search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திர"

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகபெருமானுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
    • பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகபெருமானுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அதேபோல், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அணிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், கு.அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜா சுவாமி மற்றும் கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • முருகப்பெருமானுக்கு எத்தனையோ விழாக்கள் வைபவங்கள் நடை பெற்றாலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பங்குனி உத்திர தினம் உகந்த தினமாக கருதப் படுகிறது.
    • பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேலம் அம்மா பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரத்திருவிழா உலகமெங்கும் வாழும் தமிழக மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானுக்கு எத்தனையோ விழாக்கள் வைபவங்கள் நடை பெற்றாலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பங்குனி உத்திர தினம் உகந்த தினமாக கருதப் படுகிறது.இந்தப் பங்குனி உத்திர தினத்தில் முருகனுக்கு சிறப்பு வைபவங்கள் சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    அனைத்து முருகன் ஆலயங்களிலும், சிவ ஆலயங்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்ப டுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி- அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறும்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேலம் அம்மா பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதல் முருகப்பெருமானுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    திருமணத்தடை நீங்கவும், தொழில் வளர்ச்சி அடையவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் என பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிய முருகப்பெரு மானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் உடல் முழுவதும் எலுமிச்சம் பழத்தை குத்திக்கொண்டு முருக பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியது பக்தர்க ளிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து கோவிலில் முருகனுக்கு சிவாச்சாரி யார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவ ருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில், முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் முருகன் பக்தர்க ளுக்கு காட்சி யளித்தார். சீலநாயக்கன்பட்டி ஊத்துமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திரதை யொட்டி காலையில் மூலவருக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேலம் ஜாகீர் அம்மா பாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சாமிக்கு பால், பன்னீர், தயிர், இளநீர் உள்பட 64 வகை மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில், சேலம் பெரமனூரில் உள்ள கந்தசாமி ஆறுமுகன் கோவில், சேலம் வின்சென்ட் முத்துக்கு மாரசாமி கோவில், குமாரசாமிப்பட்டி சுப்பிரமணிய சாமி கோவில், சூரமங்கலம் முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் ஆறுபடையப்பன் கோவில் என அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

    ×