search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் விபத்து"

    • பாலம் கட்ட கொட்டப்பட்டிருந்த மண் மீது ஏறியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பகுதியில் உள்ள சஞ்சீவிராய பள்ளி எதிரே காவேரிப்பாக்கம் - பாணாவரம் செல்லும் சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றுவருகிறது.

    இந்த பணியின் காரணமாக சாலையின் குறுக்கே மண் கொட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்த பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் மண் மீது ஏறி தலைகீழாக கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 4 பேரும் எந்த சேதமும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் குனிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவருக்கு திருமணமாகி மயில் என்கின்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    இவர் அதே பகுதியில் பழம் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர்  வேலை சம்பந்தமாக சுண்ணாம்புகுட்டை பகுதியில் இருந்து வாணியம்பாடி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் வியாபாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    திருவலம் அருகே உள்ள குகை யநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மகன் லோகேஷ் (வயது 21). இவர் நேற்று வீட்டிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருவலம் புதிய ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது, முன்னால் சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோகேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி நோக்கி சென்ற காரின் முன் பகுதி டயர் வெடித்து, ஹாசீம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி அருகே முஹமதியர்பேட்டை பல்பல்தக்கா பகுதியை சேர்ந்தவர் ஹாசீம் (வயது 75). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் அருகிலுள்ள பூலாம்பாடி கிராமத்திலுள்ள தனது உறவினரை பார்க்க சென்றார்.அங்கிருந்து ஊர் திரும்பிய ஹாசீம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, ஒட்டன்சத்திரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் முன் பகுதி டயர் வெடித்து, ஹாசீம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஹாசீம் பலத்த காயமடைந்தார். காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேந்திரனின் மனைவி ரேவதி (30), என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×