search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை 2023"

    • ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
    • நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.

    ஆம்ஸ்டர்டாம்:

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற நெதர்லாந்து அணி தங்களது 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று அறிவித்துள்ளது. ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியில் அனுபவ வீரர்களான வான் டெர் மெர்வே மற்றும் அக்கர்மேன் இருவரும் இடம்பிடித்துள்ளனர். நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 6-ம் தேதி பாகிஸ்தான் உடன் மோத உள்ளது.

    நெதர்லாந்து அணி;- ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், ஷரிஸ் அஹ்மத் மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.

    • 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.
    • 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.

    இஷான்கிஷன் 5-வது வரிசையில் இடம்பெற்றால் 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- 

    4-வது வரிசையில் ஆடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் இடையே போட்டி இருக்கும். இஷான்கிஷன் பேட்ஸ்மேனாக களம் இறங்கினால் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார். ராகுலுக்கு சில கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது நல்லது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது.
    • தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது.

    இந்தியாவில் வருகிற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

    கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியானது.

    இந்நிலையில், உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட்டுக்கான ஆன்விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

    மேலும், பிசிசிஐ 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் அனைத்து சங்கங்களிடமிருந்தும் டிக்கெட் விலை நிர்ணயம் குறித்த ஆலோசனைகளை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    மேலும், இதுகுறித்து பிசிசஐ கெளரவ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், " அட்டவணை மாற்றத்திற்காக மூன்று உறுப்பினர்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது. ஆட்டங்களுக்கு இடையே ஆறு நாட்கள் இடைவெளி இருந்தால், அதை 4-5 நாட்களாக குறைக்க முயற்சிக்கிறோம். 3-4 நாட்களில் இது தெளிவாகிவிடும். ஐசிசியுடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் நடக்கும்.

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி தொடர்பாக, நான் முன்பு கூறியது போல், சில உறுப்பினர் வாரியங்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளன. விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற இருக்கிறது
    • உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்ப்பு

    இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்த இதற்கான வரைவு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் இந்தியா வந்து விளையாடுமா? என்பதே இன்னும் சந்தேகத்தில்தான் உள்ளது. குஜராத்தில் மோதுவது போன்ற அட்டவணைக்கு பாகிஸ்தான் தரப்பில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சேர்மன் நஜம் சேதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்தியா, பாகிஸ்தான் அணிகளை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் இந்தியா செல்ல வேண்டுமென்றாலும், இந்தியா பாகிஸ்தான் வர வேண்டும் என்றாலும் இரண்டு நாடுகளுக்குரிய அரசாங்கம்தான் முடிவு எடுக்க முடியும்.

    குஜராத் மைதானத்தில் மோத வேண்டுமா? வேண்டாமா? என்பதையும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். அகமதாபாத்தில் விளையாடுவது குறித்து எங்களிடம் கேள்வி கேட்க ஏதும் இல்லை.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் முதலில் பாகிஸ்தானில்தான் நடைபெறுவதாக இருந்தது. இந்தியா அங்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனால் 13 போட்டிகளில 4 மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. மற்ற 9 போட்டிகள் இலங்கையில் நடத்தப்படுகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    ஆசியகோப்பை போட்டி குறித்து கூறுகையில் ''இந்தியா பாகிஸ்தான் வர மறுத்ததால் தீர்வுகாண ஹைபிரிட் முறையில் இரு நாடுகளில் போட்டி நடத்தப்படுகிறது. பாகிஸ்தானில் மேலும் சில போட்டிகள் நடத்த வாய்ப்பு இருந்தது. ஆனால், இங்கு விளையாடிய பின், இலங்கை செல்வது கடினம் என்பதால் போட்டி குறைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

    ×