search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடிய 2 பேர் கைது"

    • கந்தசாமி (வயது 45). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வெளியூர் சென்று விட்டார்.
    • வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஹரி நகர் அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வெளியூர் சென்று விட்டார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது பற்றி அவர் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், நாமக்கல் மாவட்டம் செருக்கலை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அவர் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெண்ணந்தூர் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் தண்டேஸ்வரநல்லூர் கொய்யாப்பிள்ளை சாவடி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் பிரபு (24), நாமக்கல் மாவட்டம் பரமத்தி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் மணி என்கிற கோவில் மணி (35) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் கந்தசாமி வீட்டில் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 31).இவர் விஜயமங்கலம், பெருமாள் கோவில் பின்புறம் கடந்த 8 வருடங்களாக பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று இரவு இவர் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறு நாள் காலை கடைக்கு வந்து கேட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் சுற்று சுவர் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் டிரம் இருந்தது. பின்னர் பொருட்களை சரி பார்த்தார்.

    அப்போது கடைக்குள் வைக்கப்பட்டு இருந்த 60 கிலோ எடையுள்ள இரு சக்கர வாகன பேட்டரிகள், 80 கிலோ எடை உள்ள செம்பு கம்பிகள், 40 கிலோ எடையுள்ள பித்தளை பொருட்கள் என மொத்தம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்ததும் மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் கொடு த்தார். இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா க்களை ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் 2 பேர் இரும்பு கடையில் பழைய பொருட்களை திருடி ஒரு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. அவர்களின் உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே பஞ்சர் கடை வைத்து நடத்தி வரும் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் ஈரோடு, முத்தம்பாளை யம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சுரேஷ் (27) ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த பக்கிரி (36) என்பதும் விஜயமங்கலம் பழைய இரும்பு கடையில் பொரு ட்களை திருடியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து திருட பயன்படுத்திய வாகனம் மற்றும் ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×