என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரிசி கொம்பன்"
- அரிசி கொம்பன் யானை உலா வரும் காட்சிகள் அவ்வப் போது சமூக வலைதளங்களில் பரவியது.
- கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த வனத்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
கேரள மாநிலம் இடுக்கி சின்னக்கனால் பகுதியில் அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்தது. இதைய டுத்து அரிசி கொம்பன் யானையை தமிழ்நாடு கொண்டு வரப்பட்டு பெரியார் புலிகள் காப்ப கத்தில் முல்லைக்கொடி வனப்பகுதியில் விட்டனர். அதன்பிறகு அரிசி கொம்பன் யானை கம்பம் பகுதியில் சுற்றி திரிந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் அட்டகாசம் செய்து வந்ததையடுத்து மயக்க ஊசி செலுத்தி யானையை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.
கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி அப்பர் கோதையாறு பகுதியில் அரிசிகொம்பன் யானை விடப்பட்டது. யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானையை குடியிருப்பு பகுதிகளுக்குள் விடாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்கா ணிப்பு பணியை மேற் கொண்டனர். அரிசி கொம்பன் யானை உலா வரும் காட்சிகள் அவ்வப் போது சமூக வலைதளங்களில் பரவியது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரிசிகொம்பன் யானை மெலிந்த நிலையில் காணப்படுவதாக புகைப்ப டம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை தற்போது வனப்பகுதியில் புத்துணர்ச்சி யுடன் உலா வர தொடங்கி யுள்ளது. அரிசி கொம்பன் யானை வசித்து வரும் பகுதியில் 2 குட்டி யானைகள் உட்பட 10 யானைகள் உள்ளது.
அந்த யானைகள் கூட்டத்துடன் சேர்ந்து அரிசி கொம்பன் யானை உலா வருகிறது. குற்றியாறு அணைப்பகுதி, அப்பர் கோதையாறு, முத்துக்கு ளிவயல் பகுதிகளில் தற்போது அரிசி கொம்பன் யானை சுற்றி வருகிறது.
யானை கூட்டத்துடன் இணைந்து விட்டதால் அரிசி கொம்பன் யானையை கண்காணிக்க நியமிக்கப்பட்டி ருந்த வனத்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
- ரேடியோ காலர் சிக்னலை கண்காணிக்கும் 2 மாவட்ட வன அதிகாரிகள் தகவல்
- அரிசி கொம்பனுக்கு எதிராக பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
கேரள-தமிழக மக்களை அச்சுறுத்திய அரிக்கொம் பன் யானை வனத்துறை யினரால் பிடிக்கப்பட்டு, காட்டில் விடப்பட்ட பிறகும் அதன் மீதான அச்சம் மக்களிடம் குறைந்த பாடில்லை. இதற்கு கார ணம் யானை விடப்பட்ட காட்டுப்பகுதி தான்.
திருநெல்வேலி மாவட் டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு வனத்தில் அரிசி கொம்பன் யானை இறக்கி விடப்பட்டுள்ளது. வனத்து றையின் கட்டுப்பாட்டில் இருந்து வனத்திற்குள் சுதந்திரமாக சென்ற அரிசி கொம்பன், அங்கேயே தங்குமா? அல்லது இருப்பிடத்தை மாற்றிச் செல்லுமா? என்பது தான் மக்களின் தற்போதைய அச்சத்திற்கு காரணம். இருப்பிடத்தை மாற்ற நினைக்கும் அரிசி கொம் பன், குமரி மாவட்டத் திற்கோ, கேரள வனத்திற்கோ அல்லது நெல்லை மாவட்ட வனத்தில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிக்கோ செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாவது தான் அங்கு வசிக்கும் மக்களிடம் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவே அரிசி கொம்பனுக்கு எதிராக பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று குமரி மாவட்டம் மலையோர பகுதியான தச்சமலையில் வசிக்கும் பழங்குடியின மக்கள், யானையின் இருப்பிடத்தை மாற்ற வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்தினர். கடந்த 2 நாட்களாக மலை யோரங்களில் வசிக்கும் மக்கள் 2 மாவட்டங்களிலும் போராடிவரும் நிலையில், மக்கள் அச்சப்பட தேவை யில்லை. அரிசி கொம்பன் வனத்தை விட்டு வெளியே வர வாய்ப்பு இல்லை என வனத்துறை தெரிவித்து வருகிறது.
இது தொடர்பாக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறுகையில்,
அரிசி கொம்பன் ஆரோக்கியமாகவும், சகஜமாகவும் இருப்பது அதனை கண்காணித்து வருவதன் மூலம் தெரிய வந்துள்ளது. அரிசி கொம்பன் விடப்பட்ட வனத்தில், 6-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அந்தக் கூட்டத்துடன் விரைவில் அரிசி கொம்பன் இணைய வாய்ப்புள்ளது என நம்புகிறோம்.
மேலும் அந்தப் பகுதியில் பசும்புல், யானைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் இருப்பதால் தற்போது வரை அரிசி கொம்பன் அங்கு சுதந்திரமாக சுற்றி வருகிறது. அது வாழ்வதற்கு உகந்த சூழல் இருப்பதால், அரிசி கொம்பன் அந்த பகுதியை விட்டு வெளியேற வாய்ப்புகள் இல்லை என்றார். இருப்பினும் அரிசி கொம்பன் நட மாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வும் தற்போது வரை விடப்பட்ட இடத்திலேயே சுற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே கருத்தை இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமன் சுகுமாரும் உறுதிதப்படுத்தி உள்ளார். அப்பர் கோதையாறு பகுதி, யானைகள் வசிக்க சிறந்த இடம் ஆகும். எனவே அரிசி கொம்பன், அங்கு ஏற்கனவே இருக்கும் யானை கூட்டத்துடன் விரைவில் இணைய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சூழலில் அரிசி கொம்பனின் நடமாட் டத்தை, குமரி- திருநெல்வேலி மாவட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அரிசி கொம்பன் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம், அது எங்கு செல்கிறது? எப்படி உள்ளது? என்பதை அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதா வது:-
அரிசி கொம்பன் விடப்பட்ட பகுதியில் வனத்துறையினரும் மருத்துவக் குழுவினரும் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். 2 துணை இயக்குனர்கள் மேற்பார்வையில், 4 வன அதிகாரிகள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். அரிசி கொம்பன் கழுத்தில் பொருத்தப்பட் டுள்ள ரேடியோ காலர் சிக்னல், அம்பாச முத்திரம் வனத்துறை அலுவல கத்தில் உள்ள கருவிக்கு கிடைத்து வந்தது. இந்த கருவியை குமரி மாவட்ட வனத்து றைக்கு கேட்டிருந்தோம். இன்று காலை அந்த கருவி நமக்கு கிடைத்துள்ளது. எனவே ரேடியோ காலர் சிக்னல், நமக்கும் கிடைக்கி றது. அதனை கண்காணித்து அரிசி கொம்பன் இருப்பி டத்தை கண்காணித்து வருகிறோம். இன்று காலை வரை விடப்பட்ட இடத்திலேயே அரிசி கொம்பன் சுற்றி வருவது உறுதி செய்யப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 36 மணி நேரமாக அரிசி கொம்பன் நடமாட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. எனவே வனப்பகுதி மக்கள் அச்சப்பட தேவை யில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்