search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர்.
    • குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம். கார்டுகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அரசு இந்த மாதம் முதல் செயல்படுத்த உள்ளது.

    இந்த திட்டத்தில் இணைய தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளனர்.

    ஒரு வாரமாக நடந்த இந்த கள ஆய்வு நிறைவடைந்து விட்டது. மாதம் தோறும் உரிமைத் தொகை அவரவர் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும். எனவே பயனாளிகளுக்கு வங்கி கணக்கு அவசியம். வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர்.

    தற்போது தகுதியான பெண்களுக்கு வழங்குவதற்கான ஏ.டி.எம். கார்டு பிரத்யேகமாக தயாராகி வருகிறது. ரூபே கார்டாக வழங்கப்படும். இந்த கார்டு மூலம் பணத்தை எடுத்து கொள்ள முடியும்.

    இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    முதலமைச்சர் தொடங்கி வைத்ததும் அனைவரது வங்கி கணக்குக்கும் ரூ.1000 சென்றுவிடும். அடுத்த மாதம் முதல் மாதந்தோறும் 1-ந்தேதி வந்துவிடும். குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம். கார்டுகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பகுதி ஆர்.டி.ஓ.விடம் சென்று முறையிட்டு நிவாரணம் தேடிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • நேரடியாக வீடு வீடாகச் சென்று மேலாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
    • கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே மேல்விஷாரம் ரஷீத் பேட்டை பகுதியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான நபர்கள் குறித்தும், கூடுதல் தகவல்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நேரடியாக வீடு வீடாகச் சென்று மேலாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.

    • குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
    • நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படுகிறது.

    இதற்காக குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1 கோடியே 64 லட்சம் விண்ணப்பங்களின் விவரங்கள் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக வீடு வீடாக கள ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வருகிற 5-ந் தேதிக்குள் செய்து முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்பது பற்றி பொதுமக்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதில் நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மீண்டும் முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.டி.ஓ. அல்லது சப்-கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காண முடியும்.

    • கர்நாடகாவில் ரூ.2000 கொடுத்து பெண்களை கையேந்த வைத்துள்ளனர்.
    • தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம்

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மகளிர் உரிமைத்தொகையை பெற பெண்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரூ.1000 கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறார்கள். கர்நாடகாவில் ரூ.2000 கொடுத்து பெண்களை கையேந்த வைத்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே உரிமைத்தொகை கொடுக்கிறார்கள்.

    பா.ஜ.க.வும் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் ரூ.2000 ஆக்கி விடுவார்கள்.

    தமிழகத்தில் ரூ.8 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.-தி.மு.க.தான் காரணம். தற்போது பொதுப்பணத்தை எடுத்து செலவு செய்கின்றனர். தி.மு.க. அரசு மக்களுக்காக எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது.
    • விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதியில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையாக உள்ளதா? என்பதை கண்டறியவும், விடுபட்ட விவரங்களை விண்ணப்பதாரர்களிடம் கேட்டு பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள், மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பதாரர்களிடம் விசாரித்து வருகின்றனர். வீடு சொந்த வீடா? வாடகை வீடா? என்ன வேலை பார்க்கிறார்கள். கார் இருக்கிறதா? மாத வருமானம் எவ்வளவு? மின்சார பயன்பாடு 2 மாதத்திற்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதையும் பார்க்கிறார்கள்.

    விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களும், விசாரிக்கும்போது கிடைக்கும் விவரங்களும் சரிவர ஒத்துப்போகிறதா? என்பதையும் பார்க்கிறார்கள். விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    பெரும்பாலான வீடுகளில் மின்சார பயன்பாடு பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாமல் உள்ளதால் மின்சார யூனிட் எவ்வளவு உபயோகப்படுத்தி உள்ளனர் என்பதையும் பார்த்து தெரிந்து கணக்கிட்டு கொள்கிறார்கள்.

    இதுபற்றி உயர் அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்காகத்தான், வீடுவீடாக சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், விண்ணப்பத்தில் சரிவர பூர்த்தி செய்யாத விவரங்களை கேட்டு பெற்று பதிவு செய்து வருகிறார்கள் என்றும் தெரி வித்தார். இந்த தரவுகள் அனைத்தும் முழுமையாக கிடைத்ததும் இதற்கென உருவாக்கப்பட்டு உள்ள சாப்ட்வேர் செயலி மூலம் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்படும். அதில் எந்ததெந்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் என்பது தானாகவே தெரிந்து விடும்.

    அந்த பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாராகி விடும். அதன்மூலம் யார்-யாருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது தெரிந்து விடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யவும் நடவடிக்கை
    • குமரியில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 651 பேர் விண்ணப்பம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவங்கள் பொது மக்க ளுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு இருந்தது.

    முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. முதல் கட்ட முகாமில் 2 லட்சத்து 3 ஆயி ரத்து 268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி னார்கள். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்ட மாக விண்ணப்ப படி வங்கள் பெறப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த 18-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவுகளை சரிபார்க்கும் பணி நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது.

    764 ரேஷன் கடைகளிலும் விண்ணப்ப படிவங்களை அந்தந்த பகுதியில் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கி றார்கள். ஆய்வு பணியின் போது சந்தேகம் இருப்பின் களப் பணியாளர்கள் அந்த வீட்டிற்கு சென்று நேரில் ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் ரேஷன் கார்டில் உள்ள சிலரின் பெயரை விடுவித்து விட்டு கலைஞர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப் பித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதை முறை யாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.

    ரேஷன் கார்டில் உள்ள அனைவரது பெயரும், கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படி வங்களில் எழுதப் பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள்.

    எனவே குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் யாரா வது அரசு துறைகளில் வேலை பார்க்கிறார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீடுகளில் கார் வைத்திருந்தாலும் அவர்களது விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவங்களை வருகிற 31-ந் தேதிக்குள் ஆய்வு செய்து இறுதிப்பட்டியல் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 18-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றன.
    • மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    சென்னை:

    மகளிா் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. ஒரு கோடியே ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மகளிா் உரிமைத்தொகை திட்டத்துக்கான முதல்கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடைபெற்றது.

    இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த முகாமில் ஏறத்தாழ 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விடுபட்டவர்களுக்காக கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி முதல் மூன்று நாள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று நிறைவடைந்துள்ளது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக இதுவரை 1.55 கோடி பெண்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் மீது பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன.

    பரிசீலனைக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக கள ஆய்வு பணிகளும் நடத்தப்பட உள்ளன. இதற்காக விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும்.

    இந்த நிலையில், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத பயனாளிகளுக்கு ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

    அதில் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்கவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    மகளிா் உரிமைத்தொகை சிறப்பு முகாம் நிறைவு பெற்ற நிலையில், வங்கிகள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளதாலும் முகாமை மேலும் நீட்டிக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

    இருந்த போதும் முகாம்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் எதிர்பார்த்த அளவிற்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணி நாளை மறுநாள் முதல் நடைபெறுகிறது.
    • பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு அறிவித்து உள்ள மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    இதற்கான பயனாளிகள் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கினர். தமிழகம் முழுவதும் 2 கட்டமாக முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு நடந்தது.

    விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் 18-ந்தேதி முதல் நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றன. இரண்டு கட்டமாக முகாம்களில் பதிவு செய்யாதவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

    சென்னையில் 3 நாட்கள் விடுபட்டவர்களுக்கு நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 50,427 பேர் பதிவு செய்தனர். சென்னையில் மொத்தம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 807 குடும்பத்தலைவிகள் நேற்று வரை விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

    இதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணி நாளை மறுநாள் (23-ந்தேதி) முதல் நடைபெறுகிறது. விண்ணப்பித்த படிவங்களில் முறையான தகவல் இல்லாத சந்தேகம் உள்ள படிவங்களை மட்டும் ஆய்வு செய்கிறார்கள்.

    அந்த விண்ணப்பத்திற்குரிய குடும்பத் தலைவிகள் வீடுகளில் நேரில் சென்று அதிகாரிகள் சரிபார்க்கின்றனர். 1428 ரேசன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு ரேசன் கடைக்கு ஒரு அதிகாரி வீதம் 1428 பேர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் ஒரு வாரம் இந்த பணி நடைபெறுகிறது. தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமல் கவனமுடன் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

    அதன்பின்னர் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படும்.

    இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் பெண்கள் எப்போதும் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்கள் 23-ந்தேதி முதல் ஆய்வு செய்யப்படும்.
    • சென்னையில் உள்ள 1,428 ரேஷன் கடைகளின் அடிப்படையில் 1,428 அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய சிறப்பு முகாம்கள் 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. விடுபட்டவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை)யுடன் சிறப்பு முகாம்கள் நிறைவடைவதால் இதுவரையில் மனு கொடுக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 கட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்காத ஒரு சிலர் மட்டுமே தற்போது முகாம்களில் மனு கொடுத்து வருகின்றனர்.

    சென்னையில் இதுவரையில் 12 லட்சம் பெண்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம் நாளை மாலையுடன் முடிகிறது. இனிமேல் சிறப்பு முகாம்கள் நடத்த வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் விண்ணப்பங்கள் தொடர்ந்து வாங்கப்படும். எந்த அலுவலகத்தில் மனு கொடுப்பது என்ற விவரத்தை அரசு அறிவிக்கும். தகுதி உள்ள பெண்களிடம் தொடர்ந்து விண்ணப்ப படிவம் வாங்கப்படும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்கள் 23-ந்தேதி முதல் ஆய்வு செய்யப்படும். இந்த பணி 30-ந்தேதி வரை நடைபெறும். மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்த மனுக்களில் முறையான ஆவணங்கள், தகவல் இல்லாத குடும்பத்தலைவியின் வீடுகளில் மட்டுமே ஆய்வு செய்யப்படும்.

    படிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் முழுமையாக எவ்வித சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருந்தால் அத்தகைய மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அவர்களின் வீடுகளுக்கு கள ஆய்வு நடத்த தேவை இல்லை.

    சென்னையில் உள்ள 1,428 ரேஷன் கடைகளின் அடிப்படையில் 1,428 அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்களை அதற்குரிய அதிகாரி நேரில் சென்று விசாரிப்பார். வங்கி கணக்கு தகவல், மின்சார கட்டண ரசீது, ஏற்கனவே உதவி தொகை வாங்குபவரா? என்பது போன்ற தகவல் உறுதி செய்யப்படும். சந்தேகம் இருக்கும் மனுக்களின் வீடுகளில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் உள்ள 1,428 ரேஷன் கடைகளின் அடிப்படையில் 1,428 அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்களை அதற்குரிய அதிகாரி நேரில் சென்று விசாரிப்பார்.

    சென்னை:

    மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய சிறப்பு முகாம்கள் 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. விடுப்பட்டவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை)யுடன் சிறப்பு முகாம்கள் நிறைவடைவதால் இதுவரையில் மனு கொடுக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 கட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்காத ஒரு சிலர் மட்டுமே தற்போது முகாம்களில் மனு கொடுத்து வருகின்றனர்.

    சென்னையில் இதுவரையில் 12 லட்சம் பெண்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம் நாளை மாலையுடன் முடிகிறது. இனிமேல் சிறப்பு முகாம்கள் நடத்த வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் விண்ணப்பங்கள் தொடர்ந்து வாங்கப்படும். எந்த அலுவலகத்தில் மனு கொடுப்பது என்ற விவரத்தை அரசு அறிவிக்கும். தகுதி உள்ள பெண்களிடம் தொடர்ந்து விண்ணப்ப படிவம் வாங்கப்படும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்கள் 23-ந்தேதி முதல் ஆய்வு செய்யப்படும். இந்த பணி 30-ந்தேதி வரை நடைபெறும். மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த மனுக்களில் முறையான ஆவணங்கள், தகவல் இல்லாத குடும்பத் தலைவியின் வீடுகளில் மட்டுமே ஆய்வு செய்யப்படும்.

    படிவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் முழுமையாக எவ்வித சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருந்தால் அத்தகைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அவர்களின் வீடுகளுக்கு கள ஆய்வு நடத்த தேவை இல்லை.

    சென்னையில் உள்ள 1,428 ரேஷன் கடைகளின் அடிப்படையில் 1,428 அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்களை அதற்குரிய அதிகாரி நேரில் சென்று விசாரிப்பார். வங்கி கணக்கு தகவல், மின்சார கட்டண ரசீது, ஏற்கனவே உதவி தொகை வாங்குபவரா? என்பது போன்ற தகவல் உறுதி செய்யப்படும். சந்தேகம் இருக்கும் மனுக்களின் வீடுகளில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஞாயிற்றுக்கிழமை வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.
    • சென்னையில் இதுவரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் பெண்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பப்படிவம் வீடு வீடாக வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் விடுபட்டு போனவர்களுக்கு நாளை (18-ந் தேதி) முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

    ஞாயிற்றுக்கிழமை (20-ந் தேதி) வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பப்படிவத்தை பெற்று முகாம்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப படிவங்களை இறுதி செய்து அதன் பின்னர் வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டிய பணி நடைபெற உள்ளது.

    விண்ணப்பத்தில் கொடுத்த தகவல் உண்மை தானா? உரிமைத்தொகை பெற தகுதி உடையவரா? வேறு ஏதாவது உதவித்தொகை பெறுகின்றனரா? என்பதை அதிகாரிகள் கள ஆய்வு செய்கிறார்கள். இந்த பணி அடுத்த வாரத்தில் தொடங்குகிறது.

    சென்னையில் இதுவரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். விடுபட்டவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதிகளில் நடக்கிறது. திங்கட்கிழமையுடன் இந்த பணி நிறைவடைகிறது.

    அதனை தொடர்ந்து களப்பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு பணியில் ஈடுபட்டு பயனாளிகளை தேர்வு செய்கின்றார்கள்.

    • பயனாளிகளின் இறுதிப் பட்டியலை பொறுத்து பட்ஜெட் நிதி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பணம் பெறப்போகும் பெண்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கு வதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முகாம்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    முதற்கட்ட முகாம் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடைபெற்றது.

    2-ம் கட்ட முகாம்கள் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. உரிய நாட்களில் வர இயலாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதுவரை 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து கொண்டிருக்கும் நிலையில், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வருகிற 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.

    அரசின் இந்த தளர்வு காரணமாக மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசு 2023-24-ம் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்கனவே 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தது.

    இப்போது விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கான பட்ஜெட் நிதி அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது.

    இதில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் இறுதிப் பட்டியலை பொறுத்து பட்ஜெட் நிதி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விண்ணப்பிக்கும் பெண்களின் இறுதி எண்ணிக்கைக்கு பிறகுதான் பட்ஜெட் நிதி செலவினத்தை அதிகரிப்பது குறித்து அரசு முடிவெடுக்க உள்ளது.

    அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான செலவினத்தில் அதிகரிப்பு ஏற்பட்டால் 2023-24-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் இறுதியாக மாற்றியமைக்கப்பட்ட ஒதுக்கீட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு அதை துணை பட்ஜெட்டில் இடம் பெற செய்து சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

    இதற்கிடையே இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் 14.36 லட்சம் பேரும், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தில் 4.04 லட்சம் பேரும் இந்த ஆண்டு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 2.63 லட்சம் பேரும் பயன் அடைந்து உள்ளதாக வருவாய் பேரிடர் தணிப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.

    அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1000 பணம் பெறப்போகும் பெண்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×