search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் கடல்"

    3 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகி யோர் மாயமாகி விட்டனர்.

    குளச்சல் :

    குளச்சலை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 25-ந்தேதி 16 மீனவர் கள் மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆன்றோ, ஆரோக்கியம், பயஸ் ஆகி யோர் மாயமாகி விட்டனர்.

    அவர்களை மீனவர்களும் கடற்படையினரும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மீனவர் பயஸ் பிணமாக மீட்கப்பட்டார். 10 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர் ஆன்றோ உடல் மீட்கப்பட்டது.

    ஆரோக்கியம் கதி என்ன? என்று தெரியாத நிலை நீடித்தது. இந்நிலையில் நேற்று மாலை ராமேசுவரம் அருகே உள்ள நடுத்துறை பகுதியில் ஒரு உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஆரோக்கியத்தின் உறவினர்கள் ராமேசுவரம் சென்றனர்.

    இதற்கிடையில் கரை ஒதுங்கிய உடலை ராமேசு வரம் கடலோர காவல் படையினர் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அந்த உடல் ஆரோக்கியம்தான் என்பது உறுதியானது. அவரது கையில் ஏற்கனவே பிளேட் பொருத்தி இருந்ததன் மூலம் உடல் அடையாளம் காணப்பட்டதாக தெரிகிறது.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொடர் கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது.
    • கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ஒவ்வொரு சன்னதியாக சென்று வழிபட்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் பல மாநில பக்தர்கள் தரிசனம் செய்யும் புனித திருத்தலமாக போற்றப்படுவது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில். காசிக்கு நிகராக இந்த கோவில் விளங்குவதாலும், ராமர் வழிபட்ட கோவில் என்பதாலும் இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும், தங்களது முன்னோர்களுக்கு பித்ரு வழிபாடு செய்யவும் வருகை தருகின்றனர்.

    தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொடர் கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது.

    இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வர தொடங்கி விட்டனர். இன்று காலை ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்தனர். கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ஒவ்வொரு சன்னதியாக சென்று வழிபட்டனர்.

    அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடினர்.இந்த நிலையில் காலையில் திடீரென அக்னி தீர்த்த கடற்பகுதியில் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடினார்கள். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.

    ×