்தில் விக்ரம் லேண்டர் பல தோல்விகளைச் சமாளிக்கும் வகையில் முழு வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது.

    விக்ரம் லேண்டரை சந்திரனில் செங்குத்தாக தரை இறக்குவது இஸ்ரோ குழுவின் முன் உள்ள மிகப்பெரிய சவால். ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் பிரிந்ததும், அது கிடைமட்டமாக நகரும். தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம், அது சந்திரனில் பாதுகாப்பாக தரையிறங்கு வதற்காக செங்குத்து நிலைப்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    சந்திராயன்-2 பணியின் போது, இஸ்ரோ தனது லேண்டரை நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறக்க தவறியது. எனவே இந்தமுறை இந்தப் பயிற்சி மிகவும் முக்கியமானது. கிடைமட்டத்தில் இருந்து செங்குத்து திசைக்கு மாற்றும் திறன் மிக நுட்பமானது. இங்குதான் கடந்த முறை பிரச்சினை ஏற்பட்டது.

    பயன்படுத்தப்படும் எரிபொருள் குறைவாக உள்ளதா, தொலைவு கணக்கீடுகள் சரியாக உள்ளதா மற்றும் அனைத்து வழிமுறைகளும் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதும் சவாலாக உள்ளது. எப்படி என்றாலும் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ குழு இந்த முறை செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.
    • மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.

    தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் ஐஐடியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துக் கொண்டார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன் என்று கூறினார்.

    சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.

    இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:-

    முதல் கட்டமாக சந்திரயான் -3ன் ஏவப்பட்டதை மிகவும் ரசித்தேன். அதே நேரத்தில் அவர் முழு தரவுகளையும் ஆராய்ந்து ராக்கெட் எவ்வளவு அழகாக இருந்தது.

    பொறியாளர் மற்றும் விஞ்ஞானி என்ற முறையில் எனக்கு ராக்கெட்டுகள் மீது பிரியம் உண்டு. ராக்கெட்டின் பிறப்பு, வளர்ச்சி, பிரச்சனைகள் ஆகியவற்றைப் பார்த்து, ராக்கெட்டை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன். வளர்ச்சி, அதன் உணர்ச்சிகள் மற்றும் அதன் இயக்கவியல் மற்றும் அதன் வாழ்க்கைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பது ஆகும்.

    கடந்த சந்திரயான் ராக்கெட்டில், கிட்டத்தட்ட 2,000 அளவீடுகள் இருந்தன. இறுதியாக அவை வரைபடங்கள் மற்றும் வளைவுகளாக நம்மிடம் வந்தன. ஒரு மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.

    அந்த வளைவுகளுடன் நாங்கள் ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளோம். வரைபடங்கள், மற்றும் ஏற்ற தாழ்வுகளைப் பார்ப்பதன் மூலம் அதன் வேகம் என்ன... எப்படிப் போகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு இயந்திரத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் வழங்கியுள்ளது.
    • மனிதர்கள் போன்ற பொம்மைகளை விண்வெளிக்கு அனுப்பி சோதனை.

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி வருகின்றன. அதில் ஒருபகுதியாக விண்வெளி குறித்து அறியப்படாத பல தகவல்களை சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கன்னியாகுமரியில் ஸ்பேஸ் சயன்ஸ் அன்டு டெக்னாலஜி பார்க் என்ற விண்வெளி ஆராய்ச்சி பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    கன்னியாகுமரி கோவளம் கடற்கரை சாலையில் சன்செட் பாயிண்ட் அருகே அதற்கான இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளி பூங்கா அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இஸ்ரோ உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரியில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக தமிழக அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் வழங்கியுள்ளது. விண்வெளி பூங்கா அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கும். விண்வெளி பயணம் மேற்கொள்வதற்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக சோதனை அடிப்படையில் மனிதர்கள் போன்ற பொம்மைகளை தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பப்படும். அதன்பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராக்கெட் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
    • சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்.

    இந்தியா-பூட்டான் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் உள்பட 9 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பி எஸ் எல் வி -சி 54 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

    செயற்கைகோள்கள் வெற்றிகரமாக அவற்றின் சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: 


    இறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள பூடான் செயற்கைகோள் இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். நேபாளம், பூட்டான், இலங்கை உட்பட 61 நாடுகளுடன் இணைந்து இந்திய விண்வெளித்துறை செயல்பட்டு வருகிறது.

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


    தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 24 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ராக்கெட் தளம் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×