search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் கல்வி"

    • உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர் களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக தமிழக அரசால் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது.

    மேற்படி சிறப்பு விழிப் புணர்வு மற்றும் வழிகாட்டு தல் நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் தலை மையில் நடைபெறவுள்ளது.

    மேற்படி நிகழ்ச்சியில், மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கள் மற்றும் வழிகாட்டுதல் களை பல்வேறு துறை சார்ந்த அலுவவர்கள் வழங்க வுள்ளார்கள். மேலும், பொறி யியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது தொடர் பாகவும் கல்விக்கடன், கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். உயர்கல்வி பயிலுவதற்கு தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று உட்பட இணைய வழிச்சான்றுகள் அங்கேயே அமைக்கப் பட்டுள்ள இரு சேவை மையம் மூலமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
    • மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

    புதுடெல்லி :

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு படிப்பதற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்த ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்டு, போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

    முதலில் இது அவர்களுக்கு தெரியவில்லை. பின்னால்தான் தெரிய வந்தது.

    இந்த போலி சேர்க்கை கடிதங்களால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானது.

    அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ. என்று அழைக்கப்படுகிற கனடா எல்லை பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்தது. அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான நோட்டீசுகளும் வழங்கப்பட்டன.

    தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்த மாணவர்கள் அங்கே வீதியில் இறங்கி போராடினார்கள்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கனடா வெளியுறவு மந்திரியிடம் பிரச்சினையை எடுத்துச்சென்றார். மேலும் வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு), கடந்த ஏப்ரல் மாதம் கனடா சென்றிருந்தபோது இந்த விவகாரத்தை அந்த நாட்டின் அரசிடம் எழுப்பினார். இது தொடர்பாக டொராண்டாவில் உள்ள இந்திய தூதரகமும், பிரச்சினைக்குள்ளான இந்திய மாணவர்களைச் சந்தித்தது.

    இந்த பிரச்சினையில் தவறு மாணவர்கள் பக்கம் இல்லை என்பதால் மனிதநேய அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடா அரசிடம் மத்திய அரசு மீண்டும் மீண்டும் முறையிட்டது. கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.

    அதைத் தொடர்ந்து கனடா குடியேற்றத்துறை மந்திரி சியான் பிரேசியர், கனடாவில் நிச்சயமற்ற தன்மையை சந்தித்து வருகிற சர்வதேச மாணவர்களின் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு கனடா அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது என தெரிவித்தார். மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "கனடாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையில், கனடா அரசு மனிதநேய அணுகுமுறையை பின்பற்றியதற்கு காரணம், இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வந்த முயற்ஙசிகள்தான். இதை வரவேற்கிறோம்" என தெரிவித்தன.

    ×