search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் வக்கீல்"

    • உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும்.
    • போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவை சேர்ந்த 29 வயது பெண் வக்கீல் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 3-ந்தேதி அழைப்பு வந்தது. அதில் கூரியர் நிறுவனமான பெடெக்ஸ் நிறுவன ஊழியர் பேசுவதாகவும், உங்களது முகவரியிட்டு அனுப்பப்பட்ட பார்சலில் 140 கிராம் போதை பொருள் இருந்ததாகவும், உங்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக கூறி அழைப்பை வேறு ஒரு நபருக்கு திருப்பிவிட்டார்.

    இதையடுத்து மும்பை சி.பி.ஐ. அதிகாரி பேசுவதாக கூறி தனது பெயர் அபிஷேக் சவுகான் என அடையாளப்படுத்திக் கொண்டு அழைப்பில் இணைந்தார். அப்போது அவர் நீங்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு உள்ளீர்கள். வழக்கில் இருந்து விடுவிக்க நாங்கள் சொல்வதை போல் செய்யுங்கள் என கூறி அந்த பெண்ணிடம் ஸ்கைப் பதிவிறக்கம் செய்து சாட்டிங் தொடங்கும்படி கட்டாயப்படுத்தினார். மேலும் உங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் நீங்கள் செல்போன் வீடியோ அழைப்பை ஆன் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து கடந்த 3-ந் தேதி மதியம் 2.15 மணி முதல் 5-ந் தேதி அதிகாலை 1.15 மணி வரை சுமார் 35 மணி நேரத்தில் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் மர்ம நபர்கள் பயத்தைகாட்டினர். அப்போது அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் போதைப்பொருள் சோதனைக்காக ஆடைகளை அகற்ற வேண்டும் என கூறினார். ஏறக்குறைய 36 மணி நேரம் நீடித்த ஒரே அழைப்பில், அந்த பெண் நிர்வாணமாக பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்டார். ரூ. 15 லட்சம் கொடுத்தால் உங்களை விட்டு விடுவதாக அபிஷேக் சவுகான் அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண் ஒரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.10.7 லட்சத்தை அபிஷேக் சவுகான கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பினார். பின்னர் கிரெடிட் கார்டில் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாயை 2 பரிவர்த்தனைகளாக அனுப்பி வைத்தார். இதனிடையே அபிஷேக் சவுகான் மேலும் ரூ.10 லட்சம் தருமாறு கேட்டார். இல்லையொன்றால் வீடியோவை வலைதளங்களில் வெளியிடப்படும். நீங்களும், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்படுவார்கள் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதனால் பயந்துபோன அந்த பெண் கடந்த 5-ந் தேதி அதிகாலை 1.15 மணியளவில் அழைப்பை துண்டித்துவிட்டு போலீசாரை அணுகினார்.

    இதையடுத்து போலீசார் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் கூரியர் மோசடி தொடர்பாக எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டாம், உடனடியாக சைபர் காவல்துறையை தொடர்பு கொள்ளவும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளில், போலி கூரியர் மோசடி மூலம் சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு நபரை அழைத்து தங்கள் பெயரில் ஒரு கூரியரில் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக தெரிவிக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் கூரியர் நிறுவன ஊழியர்களாக காட்டிக்கொண்டு பணமோசடி அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி பெண்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையன் உருவம் சிக்கியது
    • வேப்பமூடு வழியாக கொள்ளையன் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் செண்பகவல்லி. இவர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவரது அலுவலகம் நாகர்கோவில் பொதுப்பணித்துறை சாலையில் உள்ள முத்தமிழ் தெருவில் உள்ளது. தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வக்கீல் செண்பகவல்லி கோர்ட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று செண்பக வல்லி தனது இரு சக்கர வாகனத்தில் அலுவல கத்திற்கு சென்றார். பின்னர் வாகனத்தை அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு மற்றொரு பெண் வக்கீலின் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு சென்றார். அவர் மதியம் அலுவலகத்திற்கு திரும்பி வந்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

    இதையடுத்து பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையன் ஒருவன் வக்கீல் செண்பகவல்லியின் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்தமிழ் தெருவிலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேப்பமூடு வழியாக கொள்ளையன் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து கொள்ளையன் உருவத்தை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வடசேரி பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போராட்டம் நடத்திய 2 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரையை சேர்ந்தவர் வக்கீல் நந்தினி. இவர் சட்டக்கல்லூரியில் படிக்கும்போதே டாஸ்மாக் கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார். தொடர் போராட்டங்களால் போலீசாரால் நந்தினி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை மதுரை காந்தி மியூசியம் முன்பு நந்தினி தனது சகோதரி வக்கீல் நிரஞ்சனாவுடன் வந்தார். மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை ஏந்திய அவர்கள் திடீரென கோஷமிட்டு போ ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், தவறான பொருளாதார கொள்கையை கடைபி டிக்கும் மோடி அரசை கண்டித்தும் போராட்டம் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் கூடும் பொது இடத்தில் போ ராட்டம் நடத்த அனுமதி யில்லை. எனவே போ ராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர். ஆனால் நந்தினி, நிரஞ்சனா தொடர்ந்து கோஷமிட்டபடி போராடினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×