search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் மாயம்"

    • சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார்.
    • சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார்.

    'கொசுவுக்கு பயந்து வீட்டைகொளுத்துன' பழமொழியை நாம் கேள்விபட்டு இருக்கோம். அதுபோல திருடனுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை கடை உரிமையாளர் மறைத்து வைத்திருந்தார். இதனை அறியாத அவரது உறவினர் அந்த அரிசி மூட்டையை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சண்முகா அரிசி மண்டி  உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் சண்முகம். இவர் கடையில் வசூலான ரூ.15 லட்சம் பணத்தை திருட்டுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.10 லட்சத்தை ஒரு பையிலும், ரூ.5 லட்சத்தை மற்றொரு பையிலும் போட்டு மறைத்து வைத்து மற்ற அரிசி மூட்டைகளுடன் சேர்த்து வைத்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலையில் சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.15 லட்சம் மறைத்து வைத்திருந்த அரிசி மூட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார். இதுகுறித்து விசாரித்த போதுதான், விபரம் தெரியவந்தது. உடனே வாடிக்கையாளரின் முகவரி தேடி சென்று விசாரித்த போது அந்த மூட்டைக்குள் ரூ.10 லட்சம் தான் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் உரிய முறையில் விசாரித்து ரூ.5 லட்சத்தை மீட்டு தர வேண்டும் என்று சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கடந்த பிப்ரவரி மாதம் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
    • போலீசார் பெரும்பாக்கத்தில் வசித்து வரும் வேலைக்கார பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிப்பவர் அனீஸ்ரெட்டி. இவர் தனியார் நிறுவனத்தில் கன்சல்டன்டாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று தனது வியாபார தேவைக்காக 25 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து பீரோவில் வைத்திருந்தேன்.

    பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 2012-ம் ஆண்டு முதல் தனது வீட்டில் அப்பாசாமி தெருவில் வசித்து வந்த பழனியம்மாள் (41) என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்ததாகவும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் பணிக்கு வர வில்லை.

    ஆகையால் அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பெரும்பாக்கத்தில் வசித்து வரும் வேலைக்கார பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×