search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச நடனம்"

    • சினிமா பாடல்களுக்கு திருநங்கைகள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.
    • இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் பாலாப்பூரை சேர்ந்தவர் முகமது அமீர் தொழிலதிபர் குடும்பத்தில் நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு திருநங்கைகளை அழைத்து இருந்தார்.

    இந்த விழாவில் சினிமா பாடல்களுக்கு திருநங்கைகள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் நடனமாடிய திருநங்கைகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோ மூலம் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மதுபான கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • கைதானவர்களில் பலர் மது போதையில் இருந்தனர்.

    ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான மதுக்கூடங்கள் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.

    மது போதையில் பொழுதை கழிப்பவர்களுக்கு பஞ்சராஹில்ஸ் பகுதி சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. இங்குள்ள தனியார் மதுபான கூடத்தில் ஆண் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை நடனமாடும் பணியில் அமர்த்தினர். இந்த பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த மதுபான கூடத்தில் கூட்டம் அலைமோதியது.

    நேற்று இரவு சனிக்கிழமை என்பதால் அதிகளவில் கூட்டம் இருந்தது. ஆபாசமாக நடனமாடிய பெண்களுடன் வாலிபர்கள் உற்சாகமாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த 42 பெண்கள் உட்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபான கூடத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்த கட்டிடத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். கைதானவர்களில் பலர் மது போதையில் இருந்தனர். பெரும் பணக்கார வாலிபர்களும் அதில் இருந்தனர்.

    இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்
    • ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் பைரேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 'ஹோலி' கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.இதில் வாலிபர்கள் பேண்ட்-ஐ கழற்றி நிர்வாணமாக நடனம் ஆடினார்கள்.

    இந்த ஆபாச நடனத்தை அப்பகுதியை சேர்ந்த சூரஜ்பால் (வயது 35) என்பவர் தட்டிக் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆபாச நடன கும்பல் சூரஜ்பாலை கல், கம்பு, இரும்புக்கம்பி ஆகியவற்றால் தாக்கினார்கள்

    இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆபாச நடனம் ஆடிய தட்டிக்கேட்ட நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவிழா அன்று இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 24-ந் தேதி திருவிழா நடந்தது. திருவிழா அன்று இரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது.

    இந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடியதாக கோவை அம்மன் நகர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு-புதுச்சேரி நடன கலைஞர் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் என்கிற அஜித் ராஜா என்பவர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரில், கோர்ட்டு உத்தரவை மீறி சம்பந்தப்பட்ட கோவிலில் நிர்வாக கமிட்டியினரால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆபாச நடனம் நடந்துள்ளது. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உத்தரவின் பேரில், வழக்குபதிவு செய்த முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் திருமுருகன், ஆனந்தன், தலைமை காவலர் ஆத்மநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் நடத்தியது தொடர்பாக இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் (வயது 65), வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கீழக்காடு கிராமத்தை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோபிநாத் (31), நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆபாச நடனம் ஆடிய ரவிக்குமார் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர், கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை தொடர்ந்து அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
    • வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது.

    வேலூர்:

    வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை தொடர்ந்து அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    இந்த திருவிழாக்களில் சாமி ஊர்வலத்தின் போது கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சாகச நிகழ்ச்சிகள், மேள வாத்தியங்கள் என பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    தற்போது வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது.

    நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளிலும் இந்த கலைநிகழ்ச்சி ஏட்டிக்கு போட்டியாக நடத்துகின்றனர்.

    இதனை காண சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி, ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரவு 7 மணி அளவில் தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 25 பேர் நடனமாடினர். இதனை காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இந்த நடன கலை நிகழ்ச்சியில் பெண்கள் அரை, குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடியது மட்டுமின்றி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றையும் செய்து காண்பித்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் முகம் சுழித்ததோடு, ஆபாசமாக இருப்பதாக கூறி நிகழ்ச்சியின் பாதியில் எழுந்து சென்றனர்.

    தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் இருந்தும் போலீசார் அதனை கண்டும், காணாமல் இருந்தனர். மேலும் போலீசாரும் பார்வையாளர்கள் போல் நடன நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகில் நின்று ஆபாசமாக நடனத்தை கண்டு ரசித்தனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் :-

    திருவிழாவில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக தெருக்கூத்து நாடகம், வில்லுப்பாட்டு, இன்னிசை கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது 'ரெக்கார்டு டான்ஸ்' என அழைக்கப்படும் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சியும் அதிகளவில் நடத்தப்படுகிறது.

    திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த நடன நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் மற்றும் பாரம்பரிய விழிப்புணர் பாடல்கள் இடம் பெற்றிருக்கும் என நம்பி வந்தோம்.

    ஆனால் இங்கு ஆபாச நடன நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. பெண்களே கையில் போதை பொருட்களை கையில் வைத்து சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்று அநாகரிகமாக நடனமாடினர்.

    இது போன்ற நடன நிகழ்ச்சிகளால் அடுத்த தலைமுறை போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் அபாயநிலை உள்ளது என்றனர்.

    ×