search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் தர்ணா"

    • சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யானார் ஊத்து, வடக்கு செழியநல்லூர் கிராமங்களுக்கு இடையே ஏராளமான விவசாய பட்டா நிலங்கள் உள்ளது.

    இந்த நிலங்களில் திடீரென இரவோடு இரவாக தனியார் நிறுவனம் சார்பில் சோலார் அமைக்கும் பணிகள் தொடங்கியதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்தும் சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சோலார் பேனல் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான விவசாய நிலங்களிலும், இப்பகுதிகளில் உள்ள சிறு ஒடை, ஊரணிகளை அழித்தும் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை, வருவாய்துறையில் புகார் தெரிவித்தும் அதுகுறித்து நடவடிக்கை இல்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார்.
    • புளியங்குளத்தில் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு அருகே உள்ள புளியங்குளத்தின் மொத்த பரப்பளவு சுமார் 60 ஏக்கர் ஆகும். இந்தக் குளத்தை நம்பி 50 கிராம பொதுமக்கள் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.

    புளியங்குளத்தில் சித்தரேவு மற்றும் நரசிங்கபுரத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர். இதுகுறித்து அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சார்பாக சன்மகா என்பவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார்.

    அதன்படி சித்தரேவு கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், வருவாய் அலுவலர் கணேசன், சர்வேயர் ராமு மற்றும் அதிகாரிகள் புளியங்குளத்தில் சித்தரேவு பகுதி மக்கள் செய்திருந்த ஆக்கிர மிப்புகளை அகற்றினர். ஆனால் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டிருந்த ஆக்கிர மிப்புகளை அகற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆத்தூர் தாலுகா அலுவலக நுழைவாயில் பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் புளியங்கு ளத்தில் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

    ×