search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி திரவுபதி முர்மு"

    • கடந்த 13-ம் தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகர் சென்றடைந்தார் ஜனாதிபதி முர்மு.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்றார்.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்தப் பயணத்தின் முதல் பகுதியாக கடந்த 13-ம் தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகர் சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றார்.

    இதையடுத்து, தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியாக மொரிடேனியா நாட்டிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அவரை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது ஆல்ட் கசோனி வரவேற்றார். தலைநகர் நாக்சாட்டில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.

    தொடர்ந்து, தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டின் துணை ஜனாதிபதி மைக்கேல் யூசி நேரில் சென்று வரவேற்றார். அதன்பின் மலாவி ஜனாதிபதி லாசரஸ் சக்வேராவை சந்தித்து திரவுபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்தினார். மலாவி நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 1,000 மெட்ரிக் டன் அரிசி, சுகாதார ஒத்துழைப்பின் அடையாளமாக புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் ஆகியவற்றை திரவுபதி முர்மு வழங்கினார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குச் சென்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
    • விவேகானந்தா கேந்திரத்தின் செயல்பாடுகள் மூலம் சுவாமிஜியின் செய்தியைப் பரப்பும் மக்களின் பக்தியைப் பாராட்டுகிறேன்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்த்தார். அதன்பிறகு அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டது குறித்து அவர் தனது கருத்தை எழுதி இருந்தார். அந்த புத்தகத்தில் அவர் எழுதி இருந்ததாவது:-

    விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குச் சென்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். ஆன்மீகத்தின் சின்னமாக விளங்கும் இந்த வளாகத்தைக் கட்டுவதற்குப் பின்னால் இருந்த மறைந்த ஏக்நாத் ரானடே ஜியின் மகத்துவத்தைக் கண்டு வியக்கிறேன்.

    சுவாமி விவேகானந்தரின் மகத்தான பணியை இந்த இடத்தில் உணர்ந்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன்.

    விவேகானந்தா கேந்திரத்தின் செயல்பாடுகள் மூலம் சுவாமிஜியின் செய்தியைப் பரப்பும் மக்களின் பக்தியைப் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தனது கருத்தை பார்வையாளர் புத்தகத்தில் எழுதி இருந்தார்.

    ×