search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதிவாரி கணக்கெடுப்பு"

    • சாதிகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

    பாட்னா:

    நாடுதழுவிய வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் மோடியிடம் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்து வந்தார். அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்தபோது, இந்த கோரிக்கையை எழுப்பினார்.

    ஆனால், எஸ்.சி., எஸ்.டி. ஆகியோரைத் தவிர, இதர சாதிகளின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என்று மத்திய அரசு கூறிவிட்டது.

    இதையடுத்து, பீகார் மாநிலத்தில், தாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமார் அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது.

    பீகார் மாநில சட்டசபையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. சட்ட மேலவையிலும் தீர்மானம் நிறைவேறியது. இப்பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதலில், பாட்னா ஐகோர்ட்டு தடை விதித்தபோதிலும், பின்னர் தடையை நீக்கியது.

    ஒவ்வொரு சாதியினரும் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை அடிப்படையாக வைத்து, அவர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்குவதே இதன் நோக்கம்.

    இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை பீகார் மாநில அரசு நேற்று வெளியிட்டது.

    அதன்படி, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சம் ஆகும். அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் (இ.பி.சி.) 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 36 சதவீதம் ஆகும்.

    இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.) 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 27.13 சதவீதம் ஆகும்.

    மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்களும் சேர்ந்து மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் உள்ளனர்.

    எஸ்.சி. பிரிவினர் 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 19.65 சதவீதம். எஸ்.டி. பிரிவினர் 21 லட்சத்து 99 ஆயிரத்து 361 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 1.68 சதவீதம் ஆகும்.

    இடஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் உள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 15.52 சதவீதம் ஆகும்.

    மதரீதியாக இந்துக்கள் 81.99 சதவீதமும், முஸ்லிம்கள் 17.70 சதவீதமும் உள்ளனர். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின் மதத்தினர் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவரும் இணைந்து ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.

    சாதிகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த யாதவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் மொத்த மக்கள்தொகையில் 14.27 சதவீதமாக உள்ளனர்.

    சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் தொடர்பாக விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
    • அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோஹத்கி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த பாட்னா ஐகோர்ட், பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவின் கீழ் சாதி அடிப்படையிலான தரவுகளை சேகரிப்பது அரசியலமைப்பு ஆணை என்றும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டால் முழு பயிற்சியும் பாதிக்கப்படும். எனவே தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.

    இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதித்த பாட்னா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வ்ழக்கின் விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
    • முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து, தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்த நிலையில் தற்போது 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது.

    மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோத்தகி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து பாட்னா ஐகோர்ட் உத்தரவிட்டது.

    • அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு சாலையில் அரை நிர்வாணத்துடன் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • ஆட்சியர் பிரதீப் குமார் காரில் ஏறாமல் விவசாயிகளை அழைத்து கொண்டு அவரும் சேர்ந்தே தன் அலுவலகத்திற்கு நடந்து சென்றார்.

    திருச்சி:

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கான லாபகரமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு சாலையில் அரை நிர்வாணத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

    அவர்களை காவல்துறையினர் கலைந்து போக சொல்லியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அமர்ந்திருந்தனர். அப்போது அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் பிரதீப் குமார் தன் காரிலிருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர் சாலையில் நின்று கொண்டு நாம் பேச வேண்டாம், அலுவலகத்திற்குள் செல்லலாம் என விவசாயிகளை அழைத்தார். அதற்கு ஒப்புக்கொண்ட விவசாயிகள் அலுவலகத்திற்குள் செல்ல தயாராகினர். அப்போது மாவட்ட கலெக்டரை அழைத்துக் கொள்ள அவர் அருகில் அவரின் கார் வந்தது.

    ஆனால் ஆட்சியர் பிரதீப் குமார் காரில் ஏறாமல் விவசாயிகளை அழைத்து கொண்டு அவரும் சேர்ந்தே தன் அலுவலகத்திற்கு நடந்து சென்றார்.

    ×