search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையம் முற்றுகை"

    • 4 நாட்களாக காத்திருந்ததால் ஆத்திரம்
    • போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் அரசு சார்பில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.

    அப்போது மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களாக அரசு அனுமதி பெற்ற வாகனத்திற்கு மட்டும் மணல் வழங்கப்பட்டு வந்தது.

    2-ந்தேதி மணல் வழங்க ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட லாரிகள் தற்போது வரை காத்துக் கொண்டி ருக்கின்றனர்.

    கடந்த 4 நாட்களாக காத்திருந்த லாரி டிரைவர்கள் ஆத்திரமடைந்து இன்று மணல் வழங்க வேண்டும் எனக்கூறி பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் லாரிகளுக்கு மட்டும் முதலாவதாக மணல் வழங்கு வதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது.
    • இப்பள்ளி யின் தலைமை ஆசிரியர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சகலகலாதரன் பணிபுரிந்து வருகின்றார்.

    இந்நிலையில் இப்பள்ளி யின் தலைமை ஆசிரியர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி யுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவி னர்கள் பள்ளிக்கு வந்து வகுப்பு ஆசிரியர்களிடம் இது குறித்து தெரிவித்தனர்.

    அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தலைமை ஆசிரியர் சகலகலாதரன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனை கேட்ட உறவி னர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து தலைமை ஆசிரியர் சகல கலாதரனுக்கு, போலீசார் முன்னிலையில் தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஆசிரியரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். அப்போது தலைமையாசிரி யருக்கு திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்டதால் சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் மேலும் ஆத்திர மடைந்த பொதுமக்கள், போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி இன்று காலை அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட உள்ள தாக அறிவித்தனர். இதை யடுத்து அசம்பா விதங்கள் நிகழாமல் இருப்ப தற்கு விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி. கோவிந்தராஜ், டி.எஸ்.பி.க்கள் உமா சங்கர், சுரேஷ் பாண்டியன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட போலீ சார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர்.

    இதையடுத்து மாணவி யின் பெற்றோர், உறவி னர்கள் மற்றும் கிராம மக்கள் 12 மணியளவில் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டனர். அவர்களை முற்றுகையிட விடா மல் தடுத்த போலீசார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகி்ன்ற னர். இதனால் திண்டிவனம் நகரப் பகுதி பதட்டமாகவும், பரபரப்பாகவும் காணப்படு கிறது

    • முன்விரோதம் காரணமாக விவசாயியை மர்மகும்பல் தாக்கியது.
    • கும்பலை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சித்தர்கள் நத்தம் ஊராட்சி மல்லியம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டதாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில் சிவக்குமார் அணைப்பட்டி யில் உள்ள உறவினர் தென்னந்தோப்பில் தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×