search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிளை"

    • ஆத்திரம் அடைந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது.
    • 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அவ்வப்போது குடிநீர், உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி செல்லும் போது அருகில் உள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலை கிராமம் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதமாக ஒற்றை யானை பகல் நேரங்களிலேயே உலா வருகிறது. விவசாய பூமியில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கடம்பூர் அருகே ஒற்றை யானை ஒன்று அவ்வழியாக வந்த வாகனங்களை கடுமையாக துரத்தியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் வந்த ஒருவர் திடீரென யானை துரத்தி வருவதை கண்டு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு நண்பருடன் ஓடி சென்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த யானை மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது. நல்ல வாய்ப்பாக 2 பேரும் ஓடி சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    நீண்ட நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த அந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள்ளே சென்றது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள, வாகன ஓட்டிகள் அஞ்சினார்கள். 

    • மோட்டார்சைக்கிளை திருடிய காட்சி அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.
    • வாலிபர் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து மோட்டார்சைக்கிளை திருட முயன்றார். வாகனம் பூட்டு போட்டு இருந்ததை கண்டு திரும்பிய வாலிபர் அப்பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களையும் திருட முயன்றார்.

    இந்த சம்பவம் அங்கிருந்து கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் உள்ள நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் வீடுகளிலும், தெருக்களிலும் பொது இடங்களிலும் கண்காணிப்பு காமிமராக்களை பொருத்த வேண்டும். கோடை காலம் என்பதால் வீடுகளை திறந்து வைத்து உறங்க வேண்டாம். வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை பூட்டி விட்டு செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    ×