search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒளிரும் ஸ்டிக்கர்"

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    பெருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    இவர்கள் வெயில் நேரங்களில் ஓய்வு எடுத்தும், காலை மற்றும் மாலை நேரங்களில் மாதா பாடல்களை பாடியவாறும் நடைபயணம் மேற்கொள்வர்.

    அதன்படி, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை கடந்து பேராலயம் சென்றடைவர்.

    அவ்வாறு, இரவில் சாலையில் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக விபத்தில்லாமல் சாலைகளில் நடந்து செல்லும் வகையில் அவர்களது பைகள், உடைமைகளில் இரவில் ஒளிரும் பிரதிபளிப்பு ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதன் மூலம் எதிர்பாராத வகையில் ஏற்படும் அசம்பாவிதங்கைளை தடுக்கலாம். இதற்கு மக்கள் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

    • உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு கம்பி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 48),ஆறுமுகம் (32),வெங்கடேசன் (35) மற்றொரு ஏழுமலை (35) ஆகியோர் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்கானிப்பாளார் முகேஷ் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ் விசாரணை நடத்தி ஏழுமலை, மற்றொரு ஏழுமலை ஆகியோரை கைது செய்தார். ஆறுமுகம்,வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகிறார்.

    • லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
    • ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மிது பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடிவிபத்து ஏற்படுகிறது.

    அவினாசி :

    இரவு நேரத்தில் செல்லும் வாகனங்களின் பின்னால் மற்ற வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக அவினாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கர், அவினாசி ராஜன் நகர் அருகே அவ்வழியே சென்ற டிரக் லாரிகள், லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

    இது குறித்து ஆய்வாளர் கூறுகையில், இரவு நேரத்தில் முன்னால் செல்லும் வாகனங்கள் மீதும் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மிது பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடிவிபத்து ஏற்படுகிறது.

    இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட 30 வாகனங்களுக்கு பின்னால் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டபபட்டது. இதேபோல் நாளையும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றார்.

    நடைப்பயணமாக சுமாா் 3 லட்சம் பக்தா்கள் காங்கயம் வழியாக பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

    காங்கயம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் பங்கேற்பதற்காக சேலம், எடப்பாடி, நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, பவானி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் இருந்து நடைப்பயணமாக சுமாா் 3 லட்சம் பக்தா்கள் காங்கயம் வழியாக பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.நடைப்பயணமாக செல்லும் பக்தா்களுக்கு விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் காங்கயம் போக்குவரத்து போலீசார் சாா்பில் பக்தா்களுக்கு இரவில் ஒளிரும் வில்லைகள் வழங்கப்பட்டன.

    இது குறித்து போலீஸாா் கூறுகையில், சட்டையின் பின் பகுதியில் இந்த வில்லைகளை ஒட்டிக்கொண்டு இரவு நேரத்தில் பக்தா்கள் நடைப்பயணம் செல்லும்போது வாகனங்களின் விளக்கு வெளிச்சம் இதன் மீது பட்டவுடன் அது ஒளிரும். இதனால் பக்தா்கள் நடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்குத் தெரியும்.

    இதன் மூலம் விபத்து ஏற்படாமல் பக்தா்களின் நடைப்பயணம் பாதுகாப்பானதாகும் அமையும். மேலும் பக்தா்கள் இரவு நேர நடைப்பயணத்தின்போது சாலையின் நடுவே செல்லாமல், சாலையோரமாகச் செல்ல வேண்டும் என பக்தா்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் என்றனா். 

    ×