search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் தொகை"

    • விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் ரேசன் கடைக்கு சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
    • விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாத குடும்ப தலைவிகளுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்.

    சென்னை:

    குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி நடைமுறைக்கு வர உள்ளது.

    இதற்காக 1 கோடி பெண்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக கொடுக்கும் பணி கடந்த 20-ந் தேதி முதல் நடைபெற்று வந்தது.

    ரேசன் கடை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். இதில் கிராமப்புறங்களில் விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு எளிதில் வினியோகம் செய்து விட்டனர். ஆனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளதால் இங்கு விண்ணப்பங்களை வீடு வீடாக வழங்குவது என்பது ரேசன் கடை ஊழியர்களுக்கு பெரிய சவாலாக அமைந்து உள்ளது. இதனால் நேற்று இரவு விண்ணப்பம் கொடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது.

    தமிழ்நாடு முழுவதும் 91.36 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதாகவும் அதாவது 80 சதவீதம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

    விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் ரேசன் கடைக்கு சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம்கள் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஆகஸ்டு 4-ந் தேதி வரை இந்த முகாம்கள் நடைமுறையில் இருக்கும்.

    இதன் பிறகு 2-ம் கட்டத்துக்கான விண்ணப்பம் தேவைப்பட்டால் வீடு வீடாக வினியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தெரியாத குடும்ப தலைவிகளுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கிறார்கள்.

    இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத தகுதி படைத்த குடும்பத் தலைவிகள் நியாய விலைக்கடைகளுக்கு சென்று விண்ணப்பங்களை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
    • முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான மு.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் உரிமைத் தொகை பெற கட்டணமின்றி "சேமிப்பு கணக்கு" தொடங்க 50 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்து உள்ளது.

    தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வரும் ஜூலை 24-ந் தேதி தொடங்குகின்றன.

    இத்திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, சேமிப்பு கணக்கு துவங்க, முகாம் நடக்கும் நாளில் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, 2 பாஸ் போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை கொண்டு ஆரம்ப தொகை இல்லாமல் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் கிளைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அருகாமையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    பொது மக்கள் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி நடத்தும் இந்த முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்பு கணக்கு துவங்கி பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன.
    • தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை அமைச்சரகள் பார்வையிட வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நாளை மறுநாள் 24-ந் தேதி (திங்கட்கிழமை) தருமபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

    தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.

    கலைஞர்100-ல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மகளிர் உரிமைச் சட்டம் வருமா? வராதா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடங்கப்பட உள்ளது.
    • கலைஞரின் மகன் முதலமைச்சராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை வழங்க உள்ளார்.

    தருமபுரி:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றும் முகாமினை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வருகிற 24-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்று வரும் விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விழா நடைபெறும் மேடை, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் அரசு பள்ளி வளாகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதன் முறையாக தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெறும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாமை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    மகளிர் உரிமைச் சட்டம் வருமா? வராதா? என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்பொழுது தொடங்கப்பட உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு மகளிர் சுய உதவி குழுவை முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். தருமபுரியில் விதைத்த விதை தமிழ்நாடு முழுவதும் தற்போது ஆலமரம் போல் வளர்ந்து விருட்சமாகி உள்ளது.

    தற்பொழுது கலைஞரின் மகன் முதலமைச்சராகி மகளிர் உரிமைத் திட்டத்தினை வழங்க உள்ளார். அந்த விண்ணப்ப படிவங்கள் வழங்கி, பதிவேற்றம் செய்யும் முகாமினை தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலாக வருகிற 24-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில்தருமபுரிமாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை உள்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக ஒரகடத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பது பற்றி பேசப்பட்டது.

    மேலும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, மணிப்பூர் விவகாரம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு அது தொடர்பான தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    முதியோர் மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் ஆகும்.

    பல்வேறு துறைகளில் உள்ள பயனாளிகளுக்கு இது சென்று சேரும். தொழிலாளர் நல வாரியம், கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனாளிகள் பலன் பெறுவார்கள். கைம்பெண் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் 24-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    ரேசன் கடைகள் ஒரு அலகுகளாக வைத்துக்கொண்டு முதல் கட்டமாக 21,031 முகாம்கள், 2-வது கட்டமாக 14,194 என 35 ஆயிரத்து 925 முகாம்கள் ஆகஸ்டு மாதத்துக்குள் 3 கட்டங்களாக நடத்தப்படும்.

    விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சுமார் 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முகாம்கள் சுமூகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    • குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி:

    தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நாளை மறுநாள் 24-ந் தேதி (திங்கட்கிழமை) தருமபுரி மாவட்டம், தொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தொப்பூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதற்கட்டமாக நடைபெறும் விண்ணப்ப பதிவை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து கணினியில் பதிவு செய்வதை பார்வையிடுகிறார். அங்கேயே மகளிர் குழுவினருடன் சிறிது நேரம் கலந்துரையாடல் நடத்துகிறார்.

    அதன் பின்னர், அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்படும் மேடையில் முதலமைச்சர் பேசுகிறார்.

    பின்னர், மீண்டும் ஓமலூர் விமான நிலையத்திற்கு சென்று, சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஆதார், ரேஷன் கார்டு, வங்கி புத்தகத்துடன் மின் கட்டண ரசீது கேட்கிறோம்.

    சென்னை:

    மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம் வழங்குதல், முகாம்களில் எவ்வாறு செயல்படுதல் போன்றவை குறித்து செயல் விளக்க பயிற்சி சிந்தாதிரிப்பேட்டையில் இன்று நடந்தது.

    இதில் மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் 703 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட பகுதியில் தகுதி உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில் 15 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    முகாம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயோமெட்ரிக் கருவிகள் உள்ளிட்ட சிறப்பு முகாமில் செயல்படுவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. 500 குடும்ப அட்டைகள் கொண்ட கடைக்கு ஒரு முகாம் வீதம் நடத்தப்படுகிறது. 2,500 அட்டைகள் கொண்ட கடைகளுக்கு 5 முகாம்கள் நடைபெறும்.

    முகாம் நடைபெறும் இடங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்கவும், எலக்ட்ரானிக் பயன்பாட்டு கருவிகள் தொடர்ந்து செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 503 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு "லீடு பேங்க்" கூட்டுறவு வங்கி மூலம் கணக்கு தொடங்க உதவி செய்யப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் தான் உள்ளது.

    ஆதார், ரேஷன் கார்டு, வங்கி புத்தகத்துடன் மின் கட்டண ரசீது கேட்கிறோம். ஆனால் ஆதார், ரேஷன் கார்டு மிக அவசியம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் மின் கட்டண ரசீது கொண்டு வர வேண்டும். இல்லையென்றாலும் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.

    2,300 பயோமெட்ரிக் கருவிகள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர கையிருப்பில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆதார், வங்கி கணக்குடன் இணைப்பு செய்துள்ள செல்போன் எண் மூலம் பயாளிகளுக்கு உதவிட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரேஷன் கார்டு உள்ள நியாய விலை கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டும்தான் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
    • 21 வயது நிரம்பிய பெண்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என இதற்கு பெயரிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

    ஒரு கோடி பெண்களுக்கு முதல் கட்டமாக இந்த உதவி தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மாதம் தோறும் ரூ.1000 பெண்களின் வங்கி கணக்கில் செலுத்த ரேஷன் கடைகள் மூலம் தகுதியானர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் தமிழகம் முழுவதும் இன்று முதல் வழங்கப்படுகிறது.

    ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை கொடுத்து வருகின்றனர்.

    சென்னையில் இத்திட்டம் 2 கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 98 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று விண்ணப்பப் படிவம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. மொத்தமுள்ள 1,428 ரேஷன் கடைகளில் 700 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டன. இந்த பணி 3 நாட்கள் நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு முகாம்கள் மூலம் படிவங்கள் நிரப்பி பெறப்படுகின்றன.

    ஒரு குடும்பத்திற்கு ஒரு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. ஒருவருக்கு வழங்கிய படிவத்தை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. குடும்பத்தில் உள்ள ரேஷன் கார்டை காட்டிய பிறகு தான் படிவம் வழங்கப்படுகிறது. யாருக்கு படிவம் வழங்கப்பட்டது என்ற விவரத்தை ஊழியர்கள் பதிவேட்டில் எழுதினர். படிவத்துடன் டோக்கனும் வழங்கப்பட்டன. அதில் டோக்கன் எண் மற்றும் எந்த தேதியில் சிறப்பு முகாமுக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ரேஷன் கடை பகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீடு வீடாக சென்று வழங்கினார்கள். மகளிர் உரிமைத்தொகை படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுப்பதில் பெண்கள் ஆர்வமாக இருந்தனர். அடுத்தடுத்து வீடுகளுக்கு ஊழியர் செல்வதற்குள் ரேஷன் கார்டை முன்கூட்டியே கையில் எடுத்து வைத்து கொண்டனர்.

    ஒரு சில இடங்களில் திருநங்கைகள் விண்ணப்ப படிவத்தை கேட்டனர். அவர்களுக்கு ஏற்கனவே உதவி தொகை கிடைப்பதால் இத்திட்டத்தில் சேர முடியாது என்பதை ஊழியர்கள் விளக்கி கூறினர்.

    மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் பெற வேண்டும் என்பதில் இல்லத்தரசிகள் உற்சாகமாக உள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து உதவி தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதில் தீவிரமாக இருந்தனர்.

    படிவங்களை குடும்பத்தில் உள்ளவர்கள் பூர்த்தி செய்யலாம். அதனை செய்ய முடியாதவர்களுக்கு 24-ந் தேதி நடக்கும் சிறப்பு முகாம்களில் நிரப்புவதற்கு உதவி செய்யப்படும். ஆகஸ்ட் 4-ந் தேதி வரை நடைபெறும் முகாம்களின் மூலம் விண்ணப்பப் படிவங்கள் பெறப்படும்.

    • நாளை முதல் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் அதற்கான அடையாள சான்று ஆகியவை கடை பணியாளர் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும்.
    • தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று நடந்தது. கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் அருணா, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து கமிஷனர் விளக்கி கூறினார். அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பின்னர் மாநகராட்சி கமிஷனர் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2 கட்டமாக பிரித்து வழங்கப்படுகிறது. 200 வார்டுகளில் முதலில் 98 வார்டுகளுக்கு முதல் கட்டமாகவும் 102 வார்டுகளுக்கு 2-வது கட்டமாகவும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    நாளை முதல் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் அதற்கான அடையாள சான்று ஆகியவை கடை பணியாளர் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும். தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்கள் பூர்த்தி செய்யலாம்.

    விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்கள் எந்தெந்த நாட்களில் நடைபெறுகிறது என்ற விவரம் அந்தந்த ரேசன் கடைகளில் அடுத்த 3 நாட்களில் ஒட்டப்படும். முகாம் எங்கு நடக்கிறது என்ற விவரம் டோக்கன் மூலம் தெரியப்படுத்தப்படும்.

    அதனால் யாருக்கும் கிடைக்காமல் போய் விடும் என்ற பதட்டம், அச்சம் தேவையில்லை. சென்னையில் வீடு வீடாக விண்ணப்பம் வழங்க 17.16 லட்சம் விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர கூடுதலாக ஒரு சதவீதம் விண்ணப்பங்கள் கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

    தேவையற்ற சான்றிதழை விண்ணப்ப படிவத்தோடு இணைக்க வேண்டாம். தெருவோரம் வசிப்பவர்கள், 3 மாவட்ட எல்லை முறையாக கணக்கிடப்பட்டு யார்-யாருக்கு எந்தெந்த பகுதி வரும் என்று கலெக்டர்கள் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடை மூலம் தொடங்க ஏற்பாடு செய்யப்படும். மாநகராட்சியோடு காவல் துறை, கூட்டுறவு துறை இணைந்து இந்த பணியை மேற்கொள்கின்றன.

    3473-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மகளிர் உரிமை தொகை வழங்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். முகாம்கள் நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். முகாம் மையங்களுக்கு பயோமெட்ரிக் உள்ளிட்ட கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள 1428 ரேஷன் கடைகளில் முதல் கட்டமாக 703-ம், 2-வது கட்டத்தில் 725-ம் பிரித்து பணிகள் மேற்கொள்ளப்படும். 500 ரேஷன் கடைகளுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    523 பகுதிகளில் இந்த பணி நடைபெறுகிறது. அதனால் போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. 702 உதவி மையங்களும் செயல்படுகின்றன. மொத்தம் 2500 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ரத்தோர் கூறும்போது, "சென்னை மாநகராட்சி மூலம் இந்த திட்டப் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. மாநகர போலீஸ், ஆயுதப்படை போலீஸ், தமிழ்நாடு சிறப்பு படை ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். தேவைப்பட்டால் ஊர்க்காவல் படையை இதில் ஈடுபடுத்துவோம். கூட்டம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்" என்றார்.

    • விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை.
    • விண்ணப்ப பதிவு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

    சென்னையில் வரும் 24ம் தேதி முதல் காலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப முகாம்கள் நடைபெற உள்ளது.

    முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் 2ம் கட்ட பதிவு ஆகஸ்டு 16ம் தேதி வரையும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை.

    விண்ணப்பம் மற்றும் டோக்கன், ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீட்டிற்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட நாளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாமிற்கு எடுத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு தொடர்பாக கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையும் அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மோடி, அமித்ஷா பின்புலத்தில் தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார்.

    திண்டுக்கல்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மகளிர் உரிமை தொகை வழங்குவதில் அறிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் உதவித்தொகை முழுமையாக கிடைக்க வேண்டும். அதன்படி பயனாளர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடையாது. ஆகவே பருத்தி விவசாயிகளை காக்க தமிழக அரசு பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும்.

    மோடி, அமித்ஷா பின்புலத்தில் தமிழக கவர்னர் ரவி செயல்பட்டு வருகிறார்.

    தமிழகத்தில் தக்காளி விலை உயர்வுக்கு கடந்த சாகுபடியின்போது போதிய விலை கிடைக்காததால் தக்காளி சாகுபடி குறைந்தது. வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழக அரசு நேரடியாக தலையிட்டு தக்காளியை கொள்முதல் செய்து வியாபாரம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். மேலும் பொதுமக்களுக்கும், சரியான விலையில் தக்காளி கிடைக்கும். அப்போது தான் சம நிலை ஏற்படும். ஆகவே விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    ×