search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஞ்ஞானிகள்"

    • ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
    • விண்ணில் ஏவப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோள்களும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இல்லை.

    திருப்பதி:

    பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி ஆயிரம் கிலோ எடை கொண்ட மேகா ட்ராபிக்ஸ்-1 எனும் எம்டி.ஐ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பிரென்ச் ஆராய்ச்சி மையம் இணைந்து அனுப்பிய செயற்கைக்கோள் உலகளாவிய கால நிலை மாற்றங்களை சேகரித்து அனுப்புவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

    இதனுடைய ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர் இருப்பினும் தற்போது வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த செயற்கைக்கோள் காலநிலை மாற்றங்களை உடனுக்குடன் அனுப்பி வருகிறது.

    இந்த செயற்கைக்கோளில் உள்ள 125 கிலோ எரிபொருளை மக்கள் நடமாட்டம் இல்லாத பசிபிக் பெருங்கடலில் முழுமையாக வெளியேற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து மீண்டும் தரையிறங்கிய பிறகு அதில் சில நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி மீண்டும் விண்ணில் ஏவ விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

    நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏவப்படும் எம்டிஐ செயற்கைக்கோள் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு காலநிலை மாற்றங்கள் குறித்து விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தகவல்களை அனுப்பும் என கூறப்படுகிறது.

    அதன்படி நாளை மாலை 4-30 மணி முதல் 9-30 மணி வரை செயற்கைக்கோளை ஏவுவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    விண்ணில் ஏவப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோள்களும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இல்லை. முதல்முறையாக எம்.டி.ஐ. செயற்கைக்கோளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
    • சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். விண் வெளியில் நிகழும் மாற்றங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக ஆய்வு முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள். சூரியனையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். சூரியனில் இருந்து வெளியேறும் காந்த புயல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கிறார்கள்.

    இந்த நிலையில் சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துள்ளதாகவும் அது சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு புயலை போல சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த நெருப்பு சூறாவளி சூரியனின் மேற்பரப்பு சுழன்று வருவதாக தெரிவித்தனர். இது எப்படி நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி பதிவு செய்துள்ளது. அந்த ஆராய்ச்சியை விண்வெளி ஆராய்ச்சியாள் அர் டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், `துருவ சூழலை பற்றி பேச்சுக்கள் நடந்து வருகிறது. சூரியனின் வடக்கு பக்கத்தின் மேற்பரப்பில் ஒரு பெரிய பகுதி உடைந்துவிட்டது. அது சூரியனின் வட துருவத்தில் சுற்றி வருகிறது. அதன் தாக்கத்தை பற்றி ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.

    சூரியனில் அடிக்கடி சூறாவளிகள் ஏற்படுவதுண்டு. இந்த சூரிய புயல்களால் தகவல் தொழில் நுட்ப தொடர்புகள் பாதிக்கப்படும். ஆனால் தற்போது சூரியனின் வடக்கு பகுதியில் ஒரு துண்டே உடைந்து பெரிய அளவில் நெருப்பு சூறாவளி சுற்றி வருவதால் அது பூமிக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பல ஆண்டுகளாக சூரியனை ஆய்வு செய்து வரும் அமெரிக்க தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஸ்காட் மெக்கிண்டோவ் கூறும்போது, `சூரியனில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி உடைந்தது போன்ற ஒரு சூழலை இதுவரை நான் பார்த்ததில்லை.' என்றார்

    • சந்திரனின் விட்டத்தில் 3-ல் ஒரு பங்கை விட சற்று குறைவாக உள்ளது.
    • ஒரு குள்ள கிரகம் என்றும் சொல்லலாம்.

    லண்டன்:

    சூரிய குடும்பத்தை பற்றிய ஆய்வுகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் உலகின் மிகப்பெரிய ஆப்டிக்கல் தொலை நோக்கியான 10.4 மீட்டர் விட்டம் கொண்ட கிரேன் டெலஸ்கோப்பியோ கனரி யாசில் பொருத்தப்பட்ட இங்கிலாந்தின் ஷெபீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டஅதிநவீன கேமிராவை பயன்படுத்தி சர்வதேச வானியலாளர்கள் குழு ஒரு ஆய்வை ஸ்பெயினில் நடத்தியது.

    இந்த ஆய்வின் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் வெளியானது. ஆய்வின்படி, வளைய அமைப்பு குவாவர் என்று பெயரிடப்பட்ட ஒரு குள்ள கிரகத்தை சுற்றி உள்ளது. குவாவர் புளூட்டோவின் விட்டத்தில் பாதியை கொண்டுள்ளது என்று சொல்லலாம்.

    அதுபோல் சந்திரனின் விட்டத்தில் 3-ல் ஒரு பங்கை விட சற்று குறைவாக உள்ளது. எனவே இதை ஒரு குள்ள கிரகம் என்றும் சொல்லலாம். ஈர்ப்பு விசையால் வட்ட வடிவில் இழுக்கப்படும் குள்ள கிரகம் இது.

    இதுவரை அறியப்பட்ட அனைத்து அடர்த்தியான வடிவங்களும் ரோச் எல்லைக்குள் இருப்பதால் அவற்றின் அடிப்படை கிரகத்திற்கு அருகில் அமைந்திருந்ததாக ஆய்வு குறிப்பிடுகிறது.

    ×