என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிரிக்கெட் போட்டிகள்"
- கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ஜே.ஆர்.சி. உயர்நிலை பள்ளி மற்றும் பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர்.
- மாநில அளவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.7,50,000 பரிசாக வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
இதில் மாணவிகள் பிரிவு கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் ஜே.ஆர்.சி. உயர்நிலை பள்ளி மற்றும் பிரசித்தி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கன்னியாகுமரி அணியை வீழ்த்தி மாநில அளவில் முதலிடத்தை பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ரூ.7,50,000 பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் பாராட்டினர்.
- கடத்தூர் ஆண்கள் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெறுகிறது.
- வி.சி.க. மண்டல செயலாளர் நந்தன், பா.ம.க மாவட்ட செயலாளர் அரசாங்கம், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஆண்கள் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெறுகிறது.
இளைஞர்கள் உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க உடல்ஆரோக்கியத்துடன் வாழ போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு மிகச்சிறந்த குடிமகனாக உருவாக கடத்தூரில் மட்டைப்பந்து போட்டியை முன்னால் எம்.எல்.ஏ வேலுசாமி, வி.சி.க. மண்டல செயலாளர் நந்தன், பா.ம.க மாவட்ட செயலாளர் அரசாங்கம், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உதவியாளர் சொல்லின் செல்வம், வணிகர் சங்க தலைவர் கண்ணப்பன், குப்தா, பேரூராட்சி துணைத்தலைவர் வினோத், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயக்குமார் சங்கர் கோவிந்தசாமி ராஜாமணி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம் பரசுராமன் சம்பத் அ.தி.மு.க நகர செயலாளர் சந்தோஸ், முத்துசாமி, சென்னகிருஷ்ணன், முத்துசாமி, முருகன், கோவிந்தராசன், சின்னராஜ், செல்வம், முருகேசன் மைய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் குமார் மற்றும் அனைத்து கட்சியை சார்ந்த அமைப்புகள்ள சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 25 அணிகள் பங்கேற்கிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் மெர்குரி கிரிக்கெட் கிளப் கவுண்டி கிரிக்கெட் கிளப் மற்றும் குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாநில அளவிலான 31ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்த கிரிக்கெட் போட்டிகளை ஒன்றிய குழு உறுப்பினர் பி.எச்.இமகிரிபாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்திதாசன், குமரன், வார்டு உறுப்பினர் கமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் குடியாத்தம், வேலூர், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 சிறந்த அணிகள் கலந்து கொள்கிறது.
இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையும் 50,000 ரூபாய் பரிசும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு கோப்பையும் 25,000 பரிசும் வழங்கப்படுகிறது.
இந்த கிரிக்கெட் போட்டிகள் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெறுகிறது
இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் கார்மேகபாபு, நிர்வாகிகள் ராஜ்குமார், ராம்பிரசாத், சுனில் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்