என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளிகள் பலி"
- மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
- விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த இ புது கொத்துக்காடு பகுதி சேர்ந்தவர் விக்னேஷ் (20). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (47). கட்டிட தொழிலாளி.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்னேஷ், ராமன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வருவதால் இருவரும் நண்பர்களாக உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் விக்னேஷ், ராமன் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சென்று கொண்டு இருந்தனர். வண்டியை விக்னேஷ் ஒட்டி வர பின்னால் ராமன் அமர்ந்து வந்துள்ளார்.
கோபி-சக்தி மெயின் ரோடு, புதுக்கொத்துக்காடு பேக்கரி கடை அருகே சென்று கொண்டிருந்த போது தனக்கு முன்னால் சென்ற ஆம்னி வேனை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விக்னேஷ், ராமன் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் விக்னேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இருந்தார். ராமன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.
விபத்து பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியாக வந்த வாகன ஓட்டிகள் இது குறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவத்துக்கு விரைந்து வந்து ராமனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம், சந்திரபுரம், குருசிலாப்பட்டு அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் மேளம் அடிக்கும் தொழிலாளிகள் உள்ளனர்.
இந்த பகுதியை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு 10.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தபால்மேடு பகுதியில் மேளம் அடிக்க புறப்பட்டனர். 10 பேரும் மேள வாத்தியங்களுடன் ஒரே ஆட்டோவில் சென்றனர்.
கந்திலி சந்தைமேடு அருகே சென்ற போது ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோவில் நேருக்கு நேர் மோதியது.
இதில் திருப்பத்தூர் கசி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாரதி (வயது 20), சந்திரபுரத்தை சேர்ந்த கார்த்திக் (18), சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
7 பேர் படுகாயமடைந்தனர். கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டனர்.
இதில் ஈசன் (20) அரவிந்தன் (20) என்ற தொழிலாளர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அரவிந்தன் இன்று காலை இறந்தார்.
மேலும் சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், குரிசிலா பட்டு அஜித், பெரியகரம் ஈஸ்வரன், அச்சமங்கலம் சஞ்சய், புத்தகரம் வேலு ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்