என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்"
- அர்ஷத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
- வசந்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அர்ஷத். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தொழில் நிமித்தமாக ரூ.10 லட்சம் பணத்துடன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள நண்பரை சந்திப்பதற்காக வந்தார். ரோந்து வந்த அப்போதைய நாகமலை புதுக்கோட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அங்கு நின்றிருந்த அர்ஷத்தை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக அர்ஷத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், வாலிபரிடம் பணம் பறித்த இன்ஸ்பெக்டர் வசந்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பணம் பறிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒருவர் முக்கிய சாட்சியாக உள்ளார்.
அவரை ஜாமீனில் வந்த வசந்தி மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு வசந்தி மீதான மிரட்டல் புகாரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இதில் வசந்தி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பணம் பறிப்பு வழக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி இந்திய அரசமைப்புச் சட்டம்-311 பிரிவின்படி காவல்துறை பணியில் இருந்து டிஸ்மிஸ் (நிரந்தர நீக்கம்) செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி பொன்னி பிறப்பித்து உள்ளார்.
பணம் பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இன்ஸ்பெக்டர் சிவ சங்கர் மீது அடுத்தடுத்து புகார் எழுந்த நிலையில் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் விசாரணை நடத்தினார்.
- சிவசங்கர் மீது பணியில் இருந்த காலத்தில் பலமுறை அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும், பல பெண்களிடம் அவர் தவறாக நடக்க முயன்றதும் தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சிவ சங்கரன்.
இவர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிவ சங்கர், போலீஸ் நிலையத்திற்கு வந்த இன்னொரு பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்த புகார் எழுந்தது.
இன்ஸ்பெக்டர் சிவ சங்கர் மீது அடுத்தடுத்து புகார் எழுந்த நிலையில் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். இதில் சிவசங்கர் மீது பணியில் இருந்த காலத்தில் பலமுறை அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும், பல பெண்களிடம் அவர் தவறாக நடக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவ சங்கரை உடனடியாக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் உத்தரவிட்டார்.
சிவ சங்கர் பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் 2 மாதங்களே இருந்த நிலையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சுனு மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த், புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சுனுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த பைப்பூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுனு.
இவர் மீது ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள், இவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தனர்.
பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுனு மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுனு தனது பணிக்காலத்தில் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், இதற்காக 6 முறை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அதன்பின்பும் சுனு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டது உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த், புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சுனுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இன்ஸ்பெக்டர் சுனுவுக்கு போலீஸ் பணியில் நீடிக்க தகுதி இல்லை எனவும் தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிடையே பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கோர்ட்டில் முறையிடப்போவதாக சுனு தெரிவித்துள்ளார்.
தன்மீது ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. அதனையும் விரைந்து முடிக்க கேரள ஐகோர்ட்டை அணுக உள்ளதாகவும் அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்