search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் கருவிகள்"

    • ரூ.41 கோடி மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல்துறை சார்பில் வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத் தின் கீழ் மானியவிலையில் வேளாண் எந்திரங்களை வழங்கி வருகிறது. இத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறுகியகாலத்தில் பயிர்சாகுபடி மேற்கொள்ள வும் வழி வகை செய்யப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வேளாண் நிதிநிலை 2023-24 அறிக்கையின்படி சிறு, குறு விவசாயிகள் சிறிய எந்திரங்கள் மானியத்தில் பெற்று பயன் பெறும் நோக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் பவர் டில்லர்கள், விசை களை யெடுப்பான் கருவி கள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டு 'உழவன் செயலி" மூலம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    தனிப்பட்ட விவசாயி களுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக பவர் டில்லர்களுக்கு 85 ஆயிரமும், விசைகளை யெடுப்பான்களுக்கு ரூ.65 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைசார்ந்த சிறுகுறுவிவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீதம் கூடுதல் மானியம் மாநில அரசுநிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

    அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 564 பயனாளிகளுக்கு ரூ.1081 லட்சம் மானியத்தில் ரூ.1613.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, பவர்டில்லர், களை எடுக்கும் கருவிகள் மானிய விலையில் (கிராம ஊராட்சிக்கு 2 அல்லது 3) வழங்க ஓதுக்கீடு பெறப்பட உள்ளது.
    • இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக, 2023-24-ம் ஆண்டிற்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட, கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு, பவர்டில்லர், களை எடுக்கும் கருவிகள் மானிய விலையில் (கிராம ஊராட்சிக்கு 2 அல்லது 3) வழங்க ஓதுக்கீடு பெறப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023-24-ம் ஆண்டிற்கான அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட 65 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

    விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலி மூலமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் இத்திட்டம் தொடர்பான முழுவிவ ரங்களைப் பெற, நாமக்கல் வேளாண்மைப் பொறி யியல் துறை வேளாண்மை விரிவாக்க மைய உதவி செயற்பொறியாளர், திருச்செங்கோடு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறி யாளர் ஆகியோரை அணு கலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

    ×