search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பானி"

    • நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?.

    அதானி, அம்பானி டெம்போ மூலம் எதிர்க்கட்சிக்கு பணம் கொடுத்ததாக பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதானி, அம்பானி குற்ச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடியை தடுப்பது எது? என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி டெம்போ மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அதானி மற்றும் அம்பானி பணம் சப்ளை செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?. அவரிடம் அத்தகைய விரிவான மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்கள் இருந்தால் விசாரணை அமைப்புகளை (சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை) பயன்படுத்த தடுத்தது என்ன?

    கடந்த ஆண்டு ஹம் அதானி கே ஹைன் கவுன் (HAHK) சீரிஸ் கீழ் பிரதமரிடம் 100 கேள்விகளைக் கேட்டோம். தற்போது, டெம்போக்களில் பணப் பைகளைப் பெறுவது குறித்து நாட்டு மக்களுக்கு வாக்குமூலத்தோடு தனது நீண்ட மௌனத்தைக் கலைக்கிறாரா பிரதமர்?

    அதானியை சட்டத்திற்குப் புறம்பாக பாதுகாக்க பிரதமர் எவ்வளவு தூரம் சென்றார் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு நன்கு தெரியும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரசுக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?.
    • ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்?

    பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது "காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் வேறுபட்டவை அல்ல. ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பூஜ்ஜிய ஆட்சி ஆகியவை இந்த இரு கட்சிகளையும் இணைக்கிறது. இரு கட்சிகள் இடையே ஊழல் பொதுவான காரணியாக உள்ளது.

    காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.

    பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    காங்கிரசுக்கு டெம்போ லோடு பணம் வந்து சேர்ந்ததா?. ஒரே இரவில் அம்பானி- அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? தெலுங்கானா மண்ணில் இருந்து இதை கேட்க விரும்புகிறேன்" இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கிண்டல் செய்யும் விதமாக "அம்பானி மற்றும் அதானி அனுப்பிய "டெம்போவில் பணம்" என்று குறிப்பிட்டபோது மோடி தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?" என கேட்டார்.

    மேலும், காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ராகல்காந்தி "மோடி ஜி, நீங்கள் கொஞ்சம் பயப்படுகிறீர்களா?. வழக்கமாக கதவுகள் பூட்டப்பட்ட அறைக்குள்தான் நீங்கள் அதானி மற்றும் அம்பானி குறித்து பேசுவீர்கள். ஆனால், தற்போது முதல்முறையாக பொது இடத்தில் அதானி மற்றும் அம்பானி பற்றி பேசியுள்ளீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதானி மற்றும் அம்பானி ஆகிய இரண்டு பெரும் பணக்காரர்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார் என ராகுல் காந்தி அடிக்கடி குற்றம்சாட்டுவார். காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டும். ஆனால், முதன்முறையாக அம்பானி மற்றும் அதானி குறித்து பிரதமர் மோடி விமர்சத்தியுள்ளார். குறிப்பாக அதானி குறித்து பிரதமர் மோடி பொதுவெளியில் விமர்சனம் செய்தது கிடையாது. இது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

    • 2016-ல் மோடி ஈரான் சென்றார். அங்கு அவருடன் சென்ற அதானிக்கு சதார் துறைமுக ஒப்பந்தப் பணி ரூ.4000கோடி கிடைத்தது.
    • 2017-ல் மோடி இஸ்ரேல் சென்றார். அப்போது அவருடன் பயணித்த அம்பானிக்கு ரூ.65000 கோடி வான்வழி ஏவுகணை ஒப்பந்தம் கிடைத்தது.

    சென்னை:

    தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. ஆட்சி ஊழலை ஒழிக்கும் என மேடைக்கு மேடை முழங்குகின்ற மோடி! பா.ஜ.க.வின் முதுகில் மட்டுமல்ல அதன் உடம்பு முழுவதும் ஊழல் மயம்தான். உத்தம வேடம் போடும் மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் சில சாட்சிகள்.

    இது தகவல் அறியும் சட்டத்தின் துணை கொண்டு வெளிவந்த ஊழல்- வீட்டுக்கடன் ஊழல்

    கோவா மாநில பா.ஜ.க. அரசின் தொழில் துறை அமைச்சர் மகாதேவ் நாயக்-கோவா அரசின் எம்.எல்.ஏ.க்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் வெறும் 2 சதவீத வட்டியில் ஏற்கனவே உள்ள நிலத்தில் வீடுகளைக் கட்ட அல்லது குடியிருப்பு நோக்கத்திற்காகப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்காக அனுமதிக்கப்படும் நிதியில் புதிய வணிக வளாகங்களை வாங்கிடத் தவறாகப் பயன்படுத்தினார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் 2010-ம் ஆண்டு கும்பமேளா கொண்டாட ஒன்றிய அரசு ரூ.565 கோடி வழங்கியது. இந்த நிதி தவறாகப் பயன்படுத்தட்டதாக கூறி உத்தரகாண்ட் பா.ஜ.க. ஆட்சி ஊழலை வெளிப்படுத்தி உள்ளது.

    பொது சுகாதாரப் பொறியியல் துறைக்கு நியாயமற்ற விலையில் எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

    மோடி பிரதமர் ஆனது முதல் உலகில் அவர் செல்லாத நாடுகள் இல்லை எனும் அளவுக்கு எல்லா நாடுகளுக்கும் விமானப் பயணம் சென்றுள்ளார்.

    அப்படி அவர் பயணம் செய்த போதெல்லாம் அவருடன் பயணம் செய்தவர்கள் அதானியும் அம்பானியும். இது உலகம் அறிந்தது. மோடியின் இந்தப் பயணங்களால் பயனடைந்தவர்கள் யார்?

    இந்திய மக்கள் அல்ல ! அம்பானியும் அதானியும் தான்!.

    மோடி 2014-ல் ஆஸ்திரேலியா சென்றார். உடன் சென்ற அதானிக்கு அங்கு ரூ.6,200 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஒப்பந்தம் கிடைத்தது. அடுத்து பிரான்ஸ் சென்றார். அங்கு அம்பானிக்கு ரூ.58,000 கோடி ரபேல் விமான ஒப்பந்தம் கிடைத்தது.

    2016-ல் மோடி ஈரான் சென்றார். அங்கு அவருடன் சென்ற அதானிக்கு சதார் துறைமுக ஒப்பந்தப் பணி ரூ.4000கோடி கிடைத்தது.

    2017-ல் மோடி இஸ்ரேல் சென்றார். அப்போது அவருடன் பயணித்த அம்பானிக்கு ரூ.65000 கோடி வான்வழி ஏவுகணை ஒப்பந்தம் கிடைத்தது.

    அதே ஆண்டில், அடுத்த முறை இஸ்ரேல் சென்ற மோடியுடன் பயணித்த அதானிக்கு ரூ.1,500 கோடி ஆளில்லா விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைத்தது.

    2018 ஸ்வீடன் நாட்டிற்குச் சென்ற மோடியுடன் பயணித்தவர் அதானி. அங்கு அவருக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கான ஒற்றை என்ஜின் போர் விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைத்தது.

    அதே ஆண்டில் அம்பானியுடன் பயணித்த பிரதமர் மோடியால் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான - அமெரிக்காவின் 7வது கடற்படை பராமரிப்பு ஒப்பந்தம் அம்பானிக்குக் கிடைத்தது.

    இப்படி பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்ததே பிரதமரின் இந்தப் பயணங்களால். இந்திய மக்களுக்கு என்ன பயன்?

    இப்படி எண்ணற்ற ஊழல்களின் உறைவிடமாகத் திகழ்பவர் இன்று புதுவேடமிட்டு வருகிறார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! சத்தியம் தவறாத உத்தமர் போல் நடிக்கும் மோடியின் உண்மையான வேடங்களை பொது மக்கள் அறியட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடிகர் ரஜினிகாந்த் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
    • நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, அவரின் மனைவி கியாரா அத்வானி உடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர் ராதிகா மெர்சண்ட் என்பவரை திருமணம் செய்யப்போகிறார். ராதிகா மெர்சண்ட் பிரபல நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் தொழில் சக்கரவர்த்தியான விரேனின் மகள். கடந்த சில நாட்களாக ஜாம் நகரில் pre wedding Event கோலாகலமாகவும். மிகவும் பிரமாண்டமாகவும் நடந்து வருகிறது. இதில் முக்கிய பிரபலங்களான மார்க் ஸூக்கர்பெர்க், நடிகர்கள் ரஜினி, சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் ஆகியோர் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, அவரின் மனைவி கியாரா அத்வானி, பாலிவுட் நடிகர் கரீனா கபூர் அவரது கணவரான சயீப் அலிகான், பாலிவுட் நடிகர் விக்கி கவ்ஷல் மற்றும் அவரின் மனைவியான கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் ரன்பீர் கபூரும் மற்றும் அவரின் மனைவியான ஆலியா பட்டும் கலந்து கொண்டனர்.

    பாலிவுட்டில் பச்சன் ஃபேமிலி என்றழைக்கப்படும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஷ்வர்யா ராய் மற்றும் இன்னும் பல பாலிவுட் நட்சத்திரங்களும் ஆனந்த் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமில்லாமல் நேற்று நடந்த மஹா ஆர்த்தி விழாவில் விளையாட்டு வீரர் தோனி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் இயக்குநர் அட்லீ பங்கேற்றனர். தோனி குடும்பத்துடன் இயக்குநர் அட்லீ மற்றும் அவரின் மனைவி ப்ரியா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    • முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
    • திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. வித்தியாசமான டிசைனில் உருவான லெஹங்கா உடையுடன், வைர நகைகளை அணிந்துள்ள மணமகள் ராதிகா மெர்ச்சண்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை திருமணமும் அதற்கு முந்தைய சடங்குகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அம்பானி குடும்பத்தில் இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூன்று குழந்தைகளில், மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகியோர் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. இந்நிலையில் மற்ற இரு திருமணங்களை விட இத்திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த அந்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரமாண்ட திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு மஹாபலேஷ்வரில் இருந்து பார்வையற்ற கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மெழுகுவர்த்திகள் பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழங்கால கைவினைப் பொருட்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் இஷா அம்பானி, சுவதேஷ் இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர். திருமண வீட்டின் உட்புறத்தை ஆடம்பரமாக அலங்கரிப்பதற்கும், உணவு பரிமாறுவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரபலமான மற்றும் திறமையான கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.
    • இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார்.

    புதுடெல்லி:

    'ஹுருண் இந்தியா' ஆய்வு நிறுவனம், எம்3எம் மனை வணிக நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பணக்காரர்கள், இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    இதில் அகமதாபாத்தை சேர்ந்த 60 வயதான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மார்ச் 15-ந்தேதி நிலவரப்படி ரூ.4.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

    2022-23ம் நிதியாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 60 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் ரூ.3000 கோடி இழப்பை அதானி சந்தித்து வருகிறார்.

    அதானி நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட தாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

    அதேநேரத்தில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.6.77 லட்சம் கோடி ஆகும். இவரது சொத்து மதிப்பும் 20 சதவீதம் சரிவை கண்டு உள்ளது.

    கடந்த 2021-2022ம் நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் அதானி முதலிடத்தில் இருந்தார். இப்போது அவர் அந்த அந்தஸ்தை இழந்து 2-வது இடத்துக்கு வந்து உள்ளார்.

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சீரம் இந்தியா நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா ரூ.2.23 லட்சம் கோடி சொத்துகளுடனும், எச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடார் ரூ.2.14 லட்சம் கோடி சொத்துகளுடனும், தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ரூ.1.65 லட்சம் கோடி சொத்துகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் அதானி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 பேரில் இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

    இந்த பட்டியலில் சைரஸ் பூனாவாலா 46-வது இடத் திலும், சிவ் நாடார் 50-வது இடத்திலும், லட்சுமி மிட்டல், எஸ்.பி.ஹிந்துஜா ஆகியோர் 76-வது இடத்திலும் உள்ளனர். திலீப் ஷங்வி 98-வது இடத்திலும், ராதாகிஷன் தமானி 107-வது இடத்திலும், குமார் மங்கலம், உதய் கோட்டக் ஆகியோர் 135-வது இடத்திலும் உள்ளனர்.

    உலக அளவிலான பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்கா 32 சதவீதத்தை கொண்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது.

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது.
    • 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியது.

    இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

    அதானி குழும நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிலுவையில் இருந்த கடன்களை அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தின. எனினும், ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின்னான கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது. இத்தொகை, இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான டாடாவின் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகும் எனக் கூறப்படுகிறது.

    ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தில் அதானி இருந்து வந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சி காரணமாக சுமார் 80 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10- வது இடத்தில் உள்ளார்.

    ×