என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமிங்கல எச்சம்"
- வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கல எச்சம் வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது.
- கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் பழுப்பு நிற மெழுகு பொருள் திமிங்கல எச்சம் (அம்பர்கிரிஸ்) என்று அழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க அம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச சந்தையில் திமிங்கல எச்சத்திற்கு அதிக விலை கிடைக்கிறது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கல எச்சம் வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பலர் திமிங்கல எச்சத்தை கடத்தி வருகின்றனர்.
அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சூரில் திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் போலீசாரின் சோதனையில் சிக்கினர். திருச்சூர் நகர பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்தது. அதனை பாஜின்(வயது31), ராகுல்(26), அருள்தாஸ்(30) ஆகிய 3 பேர் காரில் கடத்தி கொண்டு சென்றனர். அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக அவர்கள் கடத்தி கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து திமிங்கல எச்சத்தை கடத்தி கொண்டு சென்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 5 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமிங்கல எச்சத்தை கடத்தியவர்கள், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காகவும், மேலும் வாங்க வருபவர்கள் தங்களை அடையாளம் காணுவதற்காகவும் ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் காரில் வந்திருக்கின்றனர். இருந்தபோதிலும் கடத்தல்காரர்கள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.
- பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விருதுநகர்:
கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலத்தின் எச்சம் மருந்துகள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகிறது. இவைகள் சர்வதேச அளவில் அதிக அளவில் விலை போகிறது. எனவே திமிங்கல எச்சம் கடத்துவது அதிகரித்து உள்ளது.
குறிப்பாக கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமிங்கல எச்ச கடத்தல் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லையில் இருந்து விருது நகருக்கு திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து மதுரை வன காவல் நிலைய உதவி வன பாதுகாவலர் மனிஷா அலிமா, வன பாதுகாப்பு படையை சேர்ந்த மலர்வண்ணன், வனவர் செந்தில் ராகவன் தலைமையிலான வனத்துறையினர் விருதுநகரில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சில இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தர்மராஜ் (வயது 45) என்பவர் திமிங்கல எச்சம் கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
தர்மராஜ் கொடுத்த தகவலின்பேரில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதியில் அவரது நண்பர் மனோகரன் என்பவர் நடத்திவரும் பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை பறிமுதல் செய்த வனத்துறையினர் தர்மராஜ், மனோகரன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பால்பாண்டி, நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், பத்ம குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திமிங்கல எச்சம் எங்கிருந்து யாருக்காக கடத்தப்பட்டது? தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்