என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஈரோடு இடைத்தேர்தல்"
- காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91, 066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பதிவானது இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதுவரை 12 சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகியுள்ளது.
அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91, 066 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6,357 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனிடையே இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதுவரை வெளியான 11 சுற்றுகள் முடிவில் 83,528 வாக்குகள் பெற்றுள்ள இளங்கோவனின் வெற்றி உறுதியாகியுள்ளது. அவர் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,666 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியானதை அடுத்து கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
- இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.
- பிரதமர் மோடியை ஏற்பவர்களோடு, 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி அமையும்.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.
* இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.
* ஈவிகேஎஸ்இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்.
* பிரதமர் மோடியை ஏற்பவர்களோடு, 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் கூட்டணி அமையும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
- முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அவர் சுமார் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார்.
- அ.தி.மு.க.வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேரும், 3-ம் பாலினத்த வர்கள் 25 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88,037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79 சதவீத வாக்குப்பதிவாகும்.
இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 10 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அவர் சுமார் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 4,210, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 607 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனிடையே 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 24,985 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 9 சுற்றுகள் முடிந்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70,299 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 45, 314 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 24,985 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையில் 7 வேட்பாளர்கள் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் 61,182 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 38, 834 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 22,348 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் 7-வது சுற்று முடிவுகள் வெளியாகின. பிறகு 1 மணிமுதல் 1.45 மணிவரை உணவு இடைவேளைக்காக வாக்குகள் எண்ணுவது நிறுத்தப்பட்டது. அதன்பின்பு 8-வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டது.
அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 61,182 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 38, 834 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 22,348 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
- திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
- வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை மக்கள் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* திமுக ஆட்சியை எடைபோடும் தேர்தலாக, இந்த இடைத்தேர்தல் இருக்கும் என கூறி வந்தேன்.
* பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக ஈரோடு கிழக்கு வெற்றி உள்ளது.
* பாராளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.
* வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை மக்கள் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளனர்.
* நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் உள்ளேன்.
* திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
* நாலாந்தர பேச்சாளர் போல் எடப்பாடி பழனிசாமி பேசிவந்தார்; மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 33, 612 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 19,936 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,006, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 492 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் 7-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 33, 612 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 19,936 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,006, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 492 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் சித்தோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
- தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் சித்தோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு அதிகாலை முதலே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதை தொடர்ந்து மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதையொட்டி தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
- காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,179 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 16,777 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2,443, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 386 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போது 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 6-வது சுற்று முடிவில் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். அவர் 46,179 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 16,777 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2,443, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 386 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து 7-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
- முதல் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 39,855 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 13,515 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 1,620, தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 290 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்றுவிட்டது என தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கூறியுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.
- வரும் பாராளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இடைத்தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் நான்கு சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 31,928 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சேரும்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபையில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது.
* வரும் பாராளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இடைத்தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.
* அமைச்சர்கள் தேர்தலில் நின்றபோது கூட இவ்வளவு கடுமையாக உழைத்தார்களா என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்