search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூனா கார்கே"

    • ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடருவார் என அறிவிப்பு.
    • வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

    கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும்.

    இந்த சூழலில், ராகுல் காந்தி இந்த இரு தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்பியாக தொடருவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

    சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடருவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.

    இதனால், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுசு் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதன்மூலம், பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

    இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு, அன்பு என்றும் மறக்க முடியாது என வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    • பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
    • ராகுல் காந்தி இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடித்தால், நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்தி தான் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," தேர்தலுக்கு முன் இரண்டு 'பாரத் நீதி யாத்திரையை வழிநடத்தியவர் ராகுல் காந்தி. யாத்திரையின்போது விரிவான பிரச்சாரம் செய்தவர். பிரதமர் மோடியை நேரடியாகத் தாக்கியவர் ராகுல் காந்தி. அவரே உயர் பதவிக்கான பொறுத்தமான தேர்வு.

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

    பலரால் உயர் பதவிக்கான யதார்த்தமான ஒருமித்த வேட்பாளராக ராகுல் காந்தி பார்க்கப்படுகிறார்" என்றார்.

    இதேபோல், " பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் ராகுலுக்கு தனது பிரச்சார மேலாளராக ஒருவர் தேவைப்பட்டார். அதனால் அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்" என்றார்.

    • ஹேமந்த் சோரனை கைது செய்தீர்கள், ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை?
    • தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மல்லிகார்ஜூனா கார்கே கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலமைப்பும் ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளன. மக்களும் ஆபத்தில் உள்ளனர். உங்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றால், நீங்கள் அடிமைகளாக இருப்பீர்கள். மோடி இந்த முறை வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் எந்தத் தேர்தலும் நடக்காது.

    ஹேமந்த் சோரனை கைது செய்தீர்கள், ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை?

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை "துஷ்பிரயோகம்" செய்வதை நிறுத்துவதற்காக இரு தொழிலதிபர்களிடமிருந்து "டெம்போ லோடு" பணத்தை பெற்றதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.

    எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத்தியில் பாஜக தலைமையிலான அரசால் கைது செய்யப்பட்ட இந்திய அணி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.

    இந்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை.

    பிரதமர் மோடி சர்வாதிகாரத்தை நம்புகிறார். எதிர்க்கட்சிகள் அவருக்கு தேர்தலில் பாடம் கற்பிக்கும்.

    தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.

    முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இந்திய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லாததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை அழைக்க பிரதமர் மறக்கவில்லை, ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்க தவறிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நேற்று ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

    ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர், "காங்கிரஸ் அளிக்கும் புதிய வாக்குறுதிகளில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக தான் ஆக்கும்" என்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், " பிரதமர் மோடி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவார். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் வாக்குறுதிகள் அளித்தால் அது பிரதமருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது" என்றார்.

    ×