search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பாராளுமன்றம்"

    • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராட்டம்
    • பாராளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கக்கூடாது, சாவர்க்கரின் பிறந்தநாளில் திறப்பது சரியல்ல.. என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும், திட்டமிட்டபடி திறப்பு விழா ஏற்பாடுகள் நடக்கின்றன.

    இது ஒருபுறமிருக்க, போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப்போவதாக கூறி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே டெல்லயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைப்பகுதியான திக்ரி எல்லை, சிங்கு எல்லை பகுதி அருகே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாராளுமன்றம் அருகே போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முன்னதாக இன்று காலை புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு ஹோமம் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடு.
    • இன்று பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

    டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் செயல்படுவதற்கு கடுமையான இட பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் அந்த பாராளுமன்றம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அதில் புதிய நவீன வசதிகள் எதையும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது.

    இதனால் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார். அதன்படி தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    அந்த இடத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின. 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒரே நேரத்தில் 1,272 எம்.பி.க்கள் அமர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகள் 5 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுவதற்கு சுமார் 1,200 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் கருதப்படுகிறது. பழைய பாராளுமன்றம் வட்ட வடிவில் அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டிட கலை பாணி அதில் காணப்படுகிறது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இன்று சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக கூட்டாக அறிவித்துள்ளன. என்றாலும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய பாராளுமன்றம் திறக்கப்படும்போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது.

    அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும். அந்த செங்கோல் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் வழங்கப்பட்டு, பிறகு ஆதீனம் மூலம் நேருவின் கைக்கு வந்தது. அப்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. இத்தகைய சிறப்புடைய அந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படும் அந்த செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி முடிவு செய்து உத்தரவிட்டார்.

    முன்னதாக இன்று காலை புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு ஹோமம் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவை முடிந்ததும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்று பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

    இந்த விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். பா.ஜ.க. வின் தோழமை கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சிவசேனா கட்சிகள் பங்கேற்கின்றன. எதிர்க்கட்சிகளில் பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலிதளம் உள்பட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ள வருகின்றன.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
    • தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமிழன்டா என்ற ஹேஷ்டேக் உடன் டுவீட் செய்துள்ளார்.

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.

    #தமிழன்டா

    தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
    • சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.

    புதுடெல்லி:

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது.

    டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.

    இதற்கிடையே, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த செங்கோலை வழங்க திருவாவடுதுறை ஆதீனம் தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றடைந்தனர்.

    இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழுவினர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
    • பல கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    பொள்ளாச்சி:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    தொலைநோக்கு பார்வையுடன் அதிக வசதிகளுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாரதிய ஜனதா அரசு கட்டியுள்ளது. இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றன. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    பல கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் கவர்னர்களை அழைத்தது கிடையாது. பெரும்பான்மையுடன் இருக்கும் பிரதமர் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதில் எந்த தவறும் இல்லை. தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்ற அறிக்கை வருத்தமளிக்கிறது.

    வருமான வரித்துறை சோதனை என்பது பொதுவானது. வருமான வரித்துறை அதிகாரிகள் வாகனங்கள் மீதும், கார்கள் மீதும் தாக்குதல் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 34 திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
    • ஜனாதிபதி திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 34 திட்டங்கள் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களிலும் நேரடியாக கள ஆய்வு மேற் கொண்டு பணிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்து மத்திய அரசுடன் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடு தான் இயங்கி வருகிறோம். சமீபத்தில் கவர்னருடன் ஏற்பட்ட சர்ச்சையின் போது கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக விளக்கினார்.

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக உள்ளது. ஜனாதிபதி திறந்து வைத்தால் தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது முதலமைச்சரின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், துறை செயலாளர் அபூர்வா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் காஞ்சனாசுதாகர் உடன் இருந்தனர்.

    இதேபோல் ஆவடி, அன்னனூர், கோணம்பேடு அரசு உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம், ராமாபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த இடங்களையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
    • புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் வரும் 28-ம் நாள் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவை தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிக்க உள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் அதிகாரப்பூர்வ தலைவர் குடியரசு தலைவர் தான். எனவே அவர் தான் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும். ஆனால் தன்னுடைய பெயர் வரலாற்றில் நிலைக்க வேண்டும் என்ற ஆசையால் ஜனநாயக மரபை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

    எனவே புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் 28-ந்தேதியை துக்க தினமாக கடைபிடிப்போம். அந்த நாளில் கட்டிடத்தை திறப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. சவார்கரின் பிறந்த நாளன்று பாராளுமன்றம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்பு கட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்துவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
    • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

    பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதேபோல், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு ஒய்ஆர்சிபி கலந்து கொள்ளும் என்றார்.

    மேலும் இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரமாண்டமான, கம்பீரமான மற்றும் விசாலமான பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அவர், இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான பற்று அல்ல என்றும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    ×