என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மந்திரவாதி கொலை"
- வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.
- கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், கொய்யூர் அடுத்த புதரல்லா பஞ்சாயத்து உட்பட்ட நல்ல பள்ளியை சேர்ந்தவர் ரஷ்மோ (வயது 34). பெண் மந்திரவாதியான இவர் ஊருக்கு வெளியே குடிசை அமைத்து குறி சொல்வது, மாந்திரீகம், பில்லி சூனியம் செய்து வந்தார். வெளியூரை சேர்ந்தவர்கள் ரஸ்மோவிடம் குறி கேட்க வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கிராமத்தில் உள்ளவர்களை திடீரென மர்ம நோய் தாக்கியது. நோய் தாக்குதலில் ஒரு சிலர் இறந்தனர். அப்போது கிராம மக்கள் ரஷ்மோ மாந்திரீகம் செய்யும் சூனியக்காரி எனவும், அவர் மாந்திரீகம் செய்ததால் தான் ஊரில் நோய் பரவியதாக சிலர் வதந்தி கிளப்பி விட்டனர்.
இதனால் கிராமத்தில் உள்ள சிலர் ரஷ்மோவை கொலை செய்தால் தான் ஊரை விட்டு நோய் விலகும் என முடிவு செய்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரஷ்மோ குறி சொல்லும் குடிசைக்கு வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ரஷ்மோ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த லஷ்மணன் ராவ் மற்றும் சிந்தேரி அப்பாராவ் ஆகியோர் பெண் மந்திவாதி ரஷ்மோவை கொலை செய்து குடிசைக்கு வெளியே வீசியது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மந்திரவாதியின் பிணத்தை அஸ்மா வீட்டில் வீசிவிட்டு வந்தனர்.
- மந்திரவாதி கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் என்.சி.சி காலனியை சேர்ந்தவர் ஜாகீர் பாஷா. இவர் நெல்லூரில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் காவியா என்பவர் ஜாகீர் பாஷா மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இவருக்கு சாய்பிரியா என்ற மகள் உள்ளார்.
காவியாவை ஜாகீர் பாஷா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு காவியா தனது பெயரை சமீரா என மாற்றிக் கொண்டார்.
இந்த நிலையில் ஜாகீர் பாஷா அஸ்மா என்ற மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஜாகிர் பாஷா 2-வது மனைவியுடன் தங்கினார்.
தனது கணவரை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என காவியா திட்டம் தீட்டினார்.
அதன்படி கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த மணிகாந்த் (வயது 33) என்ற மந்திரவாதியை தொடர்பு கொண்டார். அப்போது அவர் வசிய மாந்திரீகம் செய்தால் உன்னுடைய கணவர் உன்னிடம் வந்துவிடுவார் என தெரிவித்தார்.
இதையடுத்து மணி காந்தை நெல்லூருக்கு வரவழைத்த சமீரா தனது வீட்டில் வைத்து பூஜைகள் செய்தார். பூஜைக்குப் பிறகும் தனது கணவர் தன்னிடம் வரவில்லை என்றால் என்ன செய்வது என்று தனது மகள் சாய்பிரியா மற்றும் தோழி கிருஷ்ணவேணி ஆகியயோருடம் ஆலோசனை நடத்தினார்.
மந்திரவாதியை கொலை செய்து 2-வது மனைவி வீட்டில் வீசிவிட்டால் கொலைக்கான பழி அவர் மீது விழுந்து விடும்.
அஸ்மா ஜெயிலுக்கு சென்று விட்டால் ஜாகிர் பாஷா தன்னுடன் நிரந்தரமாக தங்கி விடுவார் என எண்ணினர். அவர்கள் திட்டமிட்டபடி மந்திரவாதி மணிகாந்தை மீண்டும் வீட்டுக்கு வரவழைத்தனர்.
மந்திரவாதிக்கு பாலில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தனர். அவர் மயங்கியதும் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
மந்திரவாதியின் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டினர். பின்னர் யாருக்கும் தெரியாமல் மந்திரவாதியின் பிணத்தை அஸ்மா வீட்டில் வீசிவிட்டு வந்தனர்.
மறுநாள் காலை அஸ்மா வீட்டில் சாக்கு மூட்டையில் பிணம் கிடந்த தகவல் நெல்லூர் போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
மந்திரவாதி கொலை வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். இந்த நிலையில் சமீரா மீது சந்தேகம் ஏற்பட்டது.
போலீசார் சமீராவை பிடித்து விசாரணை நடத்தியதில் கணவரை தன் பக்கம் இழுக்க மகள் மற்றும் தோழியுடன் சேர்ந்து மந்திரவாதியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் சமீரா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மகள் சாய்பிரியா, தோழி கிருஷ்ணவேணி ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மந்திரவாதி சிக்கந்தர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
- மந்திரவாதி கொலை சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை திருமங்கலம் பாடிக்குப்பம் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தவர் சிக்கந்தர்.
38 வயதான இவர் வண்ணாரப்பேட்டையில் இருந்து குடிபெயர்ந்து பாடிகுப்பத்தில் தங்கி இருந்து மந்திரவாதியாக செயல்பட்டு வந்தார். பொதுமக்கள் பலர் தங்களது பல்வேறு பிரச்சினைகளுக்காக சிக்கந்தரை நாடி சென்று தாயத்து, கயிறு உள்ளிட்டவைகளை கட்டி வந்தனர். இந்த நிலையில் மந்திரவாதி சிக்கந்தர் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் நேற்று பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிபுகுமார் விரைந்து சென்று சிக்கந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தார். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாணையில் பரபரப்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிக்கந்தரின் நண்பர் ஒருவர் அடிக்கடி சிக்கந்தரை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு ஓரினச்சேர்க்கைக்கு சிக்கந்தரை நண்பர் அழைத்ததாகவும் தெரிகிறது.
இதற்கு சிக்கந்தர் மறுப்பு தெரிவித்து வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிக்கந்தரின் நண்பர் கஞ்சா போதைக்கு அடிமையானதும் அதன் பிறகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததும் தெரிய வந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த ரவுடி புருஷோத்தமனுடன் ஏற்பட்ட தொடர்புக்கு பிறகே நண்பர் இப்படி ஆகிவிட்டதாக சிக்கந்தர் கருதினார்.
குறிப்பிட்ட ரவுடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை மந்திரவாதி சிக்கந்தர் தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ரவுடியும், நண்பரும் சேர்ந்து சிக்கந்தரை கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள ரவுடியையும் அவரது கூட்டாளியான மந்திரவாதியின் நண்பரையும் போலீசார் தேடி வருகிறார்கள். மந்திரவாதி கொலை சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்