search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோள் சீலை போராட்டம்"

    • கூட்டத்தில் 2 மாநில முதல்வர்கள் பங்கேற்றதால், நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
    • பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது.

    நாகர்கோவில்:

    தோள் சீலை போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.

    மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் 2 மாநில முதல்வர்கள் பங்கேற்றதால், நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
    • வரலாற்று உண்மைகளை என்றென்றைக்கும் வருங்காலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம்.

    சென்னை:

    இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    நாகர்கோவிலில் இன்று நடைபெற உள்ள தோள் சீலை போராட்டத்தின் 200-ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

    தோள் சீலை போராட்டம் என்பது நமது நாடார் இனத்தின் வீரத்தையும் விவேகத்தையும் தொடர் போராட்டத்தால் விளைந்த வெற்றியையும் விளக்கும் நிகழ்வாகும். தோள் சீலை போராட்டத்தின் 200-ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்திய நாடார்கள் பேரமைப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. வரலாற்று உண்மைகளை என்றென்றைக்கும் வருங்காலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தோள் சீலை போராட்ட 200-வது மாநாட்டில் 2 முதலமைச்சர்கள் பங்கேற்பதால் நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா திடல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    இந்தியா முழுவதும் பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது.

    இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு மாநாடு நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை 6 மணிக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பங்கேற்கிறார்கள்.

    மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    தோள் சீலை போராட்ட 200-வது மாநாட்டில் 2 முதலமைச்சர்கள் பங்கேற்பதால் நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா திடல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விழா மேடை மற்றும் மைதானத்தை ஆய்வு செய்தனர்.

    மாநாட்டையொட்டி இன்று நாகர்கோவில் நாகராஜாதிடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபோல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல் மின்னொளியில் ஜொலிக்கிறது. கூட்டணி கட்சியினர் அமர தனி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல விழாவுக்கு வரும் தொண்டர்கள் அமரவும், நிகழ்ச்சிகளை காணவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வருகிறார்.

    இதுபோல தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இருந்து காரில் நாகர்கோவில் வருகிறார். தோள் சீலை போராட்ட மாநாடு முடிவடைந்த பின்னர் அவர் இன்று இரவு நாகர்கோவிலில் தங்குகிறார். இதனால் அவர் தங்கும் விருந்தினர் மாளிகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×