search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 287121"

    • குடிநீர் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது.
    • தலைவர் கு.பாப்புகண்ணன் முன்னெச்சரிக்கையாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

     தாராபுரம்:

    கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி ஆறு வறண்டு போனது. அதனால் குடிநீர் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே தினசரி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி 30 வார்டுகளுக்கு தங்கு தடையின்றி தினசரி வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில தினங்களாக 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த 15 வார்டுகளுக்கு மறுநாளும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் குடிநீர் தேவையை போக்கும் வகையில் அமராவதி ஆற்றில் உள்ள கிணற்றை தூர்வார லாமா?அல்லது புதிய கிணற்றை அமைக்கலாமா? என்ற நோக்கில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் முன்னெச்சரிக்கையாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து அவர் கூறுகையில் "தென்–மேற்கு பருவ மழை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது. இவைதொடங்கினால் மட்டுமே அமராவதி அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. அப்போது தான் நகராட்சி நிர்வாகம் தங்கு தடையின்றி வழக்கம் போல தண்ணீர் வினியோகம் செய்ய முடியும். அதுவரை நகராட்சி நிர்வாகம் வினியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

    • குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.
    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.

    இதனை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் நாளை (திங்கள் கிழமை ) முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    எனவே 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை 3 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.

    பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×