search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 288188"

    • நாடுமுழுவதும் நீட் தேர்வை முறையாக நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
    • மாணவர்கள் https://neet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

    சென்னை:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் 546 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாடுகளிலும் இத்தேர்வு நடைபெறுகிறது.

    நீட் தேர்வு வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணிவரை நடைபெறுகிறது.

    இத்தேர்வை 20 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்துள்ளனர். நாடுமுழுவதும் நீட் தேர்வை முறையாக நடத்தி முடிக்க தேசிய தேர்வு முகமை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    இந்நிலையில் நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு (ஹால்டிக்கெட்) இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே மாணவர்கள் தேர்வு எழுதக் கூடிய நகரங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.

    மாணவர்கள் https://neet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணைய தளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

    பதிவிறக்கம் செய்யப் பட்ட நுழைவு சீட்டுடன் ஆதார் கார்டு, பாஸ்வேர்டு, டிரைவிங் லைசென்சு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    மாணவர்கள் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் எண் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழி களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 1.20 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

    தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, மதுரை, கடலூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர், விழுப் புரம், ஊட்டி உள்ளிட்ட 31 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

    • 30 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
    • ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 106 தேர்வு மையங்களில் 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தனித்தேர்வர்களாக 1,484 பேர் இத்தேர்வை எதிர்கொள்கின்றனர். ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந்தேதி வரை தேர்வு நடக்கிறது.

    கடந்த 22ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான (அறிவியல்) செய்முறைத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தேர்வுத்துறையின் இணையதளத்தில் www.dge.tn.gov.in ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்து மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கால்நடை பரா மரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்து வர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் - 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
    • மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக ளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.

    ேசலம்:

    தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை பரா மரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்து வர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் - 33 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது.

    சேலம், நாமக்கல்

    இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு கால்நடை இள நிலை, முதுநிலை பட்டப்ப டிப்புகள், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களும், உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக்கு இது தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும் விண்ணப்பித்த னர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இந்த நிலையில் தேர்வர்க ளுக்கான ஹால்டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி கால்நடை உதவி மருத்துவர் பணிக ளுக்கான தேர்வு 15-ந்தேதி யும், மருத்துவ உளவியலாளர் மற்றும் உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணிக ளுக்கான தேர்வு வருகிற 14-ம் தேதியும் கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த தேர்வுகள் 2 தாள்கள் கொண்டதாகும். தாள்-1 தேர்வு காலையிலும், தாள் -2 தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகிறது. இரண்டு தேர்வுகளும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் நடத்தப்படு கின்றன. தேர்வர்கள் தங்க ளின் ஒரு முறை பதிவேற்றம் வழியாக நுழைந்து ஹால்டிக் கெட் பதிவிறக்கலாம்.

    • தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய 64 மீன்துறை ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது.
    • தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய 64 மீன்துறை ஆய்வாளர் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டது.

    இதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும், பி.எப்.சி., எம்.எஸ்.சி. விலங்கியல், மற்றும் அது சம்பந்தமாக படித்த இளநிலை , முதுநிலை பட்டதாரிகள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான தேர்வர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    சேலம்

    இந்த நிலையில் மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 8-ந்தேதி காலை மற்றும் மதியம் என 2 ஷிப்டுகளாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

    தேர்வு எழுத அனுமதிக்கப் பட்ட விண்ணப்ப தாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜயயாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவருமான சொ.சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-  திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரு–கிற 15-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை–யும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 22-ந் தேதியும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் சின்னகரை பகுதியில் பார்க் கல்லூரியில் (தன்னாட்சி) நடைபெற உள்ளது.

    எனவே நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டு திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் (www.drbtiruppur.net) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட 2 நகல்கள், 2 பாஸ்–போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிப்பதுடன் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    மேலும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 0421-2971173 மற்றும் drbtiruppur2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×