search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராண்ட் மாஸ்டர்"

    • 13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று நேற்று நடந்தது

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரவுசியாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 63-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 5-வது வெற்றியாகும்.

    பிரவுசியாவிடம் ஏற்க னவே தோற்று இருந்தார். இதற்கு குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெற்றி மூலம் அவர் மட்டுமே முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா இந்த சுற்றில் தோல்வியை தழுவினார். அவருக்கு ஏற்பட்ட 3-வது தோல்வியாகும்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பை ஜான் வீரர் நிஜாத் அப்சோ வாவிடம் டிரா செய்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா)- ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) மோதி னார்கள். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

    13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா , பேபி யானோ ஆகிய 3 வீரர்கள் தலா 8 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    பிரக்ஞானந்தா 6 புள்ளி களுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5. 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா (4.5 புள்ளி) 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் ( 3.5 ) கடைசி இடத்திலும் உள்ளனர்.

    இன்று கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது. குகேஷ் இந்த ரவுண்டில் ஹிகாரு நகமுராவுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள் .

    பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சீனாவை சேர்ந்த டிங்ஜி லீயை 13-வது சுற்றில் தோற்கடித்தார். மற்றொரு இந்தியரான ஹம்பி உக்ரைன் வீராங்கணை அனாவுடன் டிரா செய்தார்.

    வைஷாலி, ஹம்பி ஆகியோர் தலா 6.5 புள்ளி களுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.

    • 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
    • மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி இம்மாதம் 15- 21ம் தேதி வரை சென்னை லீலா பேலஸில் நடைபெறவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

     

    • இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.
    • தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளைப் பதிவுசெய்ததன் மூலம் 2,500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இவர் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3-வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு சிவகங்கை கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
    • கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.

    காரைக்குடி

    காரைக்குடி வித்யாகிரி பள்ளி குழுமம் சார்பில் செஸ் போட்டியில் இந்திய அளவில் 79, தமிழ்நாடு அளவில் 28-வது இடம் பெற்று கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த மாணவர் பிரனேசுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் குழும தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் வரவேற்றார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, பள்ளிக்குழும தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் முகம்மது மீரா முன்னிலை வகித்தனர்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், இளைய தலைமுறையினர்கள் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ் போல் திகழ்வதற்கு, தனித்திறமைகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக சிறுவயதில் இருந்து செஸ் விளையாட்டில் சிறப்பான பயிற்சிகள் பெற்று, 2020ல் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்று, அதில் 2,400 புள்ளிகள் பெற்று, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று பெருமை சேர்த்தார்.

    அதனைத்தொடர்ந்து, ஸ்வீடனில் நடந்த ரில்டன் கோப்பை செஸ் போட்டியில் பிரனேஷ் பங்கேற்று 2,500 புள்ளிகள் பெற்று, இந்தியாவின்

    79 -வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின்

    28-வது கிராண்ட் மாஸ்டர் எனும் சிறப்பையும் பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகருக்கு பெருமை சேர்த்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

    இனிவரும்கா லங்களிலும் பிரனேஷ் 2,600 புள்ளிகளை விரைவில் பெற்று, சூப்பர் கிராண்ட் மாஸ்டராக திகழ வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரது திறமையையும், ஆர்வத்தையும் வெளிக்கொ ணர்வதற்கு அடிப்படையாக இருந்த செஸ் கழக அமைப்பாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வித்யாகிரி பள்ளியை சேர்ந்த நிர்வாகிகள், குறிப்பாக உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் கடின பொருளாதார ரீதியாகவும் சமாளித்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பி வைத்து, உறுதுணையாக இருந்து விடாமுயற்சியுடன் உலக சாதனை படைக்க செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரமாக உள்ளனர்.

    உலக அளவில் மொத்தம் 2,000 கிராண்ட் மாஸ்டர்கள் தான் உள்ளனர்.ஆனால் பிரனேஷ் தனது 16 வயதில் வாழ்நாள் சாதனை படைத்துள்ளார்.இவரை போன்று பல்வேறு மாணவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து உருவாக வேண்டும்.கல்வி நிறுவனங்கள் கல்வியோடு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி சிறுவயதிலேயே ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவர் பிரனேசுக்கு வித்யாகிரி கல்வி குழுமம் சார்பில் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. தொழிலதிபர் பழ.படிக்காசு, செஸ் கழக தலைவர் கருப்பையா, செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் ஹேம மாலினி சுவாமிநாதன் நன்றி கூறினார்.

    • கிராண்ட் மாஸ்டரான பிரனேசுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • பிரனேசை தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 17). இவர் புதுவயல் வித்யாகிரி மெட்ரிகுலேசன் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் சுவீடனில் நடந்த உலக செஸ் போட்டியில் பங்கேற்று 9 க்கு 8 புள்ளி பெற்று இந்தியாவின் 79 மற்றும் தமிழகத்தின் 28-வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.

    இந்த நிலையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று முதல் முறையாக காரைக்குடிக்கு வந்த மாணவன் பிரனேசுக்கு காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் வித்யாகிரி பள்ளி தலைவர் நருவிழி கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமிநாதன், பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    சக மாணவர்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற பிரனேசை தோளில் தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ×