search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரமண்டல் விரைவு ரெயில்"

    • தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
    • காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:-

    ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.

    தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

    ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

    மேலும், இவ்விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • சிகிச்சையிலிருந்த 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 382 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • ரெயில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.

    நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையிலிருந்த 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 382 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ரெயில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    srcodisha.nic.in, bmc.govt.in, osdma.org ஆகிய இணையதளங்களில் சிகிச்சை பெறுவோர் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    • நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.
    • விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது.

    ரெயில் விபத்து நடந்து 36 மணிநேரம் ஆனநிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது.

    நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த இடத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது:-

    ரெயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பாதையில் ரெயில்கள் ஓடத் தொடங்கும் வகையில் புதன்கிழமை காலைக்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்கும் வகையில் நடைபெறுவதாக கூறினார்.

    இதனிடையே விபத்துக்குள்ளான ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவர்களின் நிலை என்ன என்பதை அறிய ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு குழு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ஒடிசா:

    கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது.

    அதிவேகத்தில் சென்ற போது நடந்த இந்த விபத்தால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இந்தியா முழுவதும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அவர்களது ஆன்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் இந்த கோர ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பூரி கடற்கரையில் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கிடப்பது போன்ற மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அந்த மணல் சிற்பம் முன்பு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டி இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளதாக மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.

    இதேபோல் மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரியில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூரில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு வரிசையாக நின்று கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    திருவண்ணாமலை கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இதேபோன்று, புதுக்கோட்டை, மதுரை, சென்னை, கோவை, நெல்லை உள்பட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • ரெயில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சினை இருந்து வருகிறது.
    • ‘கவாச்’ தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாட்டை ஏற்கனவே ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் தானே சோதித்துப்பார்த்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஒடிசாவில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் சங்கிலித்தொடர் விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருப்பது நாட்டையே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த ரெயில் விபத்தை 'கவாச்' (கவசம்) என்னும் அதிநவீன தொழில்நுட்ப அமைப்பின் மூலம் தடுத்து இருக்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு விபத்து நடந்த தடத்தில் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்க அம்சம் ஆகும். டிரைவரின் தவறினாலோ அல்லது பிற காரணங்களினாலோ நேருகிற ரெயில் விபத்துகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி முறையில் இயங்குவது ஆகும். இது இந்திய ரெயில்வேக்காக 'ஆர்.டி.எஸ்.ஓ.' என்று அழைக்கப்படுகிற ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிலை அமைப்பு, இந்தியாவின் 3 விற்பனை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.

    ரெயில் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சிக்னல் பிரச்சினை இருந்து வருகிறது. ரெயிலை இயக்கும் டிரைவர் சிக்னலை தவற விடுகிறபோது, இந்த அமைப்பு அவரை உஷார்படுத்தி விடும்.

    மேலும், 2 ரெயில்கள் அதிவேகமாக வரும்போது தடம் மாறி மற்றொரு ரெயிலுடன் மோதும் வாய்ப்பு ஏற்படுமானால் தன்னிச்சையாகவே ரெயிலின் வேகம் குறைக்கும் தொழில்நுட்பத்தை இந்த 'கவாச்' அமைப்பு கொண்டுள்ளது. ரெயிலை டிரைவர் இயக்கி வருகிறபோது, அவர் பிரேக் போடத்தவறினாலும், தானியங்கி முறையில் இது பிரேக் போட்டு ரெயிலின் வேகத்தை குறைக்கும்.

    இந்த 'கவாச்' தொழில்நுட்ப அமைப்பின் செயல்பாட்டை ஏற்கனவே ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் தானே சோதித்துப்பார்த்துள்ளார். அந்த சோதனை வெற்றி கண்டிருக்கிறது. இது குறித்து அப்போது அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் அவர், "கவாச் அமைப்பினைக் கொண்டு மோதல் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த 'கவாச்' அமைப்பானது, 380 மீட்டர் தொலைவில் மற்றொரு லோகோ முன்னால் வந்தபோதே, லோகோவை தன்னிச்சையாக நிறுத்திவிட்டது" என கூறி இருந்தார்.

    ஆனால் நேற்று முன்தினம் விபத்து நடந்த பாலசோர் தடத்தில் இந்த 'கவாச்' அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று இந்திய ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா உறுதிப்படுத்தி உள்ளார். இந்த 'கவாச்' தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு, நாட்டில் 1,455 கி.மீ. தடங்களில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

    • ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. விபத்தில் 261 பேர் பலியாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    இதையடுத்து ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கோர விபத்து எப்படி நடந்தது? மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரண விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். ரெயில் விபத்து குறித்து பெண் அதிகாரி ஒருவர் மோடியிடம் விளக்கினார்.

    இந்த நிலையில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார்.

    விபத்து நடந்த பஹானாகா பஜார் ரெயில் நிலைய பகுதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் ரெயில்வே அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

    பின்னர் அங்கிருந்து கட்டாக் மருத்துவமனைக்கு செல்லும் பிரதமர் அங்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    ×