search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம் பயிற்சியாளர்"

    • சோர்வாக காணப்பட்டதால் குளிக்க சென்றபோது மயக்கம் அடைந்துள்ளார்
    • மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே உயிர் பிரிந்துள்ளது

    சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜிம் டிரெய்னராக இருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இவர் கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, உடல் சோர்வுடன் காணப்பட்டதாக தெரிகிறது. ஜிம்மில் உள்ள குளியறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் நீண்ட நேரம் வெளியில் வராததால், அங்குள்ளவர்கள் குளியலறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயமடைந்த ஜஸ்டினை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • பாரடைஸ் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஞ்சலி.

    இந்தோனேசியா, பாலியில் பாரடைஸ் பாலி என்கிற உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார் ஜஸ்டின் விக்கி (33). இவர், கடந்த 15ம் தேதி அன்று ஜிம்மில் சுமார் 210 கிலோ எடையை பார்பெல்லில் வைத்து தோல்களில் சுமந்தடி ஸ்குவாட் செய்ய முயன்றார்.

    அப்போது, எடை தாளாமல் ஜஸ்டினால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இதில், பேலன்ஸ் இன்றி பார்பெல் ஜஸ்டினின் கழுத்தில் வேகமாக விழுந்துள்ளது.

    இதில் பலத்த காயமடைந்த ஜஸ்டினை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் கழுத்தின் எலும்பிலும், இதயம் மற்றும் நுரையீரல் செல்லும் நரம்பிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, ஜஸ்டினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், பாரடைஸ் பாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவில், "ஜஸ்டின் ஒரு உடற்பயிற்சி நிபுணர் என்பதை விட மேலானவர். அவர் உத்வேகம், ஊக்கம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவின் கலங்கரை விளக்கமாக இருந்தார்" என்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளது.

    • படுகாயம் அடைந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர்.
    • பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை தியாகராய நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது32) ஜிம் பயிற்சியாளர். இவரது மனைவி கார்த்தி (32).இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் கோபிநாத்துக்கு உக்கடம் புல்லுக்காட்டைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம்பெண்ணுடன் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை கார்த்தி கண்டித்தார். இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று கோபிநாத் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இதனை அடுத்து கார்த்தி தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது கணவர், கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என சந்தேகித்தார். உடனடியாக கார்த்தி புல்லுக்காட்டில் உள்ள கணவரின் கள்ளக்காதலி வீட்டிற்கு தனது கணவரை தேடி சென்றார்.

    அப்போது வீட்டிற்குள் தனது கணவர் இருப்பதை பார்த்ததும், தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுப்பு தெரிவித்ததுடன், மனைவியை கள்ளக்காதலியுடன் சேர்ந்து தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரில சேர்த்தனர்.

    இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவரை அழைத்த இளம்பெண்ணை தாக்கிய அவரது கணவர் கோபிநாத் மற்றும் அவரது கள்ளக்காதலி மகாலட்சுமி ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகாஷ் அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி செலுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆகாஷின் இரண்டு கிட்னியும் செயல் இழந்த நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ். 25 வயதாகும் இவர் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட அவர், அதிக அளவில் ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் எதிரொலியால், ஆகாஷின் இரண்டு கிட்னியும் செயல் இழந்த நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×