search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறி நாய்கள்"

    • வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை நடுத்தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சாலியர் தெருவிற்கு செல்லும் குறுக்கு சந்து பகுதியில் வெறி நாய் ஒன்று திரிகிறது.

    இப்பகுதியில் தனியார் பட்டு ஜவுளியகம் உள்ளதால் பட்டு சேலை எடுக்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை, வெறி நாய் கடித்து வருகிறது.

    இதுவரை உள்ளூர் மற்றும வெளியூர்வாசிகள் என மொத்தம் 15 பேரை, இந்த வெறி நாய் கடித்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். எனவே அச்சுறுத்தும் வெறி நாயை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேக்குபேட்டை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வெறி நாய் ஒன்று சுற்றி வருகிறது. அதே கிராமத்தை சேர்ந்த பிரபாவதி (வயது 67) என்பவரை கடித்து உள்ளது. அதே நாளில் அடுத்தடுத்து தட்சணாமூர்த்தி, கவிதா, கோமளா உள்ளிட்ட ஏழு பேரை வெறி நாய் கடித்துள்ளது. தொடர்ந்து அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கீழக்கரையில் வெறி நாய்கள் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.
    • கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பள்ளிக்கு நடந்து சென்று வந்தனர், தற்போது கீழக்கரையில் அனைத்து பகுதிகளிலும் வெறி நாய் வலம் வருவதால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர்.

    மக்களை அச்சுறுத்தும் வெறி நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கீழக்கரை நகர் மக்களை நாய் கடி தொல்லையில் இருந்து பாதுகாக்க தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கீழக்கரை பொதுமக்கள்

    100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சுற்றி திரியும் வெறிநாய் அப்பகுதியை சேர்ந்த பெண் உட்பட ஏழு பேரை கடித்து குதறியது.
    • கறவை மாடுகளை குறி வைத்து வெறி நாய்கள் அடுத்தடுத்து கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சி.எம்.புதூர் தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய் அப்பகுதியை சேர்ந்த பெண் உட்பட ஏழு பேரை கடித்து குதறியது. இது தவிர வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளையும், குறிப்பாக பால் கறக்க கூடிய கறவை மாடுகளை குறி வைத்து வெறி நாய்கள் அடுத்தடுத்து கடித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    மாரண்டஅள்ளி அடுத்த சி.எம். புதூர் மற்றும் குஜ்லார அள்ளி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 30), திம்மக்கா (50) ,விக்னேஷ் (20) , முருகன் (45), முனுசாமி (50), முனிராஜ் (50), கோவிந்தராஜ் (35) உட்பட ஏழு பேரை வெறி நாய்கள் கடித்து குதறியதில், காயமடைந்த அவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வெறி நாய்களின் அட்டகாசம் தொடர்வதால், கிராமவாசிகள் வீடுகளை விட்டு வெளியே நடமாடுவதற்கு பயந்து , எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர். பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்து குதறி வரும் வெறி நாய்களை ஒழித்து கட்டி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சிக்மாரண்டஅள்ளி ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சி.எம்.புதூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×