என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நெல்லின் ஈரப்பதம்"
- மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை.
- நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.
திருச்சி:
நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
நெல்லின் ஈரப்பதத்தை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தி அனுமதி வழங்கியுள்ளது வெறும் கண் துடைப்பு நாடகம். மேலும் இது காலம் கடந்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
கடற்பரப்பு அதிகம் கொண்ட டெல்டா மாவட்டங்களில் இயற்கை சீற்றங்கள் மற்றும் அதன் மூலம் பெய்யும் பருவம் தவறிய மழையும் எப்போதும் விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்தது கிடையாது.
அதேபோல் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்தன.
தற்போது நல்ல வெயில் அடித்து அனைத்து விவசாய நிலங்களிலும் அறுவடை என்பது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி தற்போதுதான் மத்திய அரசு அனுமதியே வழங்கியுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க நெல்லின் ஈரப்பதம் உள்ளிட்டவைகளை உறுதி செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான முன்மொழிவுகளை மாநில அரசு உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
அதன் மூலம் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு சிறப்பு அதிகாரத்தை பெற முயற்சிக்க வேண்டும். அப்படி பெற்றால்தான் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற முடியும். நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.
இரண்டு பருவ கால மழையை கொண்டுள்ள தமிழ்நாட்டில் வருங்காலங்களில் மாநில அரசே முடிவெடுக்கும் அதிகாரத்தை பெறவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்ததால் 2.15 லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
- ஆய்வின் போது 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என்று அமைச்சர்களிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதுடெல்லி:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பலத்த மழை பெய்தது. பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன.
வயலில் தேங்கிய மழை நீரை வடியவைத்து பயிரைக் காப்பதற்கான பணிகளை விவசாயிகள் செய்தும் பலன் இல்லை. இதேபோல் அறுவடைசெய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல்லும் ஈரப்பதத்தால் முளைத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஆய்விற்கு பின்னர் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்ததால் 2.15 லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. ஆய்வின் போது 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என்று அமைச்சர்களிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இவை அனைத்தும் ஆய்வறிக்கையாக முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்திட வேண்டும் என்று கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் மத்திய அரசின் ஆய்வு குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.
சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுடப் அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மத்திய அரசிற்கு தாக்கல் செய்தது.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று நெல்லின் ஈரப்பதத்தின் அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு விவசாய சங்கங்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்