search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செபி"

    • மேற்கத்திய நாடுகளில் பங்கு சந்தையில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்
    • 2024 மார்ச் மாதம், புதிய நடைமுறை அமலுக்கு வரும் என மாதாபி தெரிவித்தார்

    இந்தியர்களின் வாழ்க்கை முறையில், பொருளாதார சேமிப்பு திட்டங்கள் அனைத்தும் குடும்ப நன்மை (family interest) மற்றும் தங்களின் வருங்கால சந்ததியினரின் நன்மையை (dynastic approach) உள்ளடக்கியது. எனவே, அவர்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, வங்கி வைப்பு தொகை, ஆயுள் காப்பீடு போன்றவற்றிலேயே தங்கள் சேமிப்புகளை முதலீடாக செய்து வருகிறார்கள்.

    இதற்கு நேர்மாறாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், கடந்த இரு தசாப்தங்களாக இந்தியர்களின் பங்கு சந்தை முதலீடு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் முழு ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம் பலரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியது. அப்போது வருவாய் ஈட்டும் வழியாக பங்கு சந்தை வர்த்தகத்தில் மக்கள் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்தனர்.

    தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இணையவழி பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவை இந்திய இளைஞர்களுக்கு பங்கு சந்தை ஆர்வத்தை மேலும் பெருக்கி வருகிறது.

    இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (Securities Exchange Bureau of India) முதலீட்டாளர்களுக்கு வழிமுறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பங்கு சந்தையில் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்கை விற்கிறார்; வேறொருவர் அதை வாங்குகிறார். விற்பவருக்கு பணமும், வாங்குபவருக்கு பங்கும் அவரவர் கணக்குகளில் சேர்வதற்கான நாள் கணக்கு "செட்டில்மென்ட் காலம்" என அழைக்கப்படும்.

    வர்த்தகம் (Trading) நடைபெற்ற 2 நாட்கள் கழித்து செட்டில்மென்ட் நடப்பது T+2 என்றும் 1 நாளில் நடப்பது T+1 என்றும் அழைக்கப்படும்.

    முன்பு 2 நாட்கள் என இருந்த செட்டில்மென்ட் காலம், 1 நாள் என குறைக்கப்பட்ட பிறகு ரூ.700 கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு பயன் கிடைத்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

    இந்நிலையில், செபி, செட்டில்மென்ட் நாட்களை மேலும் குறைக்க இருக்கிறது.

    இது குறித்து செபி தலைமை அதிகாரி மாதாபி புரி புக் (Madhabi Puri Buch) கூறியதாவது:

    முதலில் ஒரு-மணி நேர செட்டில்மென்ட், பிறகு சில நாட்களில் உடனடி செட்டில்மென்ட் என கொண்டு வர திட்டமிட்டிருந்தோம். முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு சந்தை தரகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அதன்படி ஒரு முதலீட்டாளர் பங்கை விற்கும் அன்றே அவருக்கு பணம் கிடைக்கவும், வாங்குபவருக்கு பங்கு கிடைக்கவும் வழிவகை செய்யும் அதே நாள் செட்டில்மென்ட் (same-day settlement) முயற்சியை முதலில் கொண்டு வந்துள்ளோம். அடுத்த வருட மார்ச் மாதத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கு இது செயல்பாட்டில் வரும்.

    இதனையடுத்து ஒரு-மணி நேர செட்டில்மென்ட் (one-hour settlement) அமல்படுத்தப்பட்டு, பிறகு படிப்படியாக உடனடி செட்டில்மென்ட் (instantaneous settlement) அமலுக்கு வரும். இதன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பணப்புழக்கம் மேலும் அதிகமாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சிறு முதலீட்டாளர்களை காட்டிலும் பெரும் தொகை மற்றும் மிக பெரும் தொகை முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் பயன் அளிக்கும் திட்டம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • வல்லுநர் குழு முதல் கட்ட விசாரணை அறிக்கையை மே மாதம் தாக்கல் செய்தது.
    • ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செபி தெரிவித்துள்ளது.

    அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும், அதானி நிறுவனம் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்திருந்தது.

    இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை மே மாதம் தாக்கல் செய்தது. அதில், அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடி வேலை செய்தற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தது. அதேசமயம், 2014-2019 காலகட்டத்தில் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செய்த பல திருத்தங்களை மேற்கோள் காட்டி, இது விசாரணை திறனைக் கட்டுப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், அதானி குழும நிறுவனங்கள் மீதான முறைகேடு புகார் குறித்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    அதில், வல்லுநர் குழுவின் அறிக்கையில் உள்ள கருத்துக்களை ஏற்கமுடியாது என்றும், 2019 ஆம் ஆண்டில் செய்த மாற்றங்கள், வெளிநாட்டு நிதிகளின் பயனாளிகளைக் கண்டறிவதை கடினமாக்கவில்லை என்றும் கூறி உள்ளது. ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.

    ×