search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • இரண்டாம் கட்ட முகாம்களின் இறுதி இரண்டு நாட்கள் (15.8.2023, 16.8.2023) நடைபெறும்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    மாதம் ஒரு கோடி பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டுக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, மூன்று கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக இதுவரை 1 கோடியே 48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும், செயல்படுத்துவதற்கான பணிகள் குறித்தும், பயனாளர்களை முறையாக தேர்வு செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற கால அட்டவணை வெளியிடப்பட்டது 15.8.2023 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால், இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பொருட்டு, இரண்டாம் கட்ட முகாம்களின் இறுதி இரண்டு நாட்கள் (15.8.2023, 16.8.2023) நடைபெறும்.

    விடுபட்டவர்களுக்கான விண்ணப்பதிவு செய்யும் நிகழ்வை 19.8.2023 மற்றும் 20.8.2023-ந்தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களோடு இணைத்து நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களை முதல் கட்ட விண்ணப்ப பதிவு நடைபெற்ற இடங்கள் மற்றும் இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு நடை பெறும் இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் நடத்த வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் இதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, உதயநிதிஸ்டாலின், தலைமைச் செயலாளர், துறை செயலாளர் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
    • வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் என்பதால் அதையொட்டி கிராமசபை கூட்டங்களும் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 16-ந்தேதியுடன் முகாம்கள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. 2-ம் கட்ட முகாம்கள் இப்போது நடைபெற்று வருகின்றன.

    அதே சமயம் விடுபட்டவர்களின் வசதிக்காக வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் என்பதால் அதையொட்டி கிராமசபை கூட்டங்களும் நடைபெறும். எனவே வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்காக திட்டமிடப்பட்டிருந்த முகாம்கள் நடைபெறாது.

    இதற்குப் பதிலாக தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் இடங்களில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெறக்கூடிய முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரி பார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
    • விண்ணப்பதாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.7.2023 அன்று தர்மபுரியில் தொடங்கி வைத்தார். விண்ணப்பதிவு முகாம்களை 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்டமாக 20,765 ரேசன் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ந்தேதி தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2-ம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இந்த 2 முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருகிற 19-ந்தேதி, 20-ந்தேதி ஆகிய 2 நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவையேற்படின் சரி பார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது விண்ணப்பதாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது.
    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மண்டல அளவிலான பயிற்சி பட்டறை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பயிற்சி கூட்டத்தில் சென்னை, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு அறிமுக உரையாற்றினார்.

    கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 2,127 பேருக்கு ரூ.35 கோடி இடைக்கால மற்றும் இறுதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

    நிவாரணம் வழங்கும் திட்டம் 2012-ல் கொண்டுவரப்பட்டாலும் தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி 2021 மே மாதத்திற்கு பிறகு இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கிற போதே 2 நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.போக்சோ வழக்குகள் மீது நீதிமன்ற தண்டனைகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரிக்கவில்லை. குழந்தைகள் திருமணம் தொடர்பான தகவல்கள் வந்த உடன் அந்த திருமணம் நடப்பது நிறுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது. இந்த திருமணங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இருவரும் விரும்பி திருமணம் நடைபெறுவதால் போக்சோ வழக்குகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மகளிர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறார் திருமண வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விண்ணப்பங்கள் ஆப்லைன் முறையில் பெறப்பட்டு அவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான குறுந்தகவல்கள் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் பெற வேண்டிய 32 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக பெற்று தராததினால் தற்போது தஞ்சையில் நெற்பயிர்கள் கருகி உள்ளது.
    • காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் பெற்று தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

    மதுரை:

    மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது தஞ்சை டெல்டா பகுதியில் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு தான். கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் பெற வேண்டிய 32 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக பெற்று தராததினால் தற்போது தஞ்சையில் நெற்பயிர்கள் கருகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    எனவே ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் பெற்று தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

    மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கி உள்ள ரூ.1500 கோடியை தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகைக்காக பயன்படுத்தி இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ராஜ்மோகன் உள்பட பலர் இருந்தனர்.

    • விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.
    • தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பயனாளிகளுக்கு விரைவில் செல்போனில் மெசேஜ் அனுப்பப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல் படுத்தப்பட உள்ளது.

    இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விண்ணப்பங்கள் வினியோ கிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பங்களை குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் கொடுத்தனர். முதற்கட்ட முகாமில் 80 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். 2-வது கட்ட பதிவும் நேற்று தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் முதற் கட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் எவை எவை என்பதை கண்டறிய ஒவ்வொரு விண்ணப்பமாக ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது.

    இதற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் மின்னணு முறையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற தகுதியானவர்கள் குறித்த வழிகாட்டு நெறி முறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

    அதை அடிப்படையாக வைத்து விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவரா? ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் உள்ளவரா? 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் உள்ளதா? ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்களா? என்று கண்டறியப்பட்டு வருகிறது.

    இந்த விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அதனுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.

    இதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பயனாளிகளுக்கு விரைவில் செல்போனில் மெசேஜ் அனுப்பப்படும். அதை வைத்து பயனாளிகள் தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான முதல் கட்ட முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்தது.
    • 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேஷன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன. இதில் முதல் கட்டமாக 704 ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் முதல் கட்ட முகாம் முடிவடைந்தது.

    மீதமுள்ள 724 ரேஷன் கடைகளில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் 2-வது கட்ட முகாம்கள் இன்று (சனிக்கிழமை) தொடங்குகின்றன. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நகரப் பகுதி மக்களை மையப்படுத்தி இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களை வருகிற 16-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான முதல் கட்ட முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த முகாம்கள் மூலம் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டன.

    மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை தபால் அலுவலகங்களிலும் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் மனோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களின் பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம்.

    இதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்கலாம். அவ்வாறு தொடங்கப்படும் கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத் தொகை எதுவும் கிடையாது. தபால் காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பேசி-பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை கொண்டு விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் கணக்கைத் தொடங்கலாம்.

    மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத் தொகையை அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2ம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
    • ரேசன் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு முதற்கட்ட முகாம் பெரிய குளம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்றது. நாளை முதல் 2ம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை ரேசன் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

    விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டு முழுமை யாக பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப ப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு, டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் விண்ணப்ப ங்களை எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண அட்டை, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.

    ஆண்டிபட்டி வருவாய் வட்டத்தில் ஆண்டிபட்டி பிட் 1, 2 பாலகோம்பை உள்பட கிராமங்களில் நடைபெறுகிறது. போடி வருவாய் வட்டத்தில் அகமலை, பி.அம்மாபட்டி உள்பட 15 கிராமங்களில் நடைபெற உள்ளது. தேனி வருவாய் கோட்டத்தில்அல்லிநகரம், கோவிந்தநகரம் உள்பட 12 கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • முதல் கட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் கடந்த மாதம் 2-ந்தேி முதல் தொடங்கியது.
    • மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை தமிழக அரசின் மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

    ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு முதல் கட்டமாக ரூ.1000 வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவு செய்ய வசதியாக சிறப்பு முகாம்கள் 3 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடங்கியது. வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு கடந்த 24-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (4-ந்தேதியுடன்) முதல் கட்ட முகாம்கள் நிறைவு பெறுகின்றன. மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    இதுவரையில் 77 லட்சம் பேர் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். நகரம் மற்றும் கிராமப் பகுதிகளை தனித்தனியாக பிரித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    முதல் கட்ட சிறப்பு முகாம்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து விட்ட நிலையில் 2வது கட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் 5-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த முகாம் 16-ந்தேதி வரை நடக்கிறது.

    3வது கட்டமாக விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்கள் 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் 1428 ரேஷன் கடைகளில் முதல் கட்டமாக 704 கடைகளுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன.

    1730 சிறப்பு முகாம்களில் 2266 பயோமெட்ரிக் கருவிகள் மூலம் குடும்பத் தலைவியின் படிவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சிறப்பு முகாம்கள் நாளையுடன் முடிகிறது.

    நேற்று வரை 6 லட்சத்து 24 ஆயிரத்து 116 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 561 குடும்பத் தலைவிகள் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    முகாம்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 31-ந்தேதி 19,771 பேரும் 1-ந்தேதி 14,333 பேரும் நேற்று 12,235 பேரும் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் 2-வது கட்ட சிறப்பு முகாம்கள் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. 724 ரேஷன் கடை பகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கான முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 102 வார்டுகளில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல் கட்ட சிறப்பு முகாம் நிறைவடையும் நிலையில் 5-ந் தேதி முதல் 2-வது கட்ட பகுதிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. நேற்று வரையில் இரண்டாம் கட்டப் பகுதியில் 2 லட்சத்து 2 ஆயிரம் குடும்பங்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    விடுபட்ட குடும்பங்களுக்கு 3-வது கட்டமாக சிறப்பு முகாம்கள் வருகிற 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த 2 கட்டத்திலும் விடுபட்டவர்கள் கடைசி வாய்ப்பாக இதனை பயன்படுத்தி கொண்டு படிவங்களை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரையில் 53 சதவீதம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அரசின் சிறப்பு திட்ட செயலாக்க செயலாளர் தாரேஷ் அகமது கூறுகையில், தமிழகம் முழுவதும் இதுவரையில் 77 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

    வராமல் போனவர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 5-ந் தேதி முதல் 2-வது கட்ட சிறப்பு முகாம் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும்பணி தொடங்கியுள்ளது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே குடும்பத்தில் விண்ணப்பித்து இருக்கிறார்களா? என்பது போன்றவற்றை சரி பார்க்கிறார்கள்.
    • முகாம் தொடங்கி 9 நாட்கள் முடிந்துள்ள நிலையில் 51 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்ப பதிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    சென்னையில் 17 லட்சம் குடும்ப அட்டைகள் இருப்பதால் 2 கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    24-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்களில் விண்ணப்ப படிவ விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 1,727 சிறப்பு முகாம்களில் 4-ந்தேதி வரை இப்பணி நடக்கிறது.

    இதுவரையில் 6 லட்சத்து 18 ஆயிரம் விண்ணப்பங்கள் முதல் கட்டமாகவும், 53,568 படிவங்கள் 2-வது கட்டமாகவும் வழங்கப்பட்டன. நேற்று வரை 4 லட்சத்து 33 ஆயிரத்து 326 பேர் பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட விண்ணப்ப பதிவு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.

    முதற்கட்டம் முடிவடைகிற நிலையில் 2-வது கட்ட விண்ணப்ப படிவம் வழங்கும் பணி ஒரு சில இடங்களில் தொடங்கியுள்ளது. 102 வார்டுகளுக்கு உட்பட்ட 724 ரேஷன் கடைகள் பகுதியில் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதற்கிடையில் விண்ணப்பங்களை பதிவு செய்த குடும்பத் தலைவிகளின் விவரங்கள் சரி பார்க்கும் பணியும் விரைவில் தொடங்க உள்ளது. படிவத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள விவரங்கள் சரி தானா? திட்டத்தின் நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா?

    ஏற்கனவே உதவி தொகை ஏதேனும் வாங்குகிறார்களா? ஏற்கனவே பெறும் உதவித் தொகையை மறைத்து மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்து உள்ளார்களா? என்பதை ஆய்வு செய்கிறார்கள்.

    குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே குடும்பத்தில் விண்ணப்பித்து இருக்கிறார்களா? என்பது போன்றவற்றை சரி பார்க்கிறார்கள்.

    இந்த பணி வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடு வீடாக நடக்கிறது. இந்த பணியில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

    100 சதவீதம் கள ஆய்வு நடத்திய பிறகுதான் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை மாதந்தோறும் வங்கி கணக்கில் வழங்கப்படும். 2-வது கட்ட சிறப்பு முகாம்கள் முடிந்தவுடன் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சரி பார்க்கும் பணி தொடங்குகிறது. தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமலும் குடும்ப தலைவிகள் தவறான தகவல்களை கொடுத்து உதவியை பெறுவதை தடுக்கவும் சான்றிதழ் சரிபார்ப்பு தீவிரமாக நடைபெற உள்ளது.

    முகாம் தொடங்கி 9 நாட்கள் முடிந்துள்ள நிலையில் 51 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்ப பதிவு செய்து உள்ளனர். 8 லட்சத்து 47 ஆயிரத்து 654 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கி பதிவு செய்ய வேண்டும் என்ற இலக்கை மாநகராட்சி முன்நிறுத்தி செயல்பட்ட நிலையில் 4 லட்சத்து 33 ஆயிரம் பெண்கள் மட்டுமே இதுவரையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    அதன்படி நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், வேளாண் பணிகளில் ஈடுபடும் பெண்கள், மீனவ பெண்கள் உள்ளிட்டோர் உள்பட தகுதிபடைத்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கிடைக்கும் வகையில் 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கான விண்ணப்பம் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொது மக்களுக்கு வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு முகாம்களில் பொது மக்கள் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வழங்கி வருகின்றனர்.தமிழ்நாடு முழுவதும் இது வரை சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 லட்சம் பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர்.

    தகுதியானவர்களை கண்டறிய நிறைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால் குடும்பத் தலைவிகள் பலர் தயக்கத்துடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்காமல் உள்ளனர்.

    இந்த மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க கால அவகாசம் இருப்பதால் இன்னும் பல விண்ணப்பங்கள் வந்து சேரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் செல்போன் மூலம் தகவல் அனுப்பப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இதற்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான விழா ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக நடத்த அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    • 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1730 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.
    • சென்னையில் நேற்று வரை 3,73,022 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாம்கள் மூன்று கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் நடத்தப்படுகிறது.

    மொத்தம் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில், முதல் கட்டமாக 704 நியாய விலைக் கடைகளுக்கு 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 724 நியாயவிலைக் கடைகளுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக விடுபட்டவர்களுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 704 நியாய விலைக் கடைகளில், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1730 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.

    சென்னையில் நேற்று வரை 3,73,022 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. தேதி வாரியாக வருமாறு:- 24.7.2023-ந் தேதி 56,590 விண்ணப்பங்கள், 25-ந் தேதி 72,380 விண்ணப்பங்கள், 26-ந் தேதி 72,080 விண்ணப்பங்கள், 27-ந் தேதி 69,934 விண்ணப்பங்கள், 28-ந் தேதி 58,753 விண்ணப்பங்கள், 29-ந் தேதி (நேற்று) 43,285 விண்ணப் பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    ×